Healthy food: பீன்ஸ் முதல் பெர்ரி வரை..மார்பக புற்றுநோயை தடுக்க உதவும் டாப் 7 உணவுகளின் லிஸ்ட் இதோ..!
Breast Cancer Awareness Month 2022: இந்த மார்பக புற்றுநோய விழிப்புணர்வு மாதத்தில், நாம் மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் சில உணவுகள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.
மார்பகப் புற்றுநோயானது பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோயாகும். மார்பகப் புற்றுநோய் பொறுத்தவரை, இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாதிக்கப்படுகிறார் என்கின்றது ஆய்வு முடிவுகள். உடல் பருமன், அதிகப்படியான மது அருந்துதல், புகைபிடித்தல், உணவு முறைகள், உடலில் கொழுப்பு அதிகரித்தல், உடலுழைப்பு இல்லாமல் இருத்தல் போன்றவை மார்பகப் புற்றுநோயின் ஆகும். ஆனால், இவர்களுக்குப் புற்றுநோய் வந்தே தீரும் என்பதில்லை. டிஎன்ஏ பாதிப்பு மற்றும் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களாலும் புற்றுநோய் வரக்கூடும்.
breast cancer
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டின் இறுதியில், கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 7.8 மில்லியன் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. எல்லாப் புற்றுநோயும் மரணத்தை ஏற்படுத்துவதில்லை. மார்பகப் புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், அதிலிருந்து முழுமையாக மீண்டுவிடலாம். இவற்றை அறுவை சிகிச்சை சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் சில உணவுகள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.
Vegetables
பச்சை காய்கறிகள்
அனைத்து வகையான பச்சை நிற காய்கறிகளிலும், புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்க உதவுகிறது.
முட்டைக்கோஸ் முதல் கீரை வரை உள்ள பச்சைக் காய்கறிகள் மார்பகப் புற்றுநோயைத் தடுக்க உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இதைத் தவிர்த்து, பொதுவாக கேரட், பீட்ரூட், முள்ளங்கி போன்ற காய்களை சமைத்து அல்லது பச்சையாக சாப்பிடும் பழக்கம் நல்லது.
2. பெர்ரி
புளு பெர்ரி, ஸ்ட்ரா பெர்ரி உட்பட பெர்ரி வகை அனைத்தும் புற்றுநோயை கட்டுப்படுத்துகின்றன. குறிப்பாக, பெர்ரிகளில் இருக்கும் ஃபிளாவனாய்டுகள் போன்ற அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை உடல் செல்களை சேதமடையாமல் பாதுகாக்கவும், மார்பக புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கவும் உதவுகிறது. இந்த சோதனை முதலில் விலங்கிணங்களுக்கு செய்யப்பட்டது. அதன்மூலம் புற்றுநோய்யை கட்டுப்படுத்தும் சக்தி பெர்ரி பழங்களுக்கு இருப்பதாக கண்டறியப்பட்டது.
பூண்டு
பூண்டைத் தொடர்ந்து உட்கொள்வது மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில், பூண்டில் இருக்கும் ஃபிளாவனாய்டுகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பீன்ஸ்
பீன்ஸ் அதிக நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பீன்ஸில் உள்ள அதிக நார்ச்சத்து புற்று நோய்களுக்கு எதிராக போராடுகிறது. மேலும் படிக்க...Mouth Ulcers: வாய்புண் தொல்லையால் அவதியா..? உடனடி தீர்வுக்கு இந்த 5 வீட்டு மருந்துகள் கை கொடுக்கும்..!
5. சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களை அதிகம் உண்ணும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 10 சதவீதம் குறைவாக இருப்பதாக மார்பகப் புற்றுநோய் இதழில் 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த, திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை மற்றும் ஸ்ட்ராபெரி போன்ற சிட்ரஸ் பழங்கள் மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாக்க சிறந்த உணவுப் பொருட்களாக செயல்படுகின்றன
6. கொழுப்பு நிறைந்த மீன்
சால்மன், ஹாடாக், காட், மத்தி மற்றும் ஹாலிபுட் போன்ற மீன்கள் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களுக்கு மார்பக புற்று நோயை பெருமளவில் தடுக்கப்படுகிறது. ஏனெனில், மார்பக புற்றுநோயை தடுக்க உதவும் ஒமேகா-3 கொழுப்புகள், செலினியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை நிறைந்துள்ளது.
7. வால்நட்ஸ்
வால்நட்ஸ், வால்நட் எண்ணெய் மற்றும் வால்நட் நுண்ணூட்டச்சத்து நுகர்வு ஆகியவை மார்பகப் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும். வால்நட்ஸ் நார்ச்சத்து, வைட்டமின் B6 மற்றும் துத்தநாகத்தின் அற்புதமான மூலமாகும்.