உங்களுக்கு மழைக்காலங்களில் பல் கூச்சம் உண்டாகுகிறதா..?? இந்த பிரச்னையாக இருக்கலாம்..!!

மழைக்காலங்களில் பற்கள் கூசுவதற்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்
 

Causes and Treatments for Teeth Grinding in Rainy Seasons

சில்லென்ற பனிக்கூழ் சாப்பிட்டாலும் சூடானா சூப் அருந்தினாலும் ஒருசிலருக்கு உடனே பற்கள் ஜிவ் என்று ஆகிவிடும். இதனால் அவர்கள் விரும்பி எதையும் சாப்பிட முடியாத நிலை ஏற்படும். யாராவது எங்கேயாவது சொரசொரப்பாக எதையாவது வைத்து தேய்த்தாலும் பற்கள் கூசும். இந்த உணர்திறனுக்கு பெயர் டென்டின் ஹைபர்சென்சிட்டிவிட்டி என்று மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது. இந்த பிரச்னையை கொண்டவர்களால் சூடாக பால், இனிப்புப் பொருட்கள் மற்றும் காபி என எதையும் சாப்பிடவும் முடியாது, குடிக்கவும் விடாது. அதேபோல சில்லென்று இருக்கும் உணவுப் பொருட்களையும் இவர்களுடைய பற்கள் விரும்பாது. இது சாதாரண பிர்சனையாக தெரியலாம். ஆனால், உரிய நேரத்தில் மருத்துவரை அணுகாமல் இருந்தால், அனைத்து பற்களையும் இந்த உணர்திறன் பிரச்னை பாதிக்கச் செய்யும்.

அறிகுறிகள்

பற்களில் வேர்களில் முதலில் சவுகரியம் தோன்றும். அதை நாக்கால் வருடியபடி இருப்பீர்கள். ஒரு கப் குளிர்ந்த தண்ணீரை குடித்தால் கூட பற்கள் முழுவதும் ஜிவ்வென்று ஆகிவிடுவது போன்ற உணர்வு ஏற்படும். குறிப்பாக வாகனத்தில் செல்லும் போது, முகத்தில் சிலுசிலு என்று காற்று வீசினாலும் பற்கள் வலிக்கும் அல்லது அசவுகரியத்தை ஏற்படுத்தும். இதனால் விபத்துக்கள் கூட ஏராளமாக நடந்துள்ளன. ஆரம்பத்தில் மெலிதான பாதிப்பாக தோன்றினாலும், உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் ஒட்டுமொத்த பல் அமைப்புக்குமே ஆபத்து தான்.

பல் எனாமல் முக்கியம்

பற்களில் எனாமல் இருப்பது மிகவும் முக்கியம். ஒருமுறை போனால், அது வராது என்பது தான் பலரும் அறிந்துகொள்ள வேண்டியது. சிலருக்கு இயற்கையாகவே உணர்திறன் கொண்ட பற்கள் இருக்கும். அந்த சவுகரியத்தை அவர்கள் சமாளிக்க அவ்வப்போது வாயை ஏதாவது செய்துகொண்டே இருப்பார்கள். எனினும் அழுத்தமாக பிரெஷ் செய்வது, மிகவும் தடிமனான பற்பசைகளை கொண்டு பல் துலக்குவது, உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது போன்றவை பற்களில் எனாமல் கெட்டுப் போக வைக்கும். அதனால் பற்களை மிகவும் பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும்.

பற்களை கடிக்கும் பிரச்னை

புறக்காரணிகள் இல்லாமல், உடலில் இருக்கும் பிரச்னை காரணமாகவும் பல்லில் எனாமல் போய்விடும். ஒரு சிலருக்கு கடிப்புத் தன்மை அதிகமாக இருக்கும். அவர்கள் பகலை விடவும் இரவில் அதிகமாக கடிப்பார்கள். இதனால் பல்லின் முதல் அடுக்கான எனாமல் தேய்ந்து, இரண்டாவது அடுக்கான டெண்டில் வெளியே வந்துவிடும். இதனால் மிகவும் சூடான அல்லது குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடும் போது பற்களில் கூச்சம் அல்லது வலி உள்ளிட்ட அசவுகரியம் தோன்றுகிறது. இதை உரிய நேரத்தில் கவனிக்காமல் விட்டால், தூங்கும் நேரத்தில் பற்களை கடிப்பவர்கள் நாக்கையும் கடிக்கக்கூடும். இதனால் மேலும் பாதிப்புகள் அதிகரித்து, உடல் உறுப்பு பாதிப்பு ஏற்படக்கூடும். 

Sex life : திருமண வாழ்க்கைக்கு செக்ஸ் எவ்வளவு முக்கியமானது தெரியுமா?

மழைக்காலங்களில் பற்களுக்கு ஏற்படும் பிரச்னை

ஒரு சிலருக்கு மழைக்காலம் வந்தால் பற்களில் கூச்சம் ஏற்படும். இதற்கு  உடலில் நிலவும் தட்பவெட்பநிலை மாறுபாடு தான் காரணம். குறிப்பாக நம்முடைய வாய்க்குள் நிலவும் தட்பவெட்ப நிலையை பொறுத்து, பற்களுக்கான பாதுகாப்பு அமைகிறது. உடலுக்கும் வாய்க்குமான தட்பவெட்பநிலையில் மாறுபாடு இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குளிர்காலங்களில் பொதுவாக டெண்டில் அடுக்கு மிகவும் உணர்திறன் கொண்டதாக இருக்கும். அதனால் குளிர் உடலில் படும் போது, பல் கூசுகிறது. வாயினுள் ஏதாவது சொத்தைப் பல் இருந்தால் , அதை அடைப்பது நல்ல பலனை தரும்

உடலில் வைட்டமின் குறைப்பாட்டை எச்சரிக்கும் அசாதாரண அறிகுறிகள்..!!

மருத்துவ சிகிச்சை முக்கியம்

பற்களில் கூச்சம் ஏற்பட ஆரம்பித்தால், முதலில் டாக்டரை சந்திப்பது தான் முக்கியம். ஆனால் பலரும் அதை கண்டுகொள்ளமாட்டார்கள். எனினும், இதை படிக்கும் உங்களுக்கு பற்கூச்சம் அல்லது வலி இருந்தால் சில வழிமுறைகளை நீங்களே முயற்சிக்கலாம். இதமான சூட்டில் உணவுகளை சாப்பிடுவது, தற்போது பயன்படுத்தி வரும் டூத்பேஸ்ட் மற்றும் பிரெஷ்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களை வாங்குவது, மென்மையாக பற்களை அழுத்தி தேய்ப்பது, இதமான தண்ணீரில் வாயை சுத்தம் செய்வது போன்ற அடிப்படை விஷயங்களை செய்துபாருங்கள். எனினும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்ல தீர்வை ஏற்படுத்தும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios