கருத்தடை மாத்திரைகளை சாப்பிடும் பெண்களுக்கு உடல் எடை கூடுமா? ஆய்வு கூறும் உண்மை..!!
இந்தியாவில் சட்டப்படியான, பாதுகாப்பான கருக்கலைப்புக்கு திருமணமாகாத பெண்கள் தகுதியானவர்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. எனினும் நமது நாட்டில் கருக்கலைப்பு செய்வதை பலரும் தவறாக கருதுகின்றனர். ஒருசிலரோ இது பண்பாட்டு அடையாளம் என்று வாதிகிடுகின்றன. ஆனால் குழந்தை வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்வது ஒரு பெண்னின் தனி உரிமை சார்ந்த விஷயம். அதற்கு யாரும் முன்னுரிமை கொடுப்பது கிடையாது. இதனால் கருக்கலைப்பு குறித்தும், அதற்கான மருந்துகளை பற்றியும் பல வதந்திகள் பரவி வருகிறது. அதன்படி கருத்தடை மாத்திரையை பயன்படுத்துவதால் எடை கூடி விடும் என்கிற அச்சம் பல பெண்களிடையே நிலவுகிறது. அதுகுறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
கருத்தடை மாத்திரையால் எடை கூடுமா?
இந்தியாவில் கருத்தடை சாதனங்கள் குறித்து பெண்களிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாட்டிலுள்ள திருமணமான அல்லது கணவனின்றி வாழும் 99% பெண்களுக்கு ஏதாவது ஒரு வகையில் கருத்தடை முறைகளை அறிந்து வைத்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் இதுகுறித்த புரிதல்கள் ஏற்படுவது ஊடகத்தின் கட்டாயமாகிறது. ஆரம்பத்தில் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதால் உடல் எடை கூடும். ஆனால் அது உடலில் கொழுப்பை சேர்க்கும் என்கிற அர்த்தமல்ல. மேலும் இதுபோன்று உடல் எடை கூடுவது தற்காலிகமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எடை கூடுவதன் காரணம் என்ன?
பெரும்பாலான கருத்தடை மாத்திரைகளில் பசியை தூண்டும் ஆற்றல் உள்ளது. அதனால் இந்த மாத்திரையை புதியதாக நீங்கள் சாப்பிட துவங்கும் போது, உங்களுக்கு அடிக்கடி பசியை துண்டும். இதனால் அதிகம் சாப்பிடுவீர்கள். பசிக்கும் என்பதால் நொறுக்கு தீணிகளை அதிகம் எடுத்துக்கொள்வீர்கள். சில கருத்தடை முறைகளில் ஈஸ்ட்ரோஜன் இருப்பதால் உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும். இதனால் உடலில் நீர்பிடிப்பு ஏற்பட்டு, உடல் வீங்கியதை போல தெரியும்.
கூர்மையான நினைவாற்றலை பெறுவதற்கு வேண்டிய 5 உணவு பழக்கவழக்கங்கள்..!!
எப்போது எடை குறையத் துவங்கும்?
கருத்தடை மாத்திரைகளால் உடல் எடை அதிகரிப்பது என்பது தற்காலிகமானது தான். கருத்தடை மாத்திரைகளை நீங்கள் சாப்பிட துவங்கி சில நாட்களில், உடல் அதற்கேற்றவாறு தகவமைத்துக் கொள்ளும். இதனால் குறைந்து கருத்தடை மருந்து எடுத்து 5 முதல் 6 மாதங்களில் பழைய நிலைக்கு உடல் எடை திரும்பிவிடும். ஒருவேளை தொடர்ந்து உடல் மிகவும் பருமனாகவே இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். அதற்கான சிகிச்சைகளும் உள்ளன.
மாத்திரை விழுங்கியதும் சீக்கரம் பலன் கிடைக்க எளிய டிப்ஸ்..!
உணவு பத்தியம் பின்பற்றலாமா?
கருத்தடை மாத்திரையால் உடல் எடைக் கூடக் கூடிய அறிகுறிகள் இருப்பதால், முடிந்தவரை பெண்கள் 30 நிமிடம் தினசரி உடற்பயிற்சி அல்லது நடைப் பயிற்சியை மேற்கொள்வது முக்கியம். குறிப்பாக புரதச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். குறைந்த கொழுப்பு கொண்ட பால் பொருட்களை பயன்படுத்துவது நன்மையை தரும். கீரை, முட்டை, பருப்பு வகைகள், பீட்ரூட், கேரட், பீன்ஸ், போன்ற உணவுகளை உங்களுடைய தினசரி சாப்பாட்டில் சேர்த்து வாருங்கள். அதிகம் தண்ணீர் குடியுங்கள், இது உங்களுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தாமல் இருக்கும்.