MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Karuppu Ulundhu Kanji : பாட்டி காலத்து கருப்பு உளுந்து கஞ்சி.. வீட்டிலேயே செய்வது எப்படி தெரியுமா?

Karuppu Ulundhu Kanji : பாட்டி காலத்து கருப்பு உளுந்து கஞ்சி.. வீட்டிலேயே செய்வது எப்படி தெரியுமா?

Karuppu Ulundhu Kanji : கருப்பு உளுந்து கஞ்சி செய்வது எப்படி? கருப்பு உளுந்து, அரிசி, சுக்கு, ஏலக்காய் சேர்த்து சுவையான கஞ்சி தயாரிக்கும் முறை, தேவையான பொருட்கள் மற்றும் எளிய செய்முறையைத் தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Vishnupriya
Published : Oct 10 2026, 02:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
கருப்பு உளுந்து கஞ்சி
Image Credit : Gemini AI

கருப்பு உளுந்து கஞ்சி

காலம் காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த உணவுப் பழக்கங்களில் கருப்பு உளுந்துக்கு முக்கிய இடம் உண்டு. கருப்பு உளுந்துடன் வெல்லம், தேங்காய், ஏலக்காய் சேர்த்து மணக்க மணக்கக் கஞ்சி செய்து சாப்பிட்டால், அதன் சுவையே தனிதான்.

கடைகளில் கிடைக்கும் பாக்கெட் உணவுகளைத் தேடாமல், வீட்டிலேயே எளிமையான முறையில் இந்தப் பாரம்பரிய உணவைத் தயாரிக்கலாம். காலை உணவாகவோ அல்லது மாலை நேரத்தில் சூடாகவோ பருக ஏற்ற கருப்பு உளுந்து கஞ்சியை நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். இதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

கருப்பு உளுந்து கஞ்சி செய்யத் தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து - 1 கப்

வெல்லம் - 3\4 கப் (இனிப்புக்கு ஏற்ப)

துருவிய தேங்காய் - 1\2 கப்

ஏலக்காய்த் தூள் - 1\4 டீஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
கருப்பு உளுந்து கஞ்சி செய்முறை 1- படி 1
Image Credit : Gemini AI

கருப்பு உளுந்து கஞ்சி செய்முறை 1- படி 1

கருப்பு உளுந்தை நன்றாகக் கழுவி, சுமார் 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

310
படி 2
Image Credit : Gemini AI

படி 2

உளுந்து மாவை வேகவைக்கவும்

அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அரைத்து வைத்துள்ள உளுந்தைச் சேர்க்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வேகவைக்கவும். அடிபிடிக்காமல் இருக்கத் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். உளுந்து நன்றாக வெந்து கெட்டியாகத் தொடங்கும்போது, தேவைக்கேற்ப சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துக் கிளறவும்.

410
படி 3
Image Credit : Gemini AI

படி 3

பின்னர் வெல்லத்தைச் சேர்த்து அது முழுமையாகக் கரையும் வரை நன்றாகக் கலக்கவும். வெல்லம் நன்றாகக் கலந்ததும் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்க்கவும். அனைத்தையும் நன்றாகக் கிளறி, சில நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

சுவையான கஞ்சி தயார்

கஞ்சி தேவையான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும். சூடாகப் பரிமாறினால் கருப்பு உளுந்து, வெல்லம், தேங்காய், ஏலக்காய் ஆகியவற்றின் மணமும் சுவையும் நன்றாக இருக்கும்.

510
செய்முறை 2 - படி 1
Image Credit : Gemini AI

செய்முறை 2 - படி 1

உளுந்தை வறுத்து அரைத்தும் கஞ்சி செய்யலாம்

கருப்பு உளுந்தை வறுத்தல்

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் கருப்பு உளுந்தைச் சேர்த்து மிதமான தீயில் சுமார் 5 நிமிடங்கள் வறுக்கவும். உளுந்தில் இருந்து நல்ல மணம் வரும் வரை வறுத்தால் போதும். கருகிவிடாமல் அவ்வப்போது கிளறிக்கொண்டே இருக்கவும். பின்னர் உளுந்தைத் தனியாக எடுத்து ஆற வைக்கவும்.

