பிகினி வேக்சிங் செய்யும்போது.. இளம்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் உரிந்த தோல்! ஸ்பாவுக்கு ரூ.70 ஆயிரம் அபராதம்
பிரேசிலிய பிகினி வேக்சிங் (brazilian bikini waxing) செய்த போது இளம்பெண்ணின் பிறப்புறுப்பில் தோல் உரிந்ததாக கூறப்படுகிறது.
பெண்கள் ஸ்பாவுக்கு அழகுபடுத்துவதற்காக மட்டும் செல்வதில்லை. தேவையற்ற இடத்தில் இருக்கும் முடிகளை அகற்றவும் தான் செல்கிறார்கள். இப்போது பிகினி வேக்சிங் டிரெண்ட் ஆகி வருகிறது. பிறப்புறுப்பில் முடி ஏதும் இல்லாமல் இருப்பதை தான் பிகினி வேக்சிங் என்கிறார்கள்.
மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனியார் ஸ்பா ஒன்றிற்கு பிகினி வேக்சிங் செய்ய சென்றுள்ளார். அந்த ஸ்பாவில் ரூ 4,500 மதிப்புள்ள பிரீமியம் பிரேசிலியன் வேக்சிங்கை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் வேக்சிங் செய்யும்போது கொஞ்சம் விபரீதமாக அந்த பெண்ணின் பிறப்புறுப்பு தோல் மீது பாதிப்பு ஏற்பட்டு சேதமாகியுள்ளது. வேக்சிங் செய்து முடித்த பின்னர் துணியால் துடைக்கும்போது அவருக்கு அந்த இடத்தில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில் வேதனையடைந்த அந்த பெண் ஸ்பா மீது வழக்கு தொடர்ந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் இப்போது தீர்ப்பு வந்துள்ளது. இந்தூர் நீதிமன்றம் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று ஸ்பாவுக்கு இழப்பீடு வழங்கக் கூறி உத்தரவை பிறப்பித்தது. அதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.70,000 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
அந்த பெண் அடைந்த உடல் பாதிப்புக்கு ரூ.30,000, மனவேதனைக்கு ரூ.20,000 பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் செலவுக்காக மேலும் 20,000 ரூபாய் என ரூபாய் 70 ஆயிரம் ஒரு மாதத்திற்குள் வழங்குமாறு நீதிமன்றம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: போர்ன்விட்டாவில் இருக்கும் பிரச்சனை! சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்..! இப்போ என்ன சொல்றாங்க தெரியுமா?
அந்த பெண் வேக்சிங் செய்யும்போது, தன் தோலில் தடவும் மெழுகு சூடாக இருப்பதாகவும், தனக்கு எரிச்சல் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் ஸ்பாவில் வேலை செய்வர்கள் அதை கருத்தில் கொள்ளாமல் மேற்கொண்டு வேக்சிங் செய்துள்ளனர். அந்த எரிச்சலை இயல்பானது என்றும் கூறியுள்ளனர். இறுதியில் அந்த பெண்ணின் பிறப்புறுப்பு தோல் சேதமாகியுள்ளது. ஆகவே தான் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடிக்கடி ஸ்பிரிங் ஆனியன் சேர்த்துக்கோங்க! இந்த அற்புத இலை உங்க உடலை எப்படி மாற்றும் தெரியுமா? இவ்ளோ நன்மைகள்!