தேங்காய் நார் வைத்து இவ்வளவு விஷயங்கள் செய்யலாம்! இனிமேல் மறந்தும் தூக்கி போடாதீங்க! செம்ம டிப்ஸ்!!
தேங்காய் மட்டுமல்ல, தேங்காய் நாரும் ரொம்ப உபயோகமானது. அதனை எவ்வாறு பயன்படுத்தினால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பெரும்பாலான வீடுகளில் தேங்காய் சமையலுக்கு பயன்படுத்துவார்கள். முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு தேங்காய் சிறந்தது. ஆனால் தேங்காயை எடுத்துவிட்டு அதன் நாரை எல்லோரும் தூக்கி எறிந்துவிடுவார்கள். அதை உபயோகமற்றதாக கருதுவதே அதற்கு காரணம். பொதுவாக தேங்காய் நாரை தூக்கி எறியக்கூடாது. அதில் அவ்வளவு நன்மைகள் இருக்கின்றன. அதை எப்படி பயன்படுத்தலாம் என்று இங்கு காணலாம்.
வீக்கம் நீங்கும்!!
பெரும்பாலும் காயம் ஏற்பட்டால் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவோம். காயத்திற்குப் பிறகு வீங்கிய இடத்தில் தேங்காய் எண்ணெயையும் தடவுங்கள். தேங்காய் நாரை பொடி செய்து, அதனுடன் மஞ்சளைக் கலந்து, வீக்கமுள்ள இடத்தில் போட்டால் வீக்கம் குறையும்.
பற்கள் ஜொலிக்கும்!!
மஞ்சள் நிற பற்களை வெள்ளையாக மாற்ற தேங்காய் நார் உதவும். தேங்காய் நாரை எரித்து அதை பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியில் சோடாவைக் கலந்து, பற்களில் லேசாக தேய்க்கவும். பற்கள் வெள்ளை நிறமாக மாறும்.
கருமையான முடி!!
தேங்காய் நார் கொண்டு வெள்ளை முடியை கூட கருப்பாக்க முடியும். தேங்காய் நாரை ஒரு பாத்திரத்தில் போட்டு சூடேற்றி பின்னர் அதை அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள். இந்த பொடியை தேங்காய் எண்ணெயுடன் கலந்தால் நல்ல பலனளிக்கும். இதை ஹேர் பேக் போல பயன்படுத்தலாம். தேங்காய் நார் பொடியை எண்ணெயில் கலந்து தலையில் தடவி 1 மணி நேரம் ஊறவிட வேண்டும். பின்னர் தலையை அலசி கொள்ளலாம். இப்படி செய்து வந்தால் சில நாள்களில் முடி கருப்பாக மாறும்.
இதையும் படிங்க: அடிக்கடி ஸ்பிரிங் ஆனியன் சேர்த்துக்கோங்க! இந்த அற்புத இலை உங்க உடலை எப்படி மாற்றும் தெரியுமா? இவ்ளோ நன்மைகள்!
கை, கால் கருமை நீங்க!
ஒரு பாத்திரத்தில் வெந்நீர் கை வைக்கும் அளவு சூட்டில் தயார் செய்யுங்கள். அதில் கொஞ்சம் தேன் கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரை தேங்காய் நாரில் எடுத்து கருமையான முழங்கை, கால் ஆகிய இடங்களில் கொஞ்சம் ஸ்கிரப் செய்து கொள்ளுங்கள். லேசாக செய்தால் போதும். நம்முடைய சருமம் மென்மையானது அதனால் அதில் வேகமாகவோ வலி ஏற்படும் அளவிலோ ஸ்கிரப் செய்வது தவறு. இதை செய்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.
மாதவிடாய் வலி
தேங்காய் நார் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. தேங்காய் நாரை எரித்து நன்றாக பொடி செய்து கொள்ளவும். தண்ணீர் சேர்த்து குடித்தால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இதையும் படிங்க: Coffee: காபி குடித்தால் தான் வேலையே ஓடுமா? ஆனா 2 முறைக்கு மேல காபி குடித்தால் பாதிப்பு! இத்தனை தீமைகள் இருக்கு