பலவீனமான ஆண்மைக் கொண்ட ஆண்களை கண்டறிவது எப்படி? இதோ 5 வழிகள்..!!
ஒரு வலுவான ஆண் எப்போதும் சமூகத்தில் மேன்மையாக பார்க்கப்படுகிறான். காரணம் சமூகம் அவர்களை எப்போது பலம் பொருந்தியவர்களாகவே பார்க்க வேண்டும் என்று நினைக்கிறது. அவர்களை பலவீனமானவர்களாக பார்ப்பதற்கு விரும்புவதில்லை. சில ஆண்கள் தடுமாற்றம் ஏற்படும் போது, அதனால் உருவாகும் அழுத்தத்தை சமாளித்திட முடியும். ஆனால் ஒரு சிலருக்கு பாதுகாப்பின்மை மற்றும் தன்னம்பிக்கை குறைபாடு போன்ற பிரச்னைகள் இருந்தால், செயல்பாடு தடை படும். இப்படிப்பட்ட ஆண்களை சமூகம் புறக்கணித்துவிடுகிறது. அவர்கள் ஆண்களுக்குரிய இலக்கணங்களை பூர்த்தி செய்யவில்லை என்று சமூகம் மதிப்பிடுகிறது. இதனால் இவர்களுடைய ஆண்மை காயப்படுத்தப்படுகிறது. எனவே, ஆண்களிடம் உள்ள ஆண்மை குணத்தை சமூகம் எப்படி புரிந்துகொள்கிறது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
சத்தமாக பேசுதல்
ஆண்கள்சத்தமாகவும் ஆக்ரோஷமாகவும் பேசும்போது, அதை கேட்கும் பலர் பயந்துவிடுவார்கள். உங்கள் குரல் அல்லது தொனி கோபமாக ஒலிப்பதை சமூகம் ஆண்மைக்கான குறைந்த அடையாளமாக பார்க்கிறது. ஆண்மை பொருந்திய ஆண்கள் எப்போதும் மென்மையாகவும், மேன்மையுடனும் பேச வேண்டும் என்று விரும்புவது சமூகத்தின் கருத்தாக உள்ளது.
பரபரப்பாக இருப்பது
எதையாவது செய்யவேண்டும் என்கிற எண்ணத்துடன் இருப்பது ஆண்மைக்கான குறைந்த அறிகுறி என்று சமூகம் கருதுகிறது. சில விஷயங்களை செய்து முடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம் அல்லது மற்றவரை திருப்திப்படுத்த முயற்சிக்கலாம் போன்றவை இவற்றில் அடங்கும். வேலை செய்வதால் கிடைக்கும் அங்கீகாரம் இப்படிப்பட்ட ஆண்களுக்கு மகிழ்ச்சியை தரும். அப்படிப்பட்ட ஆண்களுக்கு எவ்வளவு செய்தாலும் திருப்தி வராது. அது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும். அதன்காரணமாக அமைதியின்றி பரபரப்புடன் இருக்கும் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு என்று சமூகம் கருதுகிறது.
எளிதில் கோபப்படுவது
ஒரு சிறு விஷயம் அல்லது நடவடிக்கையால் எளிதாகக் கோபப்படக்கூடியவர்களை ஆண்மைக் குறைவு கொண்டவர்களாக சமூகம் எண்ணுகிறது. இதுபோன்ற குணாதிசியங்களை கொண்டவர்கள், தங்களை ஒரு ஆளுமையாக தீவிரத்துடன் எண்ணுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு சிறிய தவறு கூட விளம்புக்கு தள்ளும். அது கோபமாக வெளிப்படும். இதனால் இறுக்கமான சூழ்நிலை கொண்ட ஆண்களை சமூகம் விரும்புவது கிடையாது.
பெண்களிடம் ஆண்கள் எப்படியெல்லாம் கொடுமைபடுறாங்க பாருங்க..!!
நிறைய சிந்திப்பவர்கள்
சிந்தனை செயலுடன் வேலையுடன் இருந்தால், அது ஆக்கம் தரும். ஆனால் சிந்திக்கும் திறன் தன்னைப் பற்றி இருந்தால் பிரச்னை தான் வரும். இப்படிப்பட்டவர்கள் அடுத்தவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கக்கூடும் என்கிற கவலை இருந்துகொண்டே இருக்கும். ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும், அவர்களுக்கு இந்த எண்ணம் வந்துவிடும். இதனால்தேவையற்ற, கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன்காரணமாக அவர்களுடைய பாலியல் வாழ்க்கையும் அழுத்தத்துக்குள் சென்றுவிடும். இவர்களால் சாதாரணமாக எதையும் எப்போதும் எடுத்துக்கொள்ள முடியாது.
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 5 ஊட்டச்சத்து மிக்க உணவுகள்..!!
நிகழ்கால சிந்தனையற்றவர்
நிகழ்காலத்தைப் பற்றி சிந்திப்பது என்றால், எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி சிந்திக்காமல் இருப்பதே ஆகும். அதாவது அன்றைய நாள், அந்த நிமிடம், அப்போதைய வாழ்க்கை இதுதான் நிகழ்கால சிந்தனை. அப்படிப்பட்ட சிந்தனையை கொண்டவர்கள் எப்போதும் தன்னை மகிழ்ச்சியாக உணர்வார்கள். அந்த சிந்தனையற்றவர் பிரச்னையுடன் தான் குடும்பம் நடத்துவார். இப்படிப்பட்ட ஆண்கள் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றி சிந்தித்து, தற்போதைய வாழ்க்கையை தொலைத்துவிடுவார்கள். அதனால் இந்த நிலைபாடு கொண்ட ஆண்களையும் சமூகம் ஆண்மைக் குறைபாடு கொண்டவர்களாக அடையாளப்படுத்துகிறது.