Dating : உடன் பணியாற்றுபவரை ’டேட்’ செய்கிறீர்களா? உங்களுக்கான 5 வழிமுறைகள்..!!

பலரும் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில்ரீதியான வாழ்க்கை இரண்டையும் தனித்தனியாக வைத்திருக்க விரும்புவார்கள். ஆனால் காதல் வாழ்க்கைக்கு ஏங்குபவர்கள் கல்லூரியில் காலத்தை தவறவிட்டால், அடுத்து வந்து சேரும் இடம் அலுவலகம் தான். அப்படி வருபவர் பலரும் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில்ரீதியான வாழ்க்கையையும் கலந்துவிடக் கூடாது என்று விரும்புவார்கள். எதையும் முயற்சிக்காமல்,  தவறான அனுமானங்களை வைத்துக் கொண்டால், அப்போது காதலிப்பது எப்போது? அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர் மீது ஈர்ப்பு அல்லது டேட்டிங்கில் இருந்தீர்கள் என்றால், குறிப்பிட்ட சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் போது உங்களுடைய டேட்டிங் வாழ்க்கை இன்பமாக இருக்கும்.
 

things should be focus when you date a co worker

தனிப்பட்ட விஷயமாக வைத்துக்கொள்ளுங்கள்

உங்களுடன் பணியாற்றுபவரை நீங்கள் டேட் செய்ய துவங்கிவிட்டால், அதுகுறித்து அலுவலகத்தில் உடன் பணியாற்றும் உங்களுடைய நண்பர்களிடத்திலோ அல்லது டீம் மேஸ்ட்ஸிடமோ அல்லது உங்கள் அலுவலக நண்பர்களுக்கு தொடர்பான வட்டத்திலோ சொல்லாதீர்கள். எப்போதும் அதை ரகசியமாகவே வைத்திருங்கள். ஒருவேளை உங்கள் இருவருக்குமிடையேயான உறவு மிகவும் சீரியஸாக இருக்கும் பட்சத்தில், அதை வேண்டியவரிடத்தில் சொல்லலாம். இன்னும் அந்த கடத்துக்கு செல்லவில்லை என்றால், பிரைவேட்டாக இருந்துவிடுவது நல்லது. 

தொழில் அணுகுமுறையை கையாளுங்கள்

அவ்வப்போது இருவரும் ஃப்ளர்ட் செய்துகொள்வது, நெருக்கம் காட்டுவது போன்றவை சகஜமானது தான். ஆனால் இது எதுவும் அலுவலகத்தில் நடக்கக்கூடாது. எப்போது ஒரு தொழில் அணுகுமுறை இருக்க வேண்டும். அலுவலகச் சூழலில் தனியாக இருக்கும் போதும் சரி, நண்பர்களுடன் இருக்கும் போதும் சரி இருவரும் அந்த இடத்துக்கு தகுந்தாற் போல நடந்துகொள்ள வேண்டும். ஒன்றாக தேநீர் அருந்தப் போவது, சாப்பிடபோவது, வேலை முடிந்ததும் ஒன்றாக கிளம்புவது போன்றவற்றை கட்டாயம் தவிர்த்திட வேண்டும். அலுவலகச் சூழலில் ஒரு கேங்காக இருந்துவிடுவது உங்களுக்குள் நல்ல பண்புகளை வளர்க்கும்.

அலுவலகச் சூழலில் தனிப்பட்ட விஷயம் கூடாது

டேட்டிங் செய்கையில் நிச்சயமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பல சண்டைகள் வந்து போகும். அதை அலுவலகத்தில் காட்டிக் கொண்டிருக்கக் கூடாது. ஒரு அணியில் வேலைப் பார்த்தாலோ, அருகருகே அமர்ந்து பணி செய்தாலோ தனிப்பட்ட விஷயங்கள் அல்லது நடவடிக்கை எதுவும் வெளிப்பட்டுவிடக் கூடாது. மீறி உங்களுடைய தனிப்பட்ட விரும்பு வெறுப்புகளை அலுவலகச் சூழலில் வெளிப்படுத்திவிட்டால், அதை தொடர்ந்து வரக்கூடிய நாட்களும் செயல்பாடுகளும் கடினமாகி விடும்.

பெண்களிடம் ஆண்கள் எப்படியெல்லாம் கொடுமைபடுறாங்க பாருங்க..!!

விழிப்புடன் இருங்கள்

வேலை என்று வந்தவுடன் வேலை தான் முக்கியம். அது உடல்ரீதியாக இருந்தாலும் சரி, உணர்வு ரீதியாக இருந்தாலும். உடன் பணியாற்றுபவரை டேட் செய்யும் போது, இந்த மனநிலையை கடைப்பிடிப்பது சற்று கடினம் தான். ஆனால் செய்துதான் ஆக வேண்டும். இதன்மூலம் தொழில்ரீதியான அணுகுமுறை மற்றும் தனிப்பட்ட வாழ்கை சார்ந்த நடவடிக்கை ஆகியவற்றை பிரித்துப் பார்க்க முடியும். இருவருக்கும் அவரவர் வாழ்க்கையின் வளர்ச்சி தான் முக்கியம். இடையில் ஏற்பட்டுள்ள இந்த உறவால், எதிர்காலத்தை சீர்குலைக்க வாய்ப்புள்ள சம்பவங்களுக்கு பெரியளவில் இடமளிக்கக் கூடாது.

முத்தம் தருவதிலும் பெறுவதிலும் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?? இது தெரியாம போச்சே..!!

இமெயில் அல்லது டெக்ஸ்டாப் சாட் வேண்டாம்

என்னதான் சொன்னாலும், அலுவலகத்தில் ஏற்படும் ரொமேன்ஸை சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியாது. அப்போது தனிப்பட்ட முறையில் பேசுவதை விட மெசேஜ் செய்துகொள்ளுங்கள். அப்போது காதலையும் ஒருவர் மீதுள்ள விருப்பு வெறுப்புகளையும் பகிர்ந்துகொள்ளலாம். நீங்கள் மெயில் செய்துகொண்டாலோ அல்லது டெக்ஸ்டாப் வழியாக சேட் செய்து கொண்டாலோ அது அலுவலகச் சூழலில் தர்மசங்கடமாகி விடும். எப்போது உங்களுடைய தனிப்பட்ட உரையாடல்களை போனுடன் நிறுத்திக் கொள்வது தான் சரி.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios