இனிமேல் உருளைக் கிழங்கு தோல்களை சீவி தூக்கிப் போட்றாதீங்க..!! அவ்வளவும் சத்துங்க..!!
இந்தியக் குடும்பங்களில் உருளைக் கிழங்குகள் இன்றியமையாத காய் தான். அசைவம் சாப்பிடுபவர்களும் சைவர் சாப்பிடுவோரும் விரும்பி உண்ணக் கூடியதாக உருளைக் கிழங்குகள் உள்ளன. பொதுவாக உருளையில், அதனுடைய கிழங்குப் பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, அதனுடைய தோளை நீக்கிவிடுவது வழக்கம். ஆனால் உண்மையில் கிழங்கில் தோலில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் உண்டு. அதேபோன்று பல்வேறு நோய்களுக்கு அது எதிர்ப்புச் சக்தியாகவும் செயல்படுகிறது. இன்னும் உருளைக் கிழங்கு தோலிலுள்ள மகிமைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
potato
எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்
உருளைக் கிழங்கு தோலில் வைட்டமின் சி அதிகப்படியாக உள்ளது. இது ஆண்டிஆக்ஸிடண்டாக செயல்பட்டு, உடலுக்கு பல நோய் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இதில் உயர்ரக கால்ஷியம் மற்றும் பி-காம்பளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன. இதன்காரணமாக நமது உடலில் அமைந்துள்ள எதிர்ப்புச் சக்தி மண்டலங்கள் வலுவுடன் இருக்கும்.
புற்றுநோயை எதிர்த்து செயல்படும்
உருளைக்கிழங்கு தோல்களில் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன, அவை சக்திவாய்ந்த ஆண்டிஆக்ஸிடண்டாக செயல்படுகின்றன. மேலும், அவற்றில் குளோரோஜெனிக் அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதன்காரணமாக உடலை புற்றுநோயிலிருந்து பாதிப்பில் இருந்து பாதுகாக்கின்றது.
கொலஸ்ட்ராலை குறைக்கும்
இதில் நார்ச்சத்து மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் அதிகளவில் உள்ளன. மேலும் பாலிஃபீனால்கள் மற்றும் கிளைகோல்கலாய்டுகள் கூட அதிகம் காணப்படுகின்றன. அதன்காரணமாக, இதை அளவாக உட்கொண்டு வருபவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் கொழுப்பை குறைக்க முயற்சிப்பவர்கள், உருளைக் கிழங்கை எண்ணெய்யில் சமைக்காமல் அவித்து சாப்பிடுவது நல்ல பலனை தரும்.
மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறி- காது வழியாகவும் கேட்கலாம்..!!
இருதய ஆரோக்கியம் மேம்படும்
உருளைக் கிழங்கு தோல்களை சருமத்துக்கு தடுவதால் நிறைய பலன்கள் கிடைக்கும். ஏனென்றால் அதில் பாக்டீரியா எதிர்ப்பு, பீனாலிக் மற்றும் ஆண்டிஆக்சிடண்ட் கலவைகள் உள்ளன. இதன்காரணமாக அதை தடுவதும் போது சருமம் பளிச்சிடுகிறது மற்றும் பொலிவு பெறுகிறது. மேலும் உருளைக் கிழங்கு தோல்களில் உயர்ரக பொட்டாசியம் இடம்பெற்றுள்ளதால், அது மாரடைப்பு மற்றும் ஸ்டோர்க் போன்ற பாதிப்புகளை வரவிடாமல் தடுக்கிறது.
எலும்புகளுக்கு மிகவும் நல்லது
பொதுவாகவே உருளைக் கிழங்கு தோல்களில் பொட்டாசியத்துடன் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் சத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதை அவ்வப்போது சாப்பிடுவதால் எலும்பு உறுதியுடன் இருக்கும். மேலும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் செய்கின்றன.
நீரிழிவு பிரச்னையால் பறிபோகும் பார்வை- தடுப்பதற்கான 4 வழிமுறைகள்..!!