பெண்களிடம் ஆண்கள் எப்படியெல்லாம் கொடுமைபடுறாங்க பாருங்க..!!
பிரபல ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனம் ஆண்களை பெண்கள் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள் என்கிற ஆய்வை மேற்கொண்டது. அதன்மூலம் கிடைத்துள்ள தகவல்கள் உலகளவில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு சமயங்களில் பெண்களுக்கு நிகராக ஆண்களும் கொடுமையை அனுபவிக்கின்றனர். அதுதொடர்பான சம்பவங்களையும் நாளிதழ்களில் தினந்தோறும் பார்க்க முடிகிறது. பெண்களைப் போல உடல்ரீதியாக சித்ரவதை அனுபவிக்கும் குறைவுதான். அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பலவும் மனம் சார்ந்ததாக உள்ளன. உலகளவில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான ஃபாக்ஸ் நியூஸ், பெண்களிடம் ஆண்கள் அனுபவிக்கும் கொடுமைகளை குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதில் தெரியவந்த முக்கிய 5 கொடுமைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
காதலி/மனைவி ஃபோன் எடுக்காமல் இருப்பது
பெண்களுக்கு நல்ல எண்ணவோட்டங்களில் இருந்தால் அவர்களாகவே தங்களுக்கு பிடித்த ஆண்கள் மற்றும் காதலர்களுக்கு போன் செய்து பேசுவார்கள். ஆனால் பிடிக்கவில்லை அல்லது ஏதாவது சண்டை இருந்தால், போனே செய்யமாட்டார்கள். ஒருவேளை போன் செய்தாலும் எடுக்கமாட்டார்கள். இதில் மற்றவர் மீது கோபமிருந்தாலும் பெண்கள் தங்களுடைய கணவன் அல்லது பாய் ஃபிரண்டுடன் தான் சண்டை போடுவார்கள். ஆண்கள் போன் செய்யவில்லை என்றால், பெண்கள் அப்படியே விட்டுவிடுவார்கள். சில நேரங்களில் சகவாசமே வேண்டாம் என்று தொலைப்பேசி எண்ணை மாற்றிவிடுவதும் உண்டு.
செலவில் சுயநலம்
ஆண்களுடன் வெளியே செல்லும் பெண்கள், எந்தவிதமாகவும் செலவு செய்யமாட்டார்கள். அவர்களுக்கு பிடித்த பொருட்களும் சரி, தனக்கு பிடித்த பொருட்கள் என்றாலும் சரி அதற்கு உடன் வந்த ஆண் தான் பில் கட்ட வேண்டும். பெண்களுக்கு பிறந்தநாள் வந்தாலும், அதற்கு அவருடைய காதலர் அல்லது கணவர் தான் செலவு செய்து ட்ரீட் தர வேண்டும். ஒருசில பெண்கள், அன்றைய நாளில் தன்னுடைய காதலரிடம் எவ்வளவு பணம் உள்ளது என்று பார்த்துவிட்டு, அதை அனைத்தையும் செலவு செய்த பின் கிளம்பிவிடுவதும் உண்டு.
நேரம் கடத்துவதற்கு மட்டும்
தனக்கு பிடித்த நபர், தன்னை தேடி வரும் வரையில் சில பெண்கள் ஒரு ஆணுக்கு கமிட்மெண்ட் கொடுத்திருப்பார்கள். அந்த குறிப்பிட்ட ஆணுக்கு கமிட்மெண்ட் கொடுக்கும்போதே சொல்லிவிடுவதும் உண்டு. பிடித்த பெண்ணுடன் இருந்தால், ஊரே நம்மை பார்க்கும் என்கிற எண்ணத்தில் ஆண்களும் அதற்கு சம்மதித்து விடுகின்றனர். தனக்கு பிடித்த ஆண், தன்னை விரும்பி வந்ததும், ஏற்கனவே பழக்கத்தில் இருக்கும் ஆண்களை பெண்கள் டீலில் விட்டுவிடுகின்றனர். அவர்கள் இருவருக்கும் ஏதாவது தேவை என்றாலும், டீலில் விடப்பட்ட ஆணை வைத்து தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வேலையிலும் பெண்கள் ஈடுபடுகின்றனர்.
அடி, உதை மற்றும் குத்து தான்
மனரீதியான கொடுமைகளை அனுபவிப்பது போதாது என்று, ஒரு சில பெண்கள் உடல் ரீதியாகவும் ஆண்களை சித்ரவதை செய்வதுண்டு. கோவை சரளா அளவுக்கு ஆண்களை புரட்டி எடுக்கும் பெண்களும் சமூகத்தில் உள்ளனர். இப்படிப்பட்ட பெண்கள் எல்லா மட்டத்திலும் இருப்பது தான் ஆச்சரியமான ஒன்று. காதலி முதல் மனைவி வரை என பெண்களுக்கு இருக்கும் குணாதிசியங்களை வைத்து, ஆண்களுக்கு அடி விழுவது உறுதியாகிறது. ஒருவேளை காதலி மனைவியாகிவிட்டால், மன உளைச்சலுடன் அடி வாங்குவது வாழ்நாள் முழுக்க தொடர்கிறது.
ஆண்மை பாதிக்கச் செய்யும் 4 உணவுகள்..!!
தனிமை மட்டும் முடியாது
எல்லாம் சரி, ஆனால் பாலியல் இன்பத்துக்கு கட்டுப்பட முடியாது என்று பெண்கள் பலர் கட்டினஷுடன் இருக்கிறார்களாம். ஆண்கள் தாங்கள் விரும்பும் பெண்ணிடம் காதல் மட்டுமில்லாமல், பாலியல் இன்பத்தையும் எதிர்பார்க்கக்கூடியவர்களாகவே அதிகம் பேர் உள்ளனர். இது இயல்பான விஷயம் தான். கலவி பிறகு தான் காதல் பலப்படுகிறது என்பது ஆண்கள் புரிதலாக இருக்கிறது. ஆனால் இந்த விஷயத்துக்கு பெண்கள் அவ்வளவு சீக்கரம் உடன்பட மாட்டார்கள். எல்லாம் இருக்கட்டும், ஆனால் செக்ஸ் மட்டும் கூடாது. கல்யானத்துக்கு பிறகு தான் என்று பெண்கள் ஓரே போடாக போட்டுவிடுகின்றனர்.