MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • மதுரை ஸ்டைலில் பஞ்சு போன்ற மல்லிகைப்பூ இட்லி வேண்டுமா? வீட்டில் இந்த முறையை ட்ரை பண்ணுங்க!

மதுரை ஸ்டைலில் பஞ்சு போன்ற மல்லிகைப்பூ இட்லி வேண்டுமா? வீட்டில் இந்த முறையை ட்ரை பண்ணுங்க!

Madurai Style Malligipoo Idli: நமது தமிழ்நாட்டின் பேவரிட் பிரேக்ஃபாஸ்ட் இட்லி. அதுவும் மதுரை மல்லிகைப்பூ இட்லிக்கு உணவுப்பிரியர்கள் அதிகம். வீட்டில் மதுரை ஸ்டைலில் பஞ்சு போன்ற மல்லிகைப்பூ இட்லி செய்வது எப்படி? என விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 10 2026, 03:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மதுரை ஸ்டைலில் பஞ்சு போன்ற மல்லிகைப்பூ இட்லி
Image Credit : AI

மதுரை ஸ்டைலில் பஞ்சு போன்ற மல்லிகைப்பூ இட்லி

காலையில் நாம் சாப்பிடும் சாப்பாடு சத்தாக இருந்தால்தான், நாள் முழுக்க சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும். செரிமானத்துக்கு எளிதான உணவுகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். ஹெவியான சாப்பாடு செரிக்க ரொம்ப நேரம் ஆகும். நீங்கள் காலையில் ரொம்ப லைட்டான, அதே சமயம் சத்தான சாப்பாடு சாப்பிட நினைத்தால் இட்லிதான் பெஸ்ட் சாய்ஸ். பெரியவர்கள் மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் இது ரொம்பப் பிடிக்கும். எண்ணெயே இல்லாமல் ஆவியில் வேகவைத்து எடுப்பதால் இது உடம்புக்கு ரொம்ப நல்லது.

நமது தமிழ்நாட்டின் இந்தப் பாரம்பரிய உணவு, இப்போது உலகம் முழுக்க ஃபேமஸ் ஆகிவிட்டது. அதுவும் கோவில் நகரமான மதுரை இட்லிக்கும் பேமஸ். மதுரையில் பஞ்சு போன்ற மல்லிகைப்பூ இட்லியுடன் சட்னி வைத்து சாப்பிடும்போது கிடைக்கும் சுகமே தனி தான். வீட்டில்யே மதுரை ஸ்டைலில் பஞ்சு போன்ற மல்லிகைப்பூ இட்லி செய்யலாம். அது குறித்து விரிவாக பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மதுரை ஸ்டைலில் சாப்ட்டான இட்லி செய்வது எப்படி?
Image Credit : gemini AI

மதுரை ஸ்டைலில் சாப்ட்டான இட்லி செய்வது எப்படி?

நல்லா கழுவிய உளுத்தம் பருப்பு - 1 கப்

சுத்தமாக கழுவிய அரிசி - 3 கப்

சமையல் சோடா - அரை டீஸ்பூன்

இட்லி தட்டில் தடவ கொஞ்சமாக எண்ணெய்

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு தண்ணீர்

34
7 மணி நேரம் ஊற வையுங்கள்
Image Credit : Getty

7 மணி நேரம் ஊற வையுங்கள்

அரிசி, உளுந்தை குறைந்தபட்சம் 6 முதல் 7 மணி நேரம் அல்லது நைட்டு முழுக்க ஊறவையுங்கள். அப்போதான் மாவு நன்றாகப் புளித்து, இட்லி சாஃப்ட்டாக வரும். ஊறவெச்ச அரிசி, உளுந்தை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைச்ச மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றி நன்றாகக் கலந்து விடுங்கள். இதுகூடவே தேவையான அளவு உப்பு, கொஞ்சமாக சமையல் சோடா சேர்த்து மூடி வையுங்கள். சரியாக 8 முதல் 10 மணி நேரம் மாவைப் புளிக்க விடுங்கள். மாவு நன்றாக உப்பி வரும்.

மாவு அரைத்த உடனே உப்பு சேர்ப்பதால, மாவு சரியான பதத்தில் புளிச்சு வரும். அரைச்ச புதுசில் மாவு தண்ணியாக இருப்பதால், உப்பு எல்லா இடத்திலும் ஈஸியாக கலந்துவிடும். மாவு புளிக்கும்போதே உப்பும் சேர்வதால் இட்லியோட டேஸ்ட் சூப்பராக இருக்கும்.

44
அரைச்ச உடனே உப்பு சேர்ப்பதுதான் பெஸ்ட்
Image Credit : instagram

அரைச்ச உடனே உப்பு சேர்ப்பதுதான் பெஸ்ட்

ஒருவேளை நீங்கள் இருக்கும் இடத்தில் வெயில் ரொம்ப அதிகமாக இருந்தால், அரைச்ச உடனே உப்பு போட்டால் மாவு சீக்கிரம் புளிச்சிடும். அந்த மாதிரி நேரத்துல மட்டும், இட்லி ஊத்துறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். மற்றபடி அரைச்ச உடனே உப்பு சேர்ப்பதுதான் பெஸ்ட்.

இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதித்ததும் இட்லி தட்டுகளை உள்ளே வையுங்கள். சரியாக 8 முதல் 10 நிமிஷம் ஆவியில் வேகவிடுங்கள். வெந்த உடனே எடுக்காமல், கொஞ்சம் சூடு ஆறுனதும் ஒரு ஸ்பூன் வச்சு இட்லியை எடுங்கள். இட்லி உடையாமல் சூப்பராக வரும். இத்துடன் சுடச்சுட சாம்பார், தேங்காய் சட்னி வச்சு சாப்பிட்டு பாருங்கள். அப்புறம் சொல்லுங்க‌ அதன் சுவையை.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
உணவு
பாத பராமரிப்பு குறிப்புகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu Ulundhu Kanji : பாட்டி காலத்து கருப்பு உளுந்து கஞ்சி.. வீட்டிலேயே செய்வது எப்படி தெரியுமா?
Recommended image2
Thanni Saaru : அரிசி கழுவிய நீரை இனி கீழே ஊற்றாதீங்க..தஞ்சாவூர் ஸ்டைல் தண்ணி சாறு செய்து பாருங்க!
Recommended image3
Paruthi Paal : தேனி ஸ்பெஷல் பருத்திப்பால் ருசித்திருக்கிறீர்களா? வீட்டிலேயே சுவையாகத் தயாரிக்கலாம்!
Related Stories
Recommended image1
Corn Idli : சோள இட்லி சாப்பிட்டிருக்கீங்களா? வாழை இலையின் மணத்துடன் அசத்தும் வித்தியாசமான சுவை!
Recommended image2
Bread Idli : அரிசியும் வேண்டாம்.. உளுந்தும் வேண்டாம்! பிரெட்டில் இட்லி செய்வது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved