MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறி- காது வழியாகவும் கேட்கலாம்..!!

மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறி- காது வழியாகவும் கேட்கலாம்..!!

உலகளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக மாரடைப்பு உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் சுமார் 17.9 மில்லியன் மக்கள் இருதய நோய் பிரச்னையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இது அப்போதைய மக்கள்தொகையில் 31 சதவீதமாகும். இவற்றில் 85 சதவீத உயிரிழப்பு மாரடைப்பால் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இத்தகைய ஆபத்தான புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் உள்ள முதன்மையான காரணங்களில் ஒன்று, மாரடைப்பு திடீரென தாக்கும் திறன் கொண்டதாக உள்ளது. எந்தவிதமான முன் அறிகுறிகள் எதுவுமின்றி திடீரென ஏற்படக்கூடியதாக மாரடைப்பு பிரச்னை உள்ளது. ஒருவேளை வயிற்று எரிச்சல், நெஞ்சரிச்சல் மற்றும் செரிமானக் கோளாறு போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும், அதை பலரும் பெரிதாக எடுத்துகொள்வது கிடையாது. அந்த வகையில் மாரடைப்புக்கான சில எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து அடுத்தடுத்து பார்க்கலாம். 

2 Min read
Author : Dinesh TG
Published : Oct 08 2022, 01:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
heart attack

heart attack

மாரடைப்புக்கான அறிகுறிகள்

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, மார்பின் மையத்தில் அல்லது இடது பக்கத்தில் அடிக்கடி அசவுகரியம் ஏற்படும். இந்த பிரச்னை சில நேரங்கள் அல்லது நிமிடங்கள் நெஞ்சுப் பகுதியில் நீடிக்கும். வலியுடன் கூடிய அழுத்தம், வெறும் அழுத்தம், வேதனை போன்றவை குறிப்பிட்ட இடங்களில் உருவாகும். இதனால் உடல் பலவீனமடைந்து, லேசான தலை சுற்றல், மயக்கம் வரும். உடல் முழுக்க வியர்த்துக் கொட்டும்.

25

காது காட்டும் அறிகுறியை காது கொடுத்து கேளுங்கள்

காது வழியாக தெரியவரக்கூடிய அறிகுறிகள் மூன்று நிலைகளில் உள்ளன. முதல் படிநிலை அறிகுறிகளாக நாம் பார்ப்பது, காது மடலில் ஒரு சிறிய அளவு சுருக்கம் இருக்கும். இரண்டாம் படிநிலையில் காது மடல் முழுவதும் மேலோட்டமான மடிப்புகளில் சுருக்கம் வரும். அதை தொடர்ந்து காது மடல் முழுவதும் மடிப்புகள் பாதிக்கு மேல் பரவும். 

35

யாருக்கெல்லாம் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்

ஆண்களில் 45 வயதை கடந்தோருக்கும், பெண்களில் 56 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இருதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. உயர் ரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் பிரச்னை, உடல் பருமன், நீரிழிவு நோய், ஊட்டச்சத்து குறைபாடு போன்றோருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளது. புகைப் பொருட்கள் பயன்படுத்துவது, குடிப் பழக்கம், வேலையே செய்யாமல் சோம்பலுடன் இருப்பவர்கள், அதிகளவில் ஸ்ட்ரெஸ் கொண்டவர்கள், கெட்ட உணவுப் பழக்கம் கொண்டவர்கள் ஆகியோருக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகளவில் உள்ளன.

பலவீனமான ஆண்மைக் கொண்ட ஆண்களை கண்டறிவது எப்படி? இதோ 5 வழிகள்..!!

45
heart attack

heart attack

மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள்

ஆரோக்கியமான வாழ்வியலுக்கு மாறுவது தான், மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான ஒரே வழி. சுத்தமான உணவுகளை சாப்பிடுவது, போதிய இடைவெளியில் உடற்பயிற்சி மேற்கொள்வது, ஸ்ட்ரெஸை மேலாண்மை செய்ய பழகிக்கொள்வது மற்றும் மற்ற உடல்நல பிரச்னைகளை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வது போன்றவை வளமான இருதய நலனை வழங்கும். 

முதுகு வலி, மூச்சுத் திணறல் கூட புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்- முழு விபரம் உள்ளே..!!

55

சி.பி.ஆர் செய்ய பழகிக் கொள்ளுங்கள்

சி.பி.ஆர் என்பது மாரடைப்பு அல்லது மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு செய்யப்படும் அவசரகால உயிர்காக்கும் செயல்முறையாகும். அதனால் இரத்த ஓட்டத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது, இதயத்தை உந்துகிறது, சுவாசத்தை மீட்டெடுக்கிறது மற்றும் இதயத் துடிப்பு நின்றுபோன ஒரு நபரின் இதயத் துடிப்பை மீட்டெடுக்கிறது. மருத்துவ உதவி கிடைக்கும் வரை சி.பி.ஆர் செயல்முறையை செய்து வருவது பல்வேறு வகையில் உதவியாக இருக்கும்.

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Recommended image1
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image2
5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
Recommended image3
பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved