உடலில் வைட்டமின் குறைப்பாட்டை எச்சரிக்கும் அசாதாரண அறிகுறிகள்..!!
உடலில் வைட்டமின் குறைப்பாட்டை எச்சரிக்கும் அசாதாரண அறிகுறிகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
மனித உடலுக்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய ஊட்டச்சத்து வைட்டமின் டி. நமக்கு கிடைக்கும் சத்துக்களில் எலும்பு வலுவடைய வேண்டும் என்பது தான் பிரதானமாக உள்ளது. அதற்கு கால்ஷியம் முக்கியத் தேவையாக உள்ளது. அதை வழங்ககூடிய ஊட்டச்சத்து தான் வைட்டமின் டி. நமது சருமம் சூரிய வெளிச்சத்தில் படும் போது, வைட்டமின் டி தானாகவே உடலில் உற்பத்தியாகிவிடும். ஒருவேளை அதில் ஏதேனும் குறைப்பாடு இருந்தால், மருத்துவர் வழங்கும் உரிய மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் வைட்டமின் டி உடலுக்கு கிடைக்கிறது.
உடலில் இந்த வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் எலும்பு, எலும்பு தசைகள், உடலின் எதிர்ப்புச் சக்தி மண்டலங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படும். அது இருதய பிரச்னைக்கு உங்களை கொண்டு செல்லும். அதையடுத்து நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டு, பல்வேறு நோய் தொற்றுகள் உடலில் ஏற்பட காரணமாக அமையும். குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவது மிகவும் ஆபத்தானது. மார்பக்ப் புற்றுநோய், கணையப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கும் வைட்டமின் டி குறைபாடு காரணமாகவுள்ளது.
உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டு இருந்தால் அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்படுவது, எப்போதும் சோர்வுடன் காணப்படுவது, உடலின் ஆற்றலை மட்டுப்படுத்துவது, மனநிலை மாற்றம், மன அழுத்தம் உள்ளிட்ட பொதுவான அறிகுறிகள் ஏற்படும். அதேபோன்று அதிகப்படியான முடி உதிர்வது, குறைந்தளவில் முடி வளருவது போன்ற அறிகுறிகளும் வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படுகிறது. இதை நீங்கள் சரியாக கவனிக்காமல் விட்டால், அடுத்தடுத்த உடல் பிரச்னைகள் ஏற்படக் காரணமாக அமையும்.
தோலில் சிராய்ப்பு மற்றும் அரிப்பு, முகத்தில் பெரு ஏற்படுவதற்கும் வைட்டமின் டி குறைபாடு தான் முக்கிய காரணம். ஒருசிலருக்கு தோற்றமே முதிய வயது போல மாறிவிடும். இதுபோன்ற புற உடல்சார்ந்த அறிகுறிகளை கவனிக்காமல் விட்டால், அடுத்து அது எலும்பு அமைப்பை தாக்கக்கூடும். எலும்பு பலவீனம், ஆஸ்டியோபோரோசிஸ், எலும்பு வலி, தசை இழுப்பு, தசை பலவீனம், தீவிர தசை வலி மற்றும் மூட்டு விறைப்பு. போன்ற பிரச்னைகள் அடுத்தடுத்து ஏற்படும்.
சூரிய ஒளியில் குறைவாக வெளிப்படும் நபர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு அதிகமாக இருக்கும். அதேபோல பத்தியம் இருப்பவர்கள் பலருக்கும் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் அவர்களுக்கு பால் பொருட்களால் ஒவ்வாமை ஏற்படும். லாக்டோஸ் சகிப்புத்தன்மை அவர்களிடம் இருக்காது. வீகனிசம், ஓவோ-சைவ வழி உணவுகளை பின்பற்றுபவர்களிடம் வைட்டமின் டி குறைபாடு அதிகம் உள்ளது.
பூசணிக்காய் விதைகளில் குவிந்துள்ள நற்குணங்கள்..!!
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், முதியவர்கள், கருமையான சருமம் உள்ளவர்கள், கொழுப்பை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்தும் நிலைமைகள் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் அல்லது இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்கள் உள்ளிட்டோருக்கு வைட்டமின் டி குறைபாடுடைய வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இனிமேல் உருளைக் கிழங்கு தோல்களை சீவி தூக்கிப் போட்றாதீங்க..!! அவ்வளவும் சத்துங்க..!!
இதுதவிர, உடல் பருமன் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் வைட்டமின் டி அளவு குறைவாக இருப்பதாக ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வுகள் கூறுகின்றன. வைட்டமின் டி அதிகப்படியான கொழுப்பு திசுக்களில் குவிகிறது, ஆனால் தேவைப்படும்போது உடலுக்கு எளிதில் கிடைக்காது. விரும்பத்தக்க இரத்த அளவை அடைய அதிக அளவு வைட்டமின் டி கூடுதல் தேவைப்படலாம். மாறாக, பருமனானவர்கள் உடல் எடையை குறைக்கும் போது, அவர்களுடைய உடலில் தங்கியுள்ள வைட்டமின் டி அளவு அதிகரிக்கும் என்று ஹார்வார்டு பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.