Coffee: காபி குடித்தால் தான் வேலையே ஓடுமா? ஆனா 2 முறைக்கு மேல காபி குடித்தால் பாதிப்பு! இத்தனை தீமைகள் இருக்கு
Coffee side effects: அடிக்கடி காபி குடிப்பதால் பல பாதிப்புகள் உடலுக்கு ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் காபி பிரியர்களுக்கு பஞ்சமே இல்லை. காபி குடிக்கும்போது உடலில் புத்துணர்வோடு இருப்பதாக தோன்றும். இந்த அற்புதமான பானத்தில் பல ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இது நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் சிலர் அளவுக்கு அதிகமாக காபி குடிக்க விரும்புகிறார்கள். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். நாம் ஏன் அதிகமாக காபி குடிக்கக்கூடாது என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
டிமென்ஷியா
ஒரு நாளைக்கு 5 அல்லது 6 கப் காபிக்கு மேல் குடிக்கும் நபர்களுக்கு டிமென்ஷியா என்ற நோய் ஏற்படும் அபாயம் அதிகம். இது ஒரு நினைவாற்றலை இழக்கும் மறதி நோயாகும். இந்த பாதிப்புள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
செரிமான பிரச்சனை
காபி குடிப்பதால் ஏற்படும் மோசமான விளைவு அஜீரணம் தான். அடிக்கடி காபி குடித்தால் நம் வயிறு பாதிப்புகளை சந்திக்கும். இதன் காரணமாக காஸ்ட்ரின் ஹார்மோன் வெளியிடப்படுகிறது. இது பெருங்குடலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. அதிகமாக காபி குடித்தால் அஜீரண பிரச்சனை வரலாம்.
தூக்கமின்மை
காபி குடிக்கும்போது புத்துணர்ச்சி உணர்வு வருவதால் தூக்கம், சோர்வு நீங்கிவிடும். இதன் காரணமாக, விழிப்புணர்வு அதிகரிக்கிறது, நீங்கள் அடிக்கடி காபி குடித்தால், காஃபின் காரணமாக, சரியான நேரத்தில் தூக்கம் வராது. மனக்குழப்பம் அதிகரிக்கும். தூங்கும் சுழற்றி பாதிக்கும்.
இதையும் படிங்க: அடிக்கடி ஸ்பிரிங் ஆனியன் சேர்த்துக்கோங்க! இந்த அற்புத இலை உங்க உடலை எப்படி மாற்றும் தெரியுமா? இவ்ளோ நன்மைகள்!
உயர் இரத்த அழுத்தம்
காபியில் அதிக அளவு காஃபின் காணப்படுகிறது. இதன் காரணமாக இரத்த அழுத்தம் வேகமாக அதிகரிக்கிறது. இது மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. உங்களுக்கு இதய நோய் இருந்தால் அல்லது உயர் இரத்த அழுத்தம் இருந்தால், காபியை மிகக் குறைந்த அளவில் குடிக்கவும். முடிந்தளவு மொத்தமாக தவிர்க்கவும்.
இதையும் படிங்க: பிகினி வேக்சிங் செய்யும்போது.. இளம்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் உரிந்த தோல்! ஸ்பாவுக்கு ரூ.70 ஆயிரம் அபராதம்