திருமணம் செய்வதற்கு முன்னர் வருங்கால துணையுடன் பேச வேண்டிய 5 விஷயங்கள்..!!
நீங்கள் ஒருவரை மணந்துகொள்கிறீர்கள் என்றால், வாழ்நாள் முழுக்க எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதாகும். இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் இதுதான் நிலைபாடு. எழுதிய ஒப்பந்தத்தைக் கூட முடியவில்லை என்றால் மாற்றி எழுதலாம். ஆனால் எழுதப்படாத இந்த ஒப்பந்தத்தை பிடிக்கவில்லை என்றால், எதுவும் செய்ய முடியாது. அதனால் திருமணம் குறித்து அனைத்துவிதமான விதிமுறைகளிலும் நிபந்தனைகளிலும் உறுதியாக இருப்பது அவசியம். மகிழ்ச்சியான திருமணத்திற்கு அடிதளம் காதல் தான். ஆனால் அதை முன்னிறுத்தி மட்டும் திருமணத்தை அணுகிவிட முடியாது. அதனால் திருமண வாழ்க்கையில் வெற்றி நிலைத்திட, ஆணும் பெண்ணும் சில விஷயங்கள் பேசி தெளிவுப்படுத்திக் கொள்வது நன்மையை தரும்.
குழந்தைகள்
குடும்பத்தை உருவாக்கிடும் நோக்கில் தான் திருமணம் செய்ய முடிவு செய்கிறோம். அதனால் குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இருவரும் பேசி முடிவு செய்வது அவசியம். சிலர் உடனடியாக குழந்தை வேண்டும் என்று நினைக்கலாம், சிலர் சில வருடங்கள் கழித்து குழந்தையை வேண்டலாம். அதன்காரணமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் உங்களிருக்கும் முடிவு குறித்து முன்னரே பேசிவிடுவது நல்லது. அதேபோன்று குழந்தை பிறந்த பிறகு, அதனுடைய வளர்ச்சியிலும் பராமரிப்பிலும் இருவரும் சமமாக ஈடுபட வேண்டும் என்பதையும் பேசி முடிவு செய்திட வேண்டும். இது குழந்தையின் எதிர்காலத்தை வளம்பெறச் செய்யும்.
பணம்
காதலை மட்டும் வைத்துக்கொண்டு திருமண வாழ்க்கையை நகர்த்த முடியாது. அது ஆரோக்கியமாக அமைந்திட ஆரோக்கியமான பொருளாதாரம் தேவை. திருமணம் செய்வதற்கு முன், அதற்கான நீங்கள் தேர்வு செய்துள்ள நபர் பணத்துடன் எவ்வாறான உறவை மேற்கொள்கிறார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். பணம் தொடர்பான விஷயத்தில் அவர் மிகுதியான மனநிலையோடு உள்ளாரா? அல்லது பற்றாக்குறையான மனப்பான்மை உள்ளதா? என்பன போன்ற கணக்குகள் இருக்க வேண்டும். நிதிக்கு பொறுப்பான நபராக உங்களது மணமகன் / மணமகள் அமைந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
பணி
பெண்கள் மூலம் கிடைக்கும் பொருளாதார வளர்ச்சி அபாரமானது. அதை நாம் அனைவரும் புரிந்துகொண்டுள்ளோம். பெண்களை வேலைக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்திருந்தால், ஏற்படக்கூடிய இழப்புகளையும் இவ்வுலகம் நன்றாக புரிந்துகொண்டுள்ளது. வேலைக்கு போகவேண்டிய அவசியமில்லை என்றாலும், தன்னுடைய சுய முன்னேற்றத்திற்காக பெண்கள் பலர் பணிக்குச் செல்கின்றனர். இதன்மூலம் பெண்களும் குடும்பம் சார்ந்த பொறுப்புகளில் கணவருக்கு ஒத்துழைப்பு தர முடிகிறது. இதனால் அந்த பெண்ணும் மேன்மை அடைகிறாள், குடும்பம் மேம்படுகிறது. இதை உணர்ந்துதான் ஆக வேண்டும். இன்னும் பழையை கதையை பேசிக் கொண்டிருந்துவிட்டு, எதிர்காலத்தை வளமிக்கதாக மாற்றலாம் என்கிற எண்ணம் யாருக்கேனும் இருந்தால், நீங்கள் கணவில் வாழ்கிறீர்கள் என்று பொருள்.
நெருங்கிய நண்பருடன் தனிமையில் இருக்க விரும்புகிறீர்களா? இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்..!!
வீடு
உங்கள் எதிர்காலத்தின் வளர்ச்சியை முடிவு செய்யக்கூடிய இடம் வீடு தான். வேலை, உறவு, குழந்தைகள் என அனைத்தும் வீட்டைச் சார்ந்து தான் இருக்கும். அதனால் வீடு தொடர்பான உங்களுடைய யோசனைகளை ஆணும் பெண்ணும் மனம் விட்டு பகிர்ந்துகொள்ள வேண்டும். திருமணம் செய்யும் நண்பர்கள் இதுகுறித்து சிந்திக்க வேண்டியது கட்டாயம். எங்கே குடும்பத்துடன் செட்டிலாக வேண்டும்? எவற்றில் முதலீடு செய்ய வேண்டும்? இருவரும் சேர்ந்து வீடு கட்டுவது எப்படி இருக்கும்? போன்ற எதிர்கால திட்டங்களும் கனவுகளும் இருந்திட வேண்டும். மேலும் உங்களுடைய வாழ்க்கையில் யாருக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள்? யாரை பிரதிநிதித்துவப்படுவீர்கள் என்பதையும் உங்கள் வாழ்க்கை துணையுடன் கலந்தாலோசிப்பது அவசியம்.
உடன் பணியாற்றுபவரை ’டேட்’ செய்கிறீர்களா? உங்களுக்கான 5 வழிமுறைகள்..!!
பழக்க வழக்கங்கள்
எல்லோருக்குமே சில நல்ல பழக்கங்கள் மற்றும் கெட்ட பழக்கங்கள் உண்டு. உங்களுடைய தினசரி செயல்பாடுகளுக்குள் அது வரவில்லை என்றால், அதை நாம் பெரிதாக பொருட்படுத்த தேவையில்லை. ஆனால் திருமணம் செய்வதற்கு முன்னதாக உங்களிடம் இருக்கும் நல்லது மற்றும் கெட்டப் பழக்கங்களை மணமகன் அல்லது மணப்பெண்ணிடம் கூறுவது கட்டாயம். இதில் மதுப்பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம், நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட விரும்புவது போன்றவை மட்டுமில்லாமல், தூங்கும்போது குறட்டை விடுவது, எத்தனை மணிக்கு தூங்குவீர்கள் என்பது, என்ன சாப்பாடு பிடிக்கும்? என்ன உணவு வகைகள் மீது ஆர்வம் அதிகம்? உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உங்களுடைய வருங்கால துணையிடம் திருமணத்துக்கு முன்பே பகிர்ந்துகொள்வது நன்மையை தரும்.