முதுகு வலி, மூச்சுத் திணறல் கூட புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்- முழு விபரம் உள்ளே..!!

அமர்ந்த நிலையில் உட்கார்ந்து வேலை செய்யக்கூடிய பலருக்கும் முதுகுவலி ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. முதுகு தண்டுவடத்தில் தொடர் அழுத்தம் அல்லது தசைபிடிப்பு காரணமாக முதுகில் வேதனை உருவாகிறது. தொடர்ந்து ஓய்வில் இருப்பது, அவ்வப்போது ஒத்தடம் வைப்பது அற்றும் குனிந்து நிமிர்ந்து பயிற்சி செய்வது போன்றவை விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வை தரும். இது சாதாரண பிரச்னையாக இருக்கும் வரையில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் இதுபோன்ற பிரச்னைகள் புற்றுநோய் பாதிப்பின் காரணமாகவும் ஏற்படுகின்றன. அதனால் தொடர்ந்து பல நாட்களுக்கு பிறகு முதுகுவலி தொடரும் பட்சத்தில் அலட்சியம் வேண்டாம்
 

back pain is also major symptom for these 3 cancer diseases

சிறுநீர்ப்பை புற்றுநோய்

அடிவயிற்றில் சிறுநீர் சேகரிக்கும் உறுப்பு தான் சிறுநீர்ப்பை. உங்களுடைய கீழ் முதுகில் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக வலி இருந்தால், அது சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். பொதுவாகவே சிறுநீர்ப்பையில் ஆழமான திசுக்களில் கட்டிகள் வளர்வது உண்டு. ஆனால் கீழ் முதுகில் வலி உருவானால், அது சிறுநீர்ப்பை புற்றிநோயின் முத்திய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இதனுடன் மேலும் சில வேறுபாடான அறிகுறிகள் உடலில் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

முதுகெலும்பு புற்றுநோய்

முதுகுத் தண்டுவடத்தில் புற்றுநோய் இருந்தாலும் முதுவலி ஏற்படும். ஆனால் முதுகுத் தண்டில் புற்றுநோய் ஏற்படுவது அரிதானது. முதுகுத்தண்டில் தீங்கற்ற கட்டி உருவானாலும், அது வலியை ஏற்படுத்தும். இது மற்ற உடல் பாகங்களுக்கு பரவாது. சிறுநீர்ப்பை புற்றுநோயைப் போலன்றி, முதுகுவலி என்பது முதுகெலும்பு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாகும். காலப்போக்கில் இந்த வலி தீவிரமடைந்து உங்களுடைய இடுப்பு, கால்கள், பாதங்கள் அல்லது கைகள் போன்ற உடலின் மற்ற பாகங்களுக்கும் வலி பரவும். அது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்.

back pain is also major symptom for these 3 cancer diseases

நுரையீறல் புற்றுநோய்

இந்தியாவில் பொதுவான புற்றுநோயாக இருப்பது நுரையீறல் புற்றுநோய். இதற்கான முக்கிய அறிகுறியாக முதுகுவலி உள்ளது. இதனுடன் வேறு ஏதேனும் அறிகுறிகள் நீண்ட நாட்களாக இருக்கும் பட்சத்தில், உடனடியாக மருத்துவரை நாடுவது மிகவும் முக்கியம். சிறிய செல் புற்றுநோய் மற்றும் சிறிய செல் அல்லாத புற்றுநோய் என நுரையீறல் புற்றுநோயில் இரண்டு வகை உண்டு. சிறிய-செல் அல்லாத நுரையீரல் புற்றுநோய், புற்றுநோயின் மிகவும் பொதுவான வடிவமாகும். இதை சிறிய-செல் நுரையீரல் புற்றுநோயுடன் ஒப்பிடும்போது உயிர்வாழ்வு விகிதம் மிகுதியாக உள்ளது.

கருத்தடை மாத்திரைகளை சாப்பிடும் பெண்களுக்கு உடல் எடை கூடுமா? ஆய்வு கூறும் உண்மை..!!

முதுகுவலியுடன் கூடிய மற்ற வலிகள்

மேலே நாம் பார்த்த 3 புற்றுநோய் பாதிப்புகளுக்கு முதுகுவலி மட்டுமில்லாமல், மேலும் சில அறிகுறிகள் உண்டு. சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் இரத்தம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது வலி போன்றவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன. அதேபோன்று முதுகுத்தண்டு புற்றுநோய் அறிகுறிகளில் உணர்வின்மை, பலவீனம், கைகள் மற்றும் கால்களில் மெலிந்து இருத்தல் மற்றும் பக்கவாதம் ஆகியவை அடங்கும். நுரையீரல் புற்றுநோய்க்கான பாதிப்பில் இருமல் இரத்தம், தொடர்ந்து மூச்சுத் திணறல், நீண்ட காலமாக நீடிக்கும் இருமல் போன்றவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன.

திருமணம் செய்வதற்கு முன்னர் வருங்கால துணையுடன் பேச வேண்டிய 5 விஷயங்கள்..!!

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் வழிகள்

புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதில் வாழ்க்கை முறை பெரும் பங்கு வகிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, நமது 30-40 சதவிகிதம் வாழ்க்கை முறைதான் புற்றுநோய் பாதிப்புக்கான முக்கிய காரணமாக உள்ளது.

புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதற்கு  ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் ஆரோக்கியமான உணவை உண்ணுதல், வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமாக எடையைப் பராமரித்தல் மற்றும் புகைபிடிக்காமல் இருப்பது உள்ளிட்டவை சில ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகளாக உள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios