Mouth Ulcers: வாய்புண் தொல்லையால் அவதியா..? உடனடி தீர்வுக்கு இந்த 5 வீட்டு மருந்துகள் கை கொடுக்கும்..!
How to get rid of mouth ulcers fast at home: பசித்தால் சாப்பிடக்கூட முடியாமல், வாய்புண் தொல்லை உங்களை பாடாய் படுத்துகிறதா..? வீட்டில் இருக்கும் இந்த மருந்துகள் மூலம் நீங்கள் சுலபமான முறையில் தீர்வு காணலாம்.
சிறு குழந்தை முதல் வயதானவர்கள் வரை நம்மில் பலர் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்று வாய்ப்புண். சில நேரம் பசித்தால் சாப்பிடக்கூட முடியாமல் வாய்ப்புண் வந்து தொல்லை கொடுக்கும். வாய் பகுதியின் ஓரத்தில் புண்கள் வருவது, கீழ் மற்றும் மேல உதடுகளின் மேல் மற்றும் உள்புறத்தில் புண் வருவது என வாய்ப்புண் பல விதங்கள் உண்டு.
சில சமயங்களில் இந்த வாய்ப்புண்கள் லேசான வலியுடன் வரும். இவை சரியாக ஒரு சில வாரங்கள் கூட எடுத்துக் கொள்ளும். அப்படியான சூழலில் நீங்கள் மாத்திரைகள் எடுக்காமல் வீட்டு மருத்துவம் மூலம், சில சுலபமான தீர்வுகளால் கட்டுப்படுத்தலாம்.
மணத்தக்காளி கீரை
வாய்ப்புண் போக, தினமும் மணத்தக்காளி கீரையின் சாறை புண் மீது படும்படி வாயில் சிறிது நேரம் வைத்தால், ஒரு சில நாட்களில் குணமாகிவிடும்.
அப்படி இல்லையென்றால், மணத்தக்காளி இலைகளை வாயில் போட்டு மென்று, சற்று நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கவும். இவை வயிற்றில் குடல் புண் இருந்தால், அவற்றையும் சரி செய்யும்.
mouth ulcers
அதேபோன்று, மணத்தக்காளிக் கீரையையும், அகத்திக் கீரையையும் பொரியலாகச் செய்து, தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிட்டால், வாய்புண் 2 நாட்களில் குணமாகும்.
தீராத வாய்ப்புண்ணிற்கு கடுக்காய் அல்லது மாசிக் காயை உடைத்து ஒரு துண்டை வாயில் அடக்கி வைத்திருக்கவும். ஊறிவரும் நீரை விழுங்குங்கள். சாறு தொண்டையில் போகப்போக உடனடியாக குணம் கிடைக்கும். வாய்ப்புண் சரியாகிவிடும்.
துளசி இலைகள்
பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட துளசி இலைகள், வாய்ப்புண்களை போக்க நல்ல அருமருந்து. ஆயுர்வேதத்தின் படி, இவற்றில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வாய் புண்கள் மற்றும் குடல் புண்களை குணமாக்க வெகுவாக உதவுகின்றன. துளசி சாற்றினை எடுத்து வாரம் இரண்டு குடித்து வருவது, உடலுக்கு மனதிற்கும் நல்லது.
நெல்லி இலைகள்:
நெல்லி இலைகளை அவித்த நீரீனால் அடிக்கடி வாய் கொப்பளித்துவர வாய்ப்புண்கள் ஆறிவிடும். மேலும், நெல்லிச் சாறையும், தேனையும் சமமாகக் கலந்து, மூச்சுத் திணறல், நீண்ட கால விக்கல் நோய் முதலியவற்றிற்குக் கொடுத்து வரலாம்.
பச்சரிசி, பயத்தம்பருப்பு 1 ஸ்பூன் வெந்தயம், முழு பூண்டு 1 உரித்துப்போட்டு குக்காரில் வைத்து வெந்தவுடன், அத்துடன் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறி வாய்ப்புண்ணும் நீங்கும்.
தேன்
வாய்ப் புண் இருக்கும்போது, அந்த இடத்தில் சிறிது தேன் தடவுங்கள். அதேபோன்று, இரவில் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிடுங்கள். தினமும் இப்படி செய்து வந்தால் சில நாட்களில் புண் குணமாகும். ஏனெனில், உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் புண்களை ஆற தேனில் இருக்கும் வைரஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உதவுகிறது.
தேங்காய் எண்ணெய்:
இது தவிர தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பால், மஞ்சள் தூள், பசு வெண்ணைய் ஆகியவற்றின் வழியாகவும்வாய்ப்புண்களுக்கு நீங்கள் நிவாரணம் தேடிக் கொள்ள முடியும். குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால், மாசிக்காயை பாலில் கரைத்து தேனில் குழைத்து நாக்கில் தடவ குணமாகும். ஒருவேளை உங்களுக்கு வாய்ப்புண் அதிகமாகி விட்டால் காரத்தை அடியோடு நிறுத்த வேண்டும்.