- Home
- உடல்நலம்
- உறவுமுறை
- Relationship Tips : பெண்களே! இந்த '5' விஷயங்களை நோட் பண்ணுங்க! இதை உங்க கணவர் பண்ணா உங்கள ஏமாத்துறார்னு அர்த்தம்!!
Relationship Tips : பெண்களே! இந்த '5' விஷயங்களை நோட் பண்ணுங்க! இதை உங்க கணவர் பண்ணா உங்கள ஏமாத்துறார்னு அர்த்தம்!!
Cheating Husband Signs : உங்களுடைய வாழ்க்கைத் துணை உங்களை ஏமாற்றுகிறாரா? அல்லது உண்மையா இருக்கிறாரா? என கண்டறியும் வகையில் 5 விஷயங்களை இங்கே பார்ப்போம்.

நட்பு, காதல், திருமணம் என எந்த உறவை எடுத்துக் கொண்டாலும், அதற்கு நம்பிக்கைதான் அடிப்படை. ஒரு உறவில் நம்பிக்கை இல்லையென்றால் அந்த உறவுக்கு எந்த அர்த்தமும் இல்லை. ஒன்றாக இணைந்திருக்கும் இரு நபர்களுக்கு இடையே நம்பிக்கையில்லை என்றால் அந்த உறவு வெகுகாலம் வராது. சீக்கிரம் முறிந்துவிடும்.
இன்றைய காலத்தில் திருமணத்தை மீறிய உறவுகள் சாதாரணமாகி வருகின்றன. எல்லா உறவிலும் ஏமாற்றுவது, நம்பிக்கை துரோகம் செய்வது இயல்பாகி வருகிறது. இதனால் இருவரில் ஒருவர் கண்டிப்பாக பாதிக்கப்படுகிறார். இந்தப் பதிவில் உங்களுடைய துணை உங்களை ஏமாற்றினால் எந்த 5 விஷயங்களை செய்வார், அவர் நடத்தை எவ்வாறு மாறும் என்பதை குறித்து காணலாம்.
உங்களுடைய துணை உங்களை ஏமாற்றுகிறார் என்றால் பல விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க முயற்சி செய்வார்கள். உங்களிடம் வெளிப்படையாக இருக்கமாட்டார்கள். செல்போன் பயன்படுத்தும்போது கூட வெளிப்படையாக இருக்கமாட்டார்கள். ஆரம்ப காலத்தில் வெளிப்படையாக இருந்தாலும், ஏமாற்றத் தொடங்கிய பின் மாறிவிடுவார்கள். அடிக்கடி செல்போனை சைலன்ட் மோடுக்கு மாற்றி விடுவார்கள். பாஸ்வேர்ட்டை மாற்றுவது, இரவில் செல்போனில் அதிக கவனம் செலுத்துவது என உங்களுக்கு கவனம் கொடுக்கமாட்டார்கள்.
இப்படி உங்களுக்கு தெரியாமல் செல்போன் பயன்படுத்த தொடங்கினாலே அவர்கள் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். பொதுவாக ஒவ்வொருவரும் தனியுரிமையை விரும்புவது இயல்பானது தான். ஆனால் உங்களுடைய துணை திடீரென இது மாதிரி நடந்து கொண்டால் அது சாதாரணமான விஷயம் கிடையாது. துணையின் நடத்தையில் ஏற்படும் திடீர் மாற்றம் அவர்கள் உங்களிடமிருந்து ஏதேனும் விஷயத்தை மறைப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.
உங்களுடைய துணை அடிக்கடி வீட்டிற்கு தாமதமாக வருவது சரியானது அல்ல. வேலை, நண்பர்கள் என ஏதேனும் காரணம் சொல்லி அடிக்கடி தாமதமாக வீட்டுக்கு வந்தால் அவர் உங்களிடம் எதையோ மறைக்கிறார். உங்களுடைய செல்போன் அழைப்புகளுக்கு சரியாக பதில் சொல்லாமல், பயணத் திட்டங்களைக் குறித்து முடிவு செய்த பின் 'வேண்டாம்' மாற்றி பேசுவது போன்றவை அவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்பதன் அறிகுறி. அதிக நேரம் வேலை, ஆபிஸ் மீட்டிங் போன்றவை பல நேரங்களில் உண்மையாக இருக்காது. அடிக்கடி உங்கள் வாழ்க்கையில் இப்படி நடந்தால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பொதுவாகவே மனிதர்கள் ஏதேனும் தவறு செய்யும் போது அதை மறைக்க வேண்டுமென்று போலியான அன்பை செலுத்தத் தொடங்குவார்கள். எந்நாளும் இல்லாத திருநாளாக திடீரென பாச மழை பொழிவது, பாராட்டுக்கள், பரிசுகள் போன்றவற்றை வாரி வழங்குவது, அன்பான வார்த்தைகளால் உங்களை கிரங்கடிப்பது என உங்கள் துணை அன்பினால் உங்களை திக்குமுக்காடச் செய்தால் உஷாராக இருங்கள். இவை பாசத்தில் அல்ல; குற்ற உணர்ச்சியால் ஏற்படும் தற்காலிக அன்பாக கூட இருக்கலாம். உடனே நம்ப வேண்டாம்.
உங்களுடைய துணை உங்களுடன் தனிப்பட்ட நேரத்தை செலவிடுவதை தவிர்த்தால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய கண்களை பார்த்து பேசாமல் தவிர்ப்பது, தொட்டு பேசாமல் இருப்பது, காதல் தருணங்களை குறைப்பது போன்றவை அவர் உங்களை ஏமாற்றுவதன் அறிகுறியாகும். இது உங்களுக்குள் இடைவெளியை ஏற்படுத்தும் கவனமாக இருங்கள்.