- Home
- உடல்நலம்
- உணவு
- Bread Dosa: வீட்டில் தோசை மாவு இல்லயா? பிரெட் இருந்தா போதும்... 10 நிமிடத்தில் கிரிஸ்பியான தோசை ரெடி!
Bread Dosa: வீட்டில் தோசை மாவு இல்லயா? பிரெட் இருந்தா போதும்... 10 நிமிடத்தில் கிரிஸ்பியான தோசை ரெடி!
தோசை மாவு இல்லாத நேரத்திலும் 10 நிமிடங்களில் செய்யக்கூடிய அருமையான காலை உணவு இந்த இன்ஸ்டன்ட் பிரெட் தோசை. கார சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்துச் சாப்பிட நாவில் கரையும் சுவையைத் தரும்.

பிரெட் இருந்தா சட்டுனு தோசை சுடலாம்!
உலகில் எங்கு சென்றாலும் நமது தென்னிந்திய உணவுகளுக்கு என்று தனி இடம் உண்டு. குறிப்பாக அரிசி மற்றும் உளுத்தம்பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் மென்மையான இட்லி, மிருதுவான வடை, தோசையுடன் தேங்காய் சட்னி மற்றும் காய்கறி சாம்பார் ஆகியவை உலகம் முழுவதும் பிரபலமானவை.
இவற்றில் தோசை மிகவும் பிரபலமானது. ஏனெனில் இதில் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் உள்ளது. இது சுவையானது மற்றும் செரிமான அமைப்புக்கு நல்லது. ஊட்டச்சத்துக்களும் புரதச்சத்தும் நிறைந்த தோசையை, வேறு பல வழிகளிலும் மிகவும் சுவையாகச் செய்யலாம். வீட்டில் எளிதாகச் செய்யக்கூடிய இந்த பிரெட் தோசை ஒரு சிறந்த ரெசிபியாகும். அதை எப்படி செய்வது என்று பார்போம்.
தேவையான பொருட்கள் என்னென்ன?
பிரெட் - 4 முதல் 5 துண்டுகள்
ரவை - 1/2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
தயிர் - 1/2 கப்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவைக்கேற்ப
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை - 1
முதலில் பிரெட் துண்டுகளை எடுத்து அதன் நான்கு பக்கங்களையும் வெட்டி எடுக்கவும். தற்போது பிரெட் துண்டுகளை உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு அதில் ரவை, அரிசி மாவு, தயிர், பேக்கிங் சோடா, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற விடவும். பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
செய்முறை - 2
தற்போது அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும் சிறிது தண்ணீர் தெளித்து, டிஷ்யூ பேப்பரால் துடைக்கவும். பிறகு அதில் தோசை மாவை ஊற்றி மெல்லியதாகச் சுட்டு, அதைச் சுற்றிலும் எண்ணெய் ஊற்றி தோசையை மூடி போட்டு வேகவிடவும். தோசை மொறுமொறுப்பாக வந்ததும் எடுத்து வீட்டில் உள்ளவர்களுக்குச் சுடச்சுட பரிமாறவும். இந்தத் தோசையை கார சட்னி, சாம்பார் அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.

