- Home
- உடல்நலம்
- உறவுமுறை
- Relationship Tips : திருமணமான பெண்கள் கள்ளக்காதல் செய்ய இதுதான் காரணமா? கணவர்களே இனியாவது உஷாரா இருங்க!!
Relationship Tips : திருமணமான பெண்கள் கள்ளக்காதல் செய்ய இதுதான் காரணமா? கணவர்களே இனியாவது உஷாரா இருங்க!!
திருமணமான பெண்கள் தங்கள் கணவரை விட்டு இன்னொரு ஆண் மீது காதல் கொள்ள என்ன காரணம் என்பதை இங்கு காணலாம்.

இன்றைய காலத்தில் திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரித்து வருகின்றன. திருமணமான ஆண்களும், பெண்களும் தங்களுடைய துணைக்கு உண்மையாக இல்லாமல் துரோகம் செய்யும் சம்பவங்கள் அனுதினமும் நடந்து வருகின்றன. சிலர் கொலை கூட செய்யத் துணிகிறார்கள். இந்தப் பதிவில் மணமான பெண்கள் ஏன் இன்னொரு நபருடன் உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்பது குறித்து காணலாம்.
திருமண வாழ்க்கையில் குழந்தைகள், வீடு, வசதி இதையெல்லாம் தாண்டி அந்தரங்க வாழ்க்கையும் நன்றாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே நெருக்கம் இருப்பது முக்கியம். மனைவி தன் கணவனுடன் அந்தரங்க உறவில் ஆர்வம் காட்டவில்லை என்றால் அவருக்கு சலிப்பு ஏற்பட்டது என அர்த்தம். இது அவர்களுடைய ஒட்டுமொத்த குடும்ப வாழ்க்கையையும் தலைகீழாக்கிவிடும்.
இந்த சமயம் கணவன் மனைவி சலிப்பை சரிசெய்ய தவறினால் சில பெண்கள் திருமணத்தை மீறிய உறவை நாடிச் செல்கிறார்கள். தன் மனைவி தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தியாக இருக்கிறாரா என்பதை கணவன் தெரிந்துகொள்ள வேண்டும். அன்பும், பாசமும் இருந்தால் போதாது. வெளிப்படுத்தவேண்டும். அதை செய்யத் தவறினால் இதுபோன்ற பிரச்சனைகள் தலைதூக்கும்.
சிலர் வசதிக்காகவும் சமூகத்திற்காகவும் தான் திருமணம் செய்கின்றனர். இந்த உறவில் காதலோ, அன்போ, ஈர்ப்போ இருக்காது. இந்த மாதிரி தம்பதிகளுக்குள் இருக்கும் இடைவெளி அவர்களை இன்னொரு உறவை நோக்கி அழைத்துச் செல்லும். சிலர் அந்த உறவில் இருந்து வெளியேறத் துடிப்பார்கள். சில பெண்கள் தான் விரும்பிய காதலை வேறொரு ஆணிடம் கண்டால் அங்கு மனதை செலுத்திவிடுகிறாள்.
குடும்ப வன்முறையும் இதற்கு காரணம். திருமணமான பெண்கள் கணவர் வீட்டில் அதிக கொடுமைகளை சந்தித்தாலும், கணவன் சரியாக புரிந்து நடந்துகொள்ளவில்லை என்றாலும் அந்த உறவில் இடைவெளி ஏற்பட்டு திருமணத்தை மீறிய உறவுக்கு இட்டுச் செல்கிறது.
முன்னாள் காதல் இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பின் கணவருடன் வாழ்க்கை சரியாக அமையாவிட்டால் விரைவில் மற்றொரு நபருடன் காதல் வயப்படுகிறார்கள். இது ஆரம்பத்தில் குற்ற உணர்ச்சியை அளித்தாலும் யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. கணவருக்கு ஏற்கனவே திருமணத்தை மீறிய உறவு இருப்பது தெரிந்தால் அந்த பெண்கள் வெறுப்பில் இன்னொரு ஆணுடன் பழகுகிறார்கள். இது ஒரு பழிவாங்கும்போக்கு ஆகும்.
என்ன காரணம் சொன்னாலும் திருமணத்தை மீறிய உறவுகள் சரியானவை அல்ல. இது பிரச்சனைகளை அதிகம் தரக்கூடியது. தவிர்ப்பது நல்லது.