அதே கடாயில் சிறிதளவு அரிசியைச் சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். அரிசியும் நன்றாக ஆறிய பிறகு அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம்.

610
படி 2
Image Credit : Gemini AI

படி 2

கஞ்சிப் பொடி தயாரித்தல்

ஆறிய கருப்பு உளுந்து, வறுத்த அரிசி, ஏலக்காய் மற்றும் சுக்கு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாகப் பொடித்துக்கொள்ளவும். இந்தக் கஞ்சிப் பொடியைச் சுத்தமான, ஈரப்பதம் இல்லாத காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்

710
படி 3
Image Credit : Gemini AI

படி 3

கஞ்சிப் பொடியைக் கரைத்தல்

இப்போது ஒரு பாத்திரத்தில் 4 டேபிள் ஸ்பூன் கஞ்சிப் பொடியை எடுத்துக்கொள்ளவும். அதில் 2 கிளாஸ் தண்ணீரைச் சிறிது சிறிதாக ஊற்றி நன்றாகக் கலக்கவும். பொடியில் கட்டிகள் ஏற்படாமல் கரைப்பது மிகவும் முக்கியம். இதனால் கஞ்சி சீரான பதத்தில் கிடைக்கும்.

கரைத்த கஞ்சிக் கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும். கஞ்சி அடிபிடிக்காமல் இருக்கத் தொடர்ந்து கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்கவும்.

810
படி 4
Image Credit : Gemini AI

படி 4

வெல்லம் சேர்க்கவும்

சுமார் 8 முதல் 10 நிமிடங்கள் வரை வேகவைக்கலாம். இந்த நேரத்தில் கஞ்சி படிப்படியாகக் கெட்டியாகத் தொடங்கும். பச்சை மாவின் வாசனை நீங்கி, நன்றாக வெந்து மென்மையான பதம் வந்ததும் , தேவையான அளவு வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும். இனிப்பின் அளவு அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. வெல்லம் முழுமையாகக் கரையும் வரை நன்றாகக் கலக்கவும்.

910
படி 5
Image Credit : Gemini AI

படி 5

இறுதியாகத் தேங்காய்த் துருவல் அல்லது தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பை அணைக்கவும். தேங்காய்ப்பால் சேர்ப்பதால் கஞ்சிக்கு கூடுதல் சுவையும் மணமும் கிடைக்கும்.

1010
படி 6
Image Credit : Gemini AI

படி 6

சுவையான கருப்பு உளுந்து கஞ்சி தயார். இதனைச் சூடாகப் பரிமாறலாம். காலை உணவாகவோ அல்லது மாலை நேரத்தில் சிற்றுண்டிககுப் பதிலாகவோ எடுத்துக்கொள்ளலாம்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Thanni Saaru : அரிசி கழுவிய நீரை இனி கீழே ஊற்றாதீங்க..தஞ்சாவூர் ஸ்டைல் தண்ணி சாறு செய்து பாருங்க!
Recommended image2
Paruthi Paal : தேனி ஸ்பெஷல் பருத்திப்பால் ருசித்திருக்கிறீர்களா? வீட்டிலேயே சுவையாகத் தயாரிக்கலாம்!
Recommended image3
Corn Idli : சோள இட்லி சாப்பிட்டிருக்கீங்களா? வாழை இலையின் மணத்துடன் அசத்தும் வித்தியாசமான சுவை!
Related Stories
Recommended image1
Paruthi Paal : தேனி ஸ்பெஷல் பருத்திப்பால் ருசித்திருக்கிறீர்களா? வீட்டிலேயே சுவையாகத் தயாரிக்கலாம்!
Recommended image2
Thanni Saaru : அரிசி கழுவிய நீரை இனி கீழே ஊற்றாதீங்க..தஞ்சாவூர் ஸ்டைல் தண்ணி சாறு செய்து பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved