கூர்மையான நினைவாற்றலை பெறுவதற்கு வேண்டிய 5 உணவு பழக்கவழக்கங்கள்..!!
சில சமயங்களில் மறதி அருமருந்து தான். ஆனால் சின்ன சின்ன விஷயங்கள் மறந்துபோவது வாடிக்கையான ஒன்று தான். இது அடிக்கடி தொடரும் பட்சத்தில், கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆயுர்வேத முறையில் நினைவாற்றலை அதிகரிக்கக் கூடிய உணவுப் பழக்கங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து அடுத்தடுத்து பார்க்கலாம்.
தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் முதல், உடல்நலனுக்காக மாத்திரைகள் சாப்பிடும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் தலையாய பிரச்னை நினைவாற்றல் இழப்பு. விழுந்து விழுந்து படித்திருப்போம், சரியாக பரீட்சை நேரத்தில் மறந்துவிடும். டி.வி பார்த்துக் கொண்டே இருந்திருப்போம் சாப்பிட வேண்டிய மாத்திரைகளை மறந்திருப்போம். துணையின் பிறந்த தேதி, குழந்தைகள் பிறந்த தேதி, கல்யாண நாள் உள்ளிட்டவற்றை மறந்து மனைவியிடம் திட்டு வாங்கு கணவர்மார்கள் நிறைய இருக்கின்றனர். சில சமயங்களில் மறதி அருமருந்து தான். ஆனால் சின்ன சின்ன விஷயங்கள் மறந்துபோவது வாடிக்கையான ஒன்று தான். இது அடிக்கடி தொடரும் பட்சத்தில், கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆயுர்வேத முறையில் நினைவாற்றலை அதிகரிக்கக் கூடிய உணவுப் பழக்கங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து அடுத்தடுத்து பார்க்கலாம்.
மூலிகைகள் மூலம் கிடைக்கும் பலன்
ஆயுர்வேத மூலிகைகள் மூளையிலுள்ள 3 கற்றல் திறன்களை அதிகரிக்கின்றன. தி, தித்ரி மற்றும் ஸ்மிருதி போன்ற முலிகைகள் நினைவாற்றல் திறன் மேம்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட கோட்டு கோலா, அஸ்வகந்தா மற்றும் பகோபா போன்ற மூலிகைகளை சாப்பிட்டுவிட்டு படித்தால் மாணவர்கள் நல்ல நினைவாற்றலுடன் தேர்வு எழுதலாம். அவரவருக்கு விருப்பப்பட்ட முறையில் மூலிகைகளை சாப்பிடலாம். எனினும் மூலிகைகளை சாப்பிடுகையில் இனிப்பு மற்றும் கசப்பு போன்ற சுவைகளை தவிர்ப்பது நல்லது. அதேபோல தயிர், முட்டை உள்ளிட்ட மாமிச உணவுகளையும் சாப்பிட வேண்டாம்.
ஆண்டி-ஆக்சிடண்டஸ் நிறைந்த உணவுகள்
நமது மூளை சிறப்பாக செயல்பட ஆக்சிஜன் அவசியம். அதிகளவில் ஆக்சிஜன் நுகர்வு இருந்தாலும், மூளை அழுத்தத்துக்கு உண்டாகும்.
இதனால் எதிர்வரும் நாட்களில் உடனடியான பாதிப்புகள் ஏற்படும். ஆண்டி-ஆக்சிடண்ட்ஸ் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உங்களுடைய மூளை செயல்பாடு அமைதி பெறும். குறிப்பாக சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை ஆண்டி-ஆக்சிடண்ட்ஸ்கள் உள்ளன. சீக்கரமாவே கோடைக் காலம் வரவுள்ளதால் அதிகளவில் தர்பூசிணி பழத்தை சாப்பிடுவது நல்ல பயனை தரும்.
ஹெர்பல் தேநீரில் இருக்கும் நன்மை
உடல் செயல்பாடுகளுக்கு ஏற்ப நீ இருப்பு உடலில் இருக்க வேண்டும். போதுமான நீர் இல்லையென்றால் உடல் பலவீனமாகி விடும். நீரிழப்பு ஏற்படுகையில் மூளையின் செயல்பாடு பெரியளவில் பாதிக்கப்படும். ஆயுர்வேத வல்லுனர்கள் சிறப்பு மூலிகை தேநீர் குடிப்பதால் மூளைக்கு நீரேற்றம் கிடைக்கிறது. இது மன வலிமையையும் நினைவாற்றலையும் அதிகரிக்கும் என்று ஆயுர்வேத முறை சார்ந்த மருத்துவர்கள் கூறுகின்றனர். கீல், ஹல்டி, அஜ்வைன் மற்றும் துளசி உள்ளிட்டவற்றை கொண்டது தான் மூலிகை தேநீர்.
துர்நாற்றம் வீசும் இடங்களுக்குச் சென்றால் எச்சில் விழுங்கலாமா? கூடுதா?
நிம்மதியான தூக்கம்
தூக்கமின்மை மூளையின் செயல்பாட்டை ஆழமாக பாதிக்கக்கூடும். இதன்காரணமாக நினைவாற்றல் மற்றும் சிந்தனை திறன்கள் பாதிக்கப்படும். எனவே, ஒவ்வொரு இரவு போதுமான ஓய்வை பெறுவது அவசியம். ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று காலையில் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். தூங்குவதில் சிக்கல் ஏற்பட்டால், ஆயுர்வேத மூலிகையான பகோபா உங்கள் மூளையை அமைதிப்படுத்தவும், தூக்கத்தை வரவழைக்கவும் உதவும்.
பலவீனமான ஆண்மைக் கொண்ட ஆண்களை கண்டறிவது எப்படி? இதோ 5 வழிகள்..!!
ஊட்டச்சத்து கொண்ட உணவுகள்
உடலுக்கு ஊட்டச்சத்து தேவைப்படுவது போலவே, மூளைக்கும் அது தேவைப்படுகிறது. இயற்கையாகவே விளைவிக்கக் கூடிய பல பொருட்கள் மூளைக்கு நன்மை செய்கின்றன. எடுத்துக்காட்டாக நெய், ஆலிவ் ஆயில், வால்நெட், ஊரவைக்கப்பட்ட ஆல்மண்ட்ஸ், உலர் திராட்சைப் பழங்கள், பேரீட்சைப் பழம் உள்ளிட்டவற்றில் மூளைக்கு தேவையான ஊட்டச்சத்து உள்ளன. பருப்பு வகைகள், பீன்ஸ், பன்னீர், சீரகம், கருப்பு மிளகு, வெந்தயக் கீரை உள்ளிட்டவற்றை சேர்த்து செய்யப்படும் பொருட்களும் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.