MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • பிரியாணி உடன் சேர்த்து இந்த 10 உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க

பிரியாணி உடன் சேர்த்து இந்த 10 உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க

பிரியாணி பிடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பிரியாணி என பெயரை கேட்டதுமே நாவில் எச்சில் ஊறி விடும். ஆனால், அதே பிரியாணியுடன் நாம் தெரியாமல் சேர்த்துக்கொள்ளும் சில உணவுகள், அந்த உணவின் நன்மையை கெடுத்து உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும்.

1 Min read
Author : Priya Velan
Published : May 08 2026, 04:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
குளிர்ந்த குளிர்பானங்கள் :
Image Credit : Getty

குளிர்ந்த குளிர்பானங்கள் :

பிரியாணியில் உள்ள மசாலா மற்றும் எண்ணெய் செரிக்க வெப்பம் தேவை. ஆனால், ஐஸ் போட்ட குளிர்பானங்களை குடிக்கும் போது செரிமானத் தீ அணைந்து, கொழுப்பு அப்படியே உடலில் தங்கிவிடும். இதற்கு பதில் நன்னாரி சர்பத் அல்லது சீரகத் தண்ணீர் சிறந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
210
அளவுக்கு அதிகமான தயிர் பச்சடி
Image Credit : Getty

அளவுக்கு அதிகமான தயிர் பச்சடி

பிரியாணிக்கு தயிர் பச்சடி பெஸ்ட் காம்போ தான். ஆனால், தயிர் அதிக புளிப்பாக இருந்தால் அது நெஞ்செரிச்சலை உண்டாக்கும். தயிரில் உள்ள கால்சியமும், பிரியாணி மசாலாவும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

Related Articles

Related image1
Food : மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத 10 உணவுகள்.! இதெல்லாம் விஷமாக மாறுமாம்.! புற்றுநோய் ஆபத்து வரும்.! எச்சரிக்கை.!
Related image2
Junk Food : 60 நாள் ஜங்க் ஃபுட் சாப்பிடாம இருந்தா உடம்புல என்னலாம் நடக்கும் தெரியுமா? இவ்வளவு நன்மைகளா?
310
இனிப்புப் பண்டங்கள் :
Image Credit : Getty

இனிப்புப் பண்டங்கள் :

பிரியாணி சாப்பிட்ட உடனே ஜாமூன் அல்லது பாயசம் சாப்பிடும் வழக்கம் நமக்கிருக்கிறது. பிரியாணியிலேயே அதிக கார்போஹைட்ரேட் இருப்பதால், மீண்டும் சர்க்கரை சேரும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு எகிறி, உடனே தூக்கத்தையும் சோர்வையும் வரவழைக்கும்.

410
டீ அல்லது காபி :
Image Credit : Getty

டீ அல்லது காபி :

பிரியாணி சாப்பிட்ட அரை மணி நேரத்திற்குள் டீ குடிக்காதீர்கள். டீயில் உள்ள 'டானின்' (Tannin), பிரியாணியில் உள்ள இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதைத் தடுத்துவிடும்.

510
சிட்ரஸ் பழங்கள் :
Image Credit : Getty

சிட்ரஸ் பழங்கள் :

பிரியாணி சாப்பிட்ட பிறகு ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற புளிப்பு பழங்களைச் சாப்பிடுவது வயிற்றில் அமிலத்தன்மையை (Acidity) அதிகரித்து, வயிற்றுப் புண்ணுக்கு வழிவகுக்கும்.

610
பப்பாளி பழம்
Image Credit : Getty

பப்பாளி பழம்

பிரியாணியில் இறைச்சி (ஆடு அல்லது கோழி) இருப்பதால், அதை செரிக்க உடல் போராடும். அதோடு பப்பாளி சேரும்போது சிலருக்கு வயிறு மந்தமாகி, செரிமானக் கோளாறு ஏற்படலாம்.

710
ஐஸ்கிரீம் :
Image Credit : Getty

ஐஸ்கிரீம் :

சூடான பிரியாணிக்கு பின் ஜில்லிடும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது பற்களுக்கு மட்டுமல்ல, வயிற்றுக்கும் எதிரி. இந்த வெப்ப நிலை மாற்றம் செரிமான என்சைம்களின் செயல்பாட்டை முடக்கிவிடும்.

810
8. உருளைக்கிழங்கு சிப்ஸ் :
Image Credit : Getty

8. உருளைக்கிழங்கு சிப்ஸ் :

ஏற்கனவே எண்ணெயும் நெய்யும் கலந்த பிரியாணியுடன், மீண்டும் எண்ணெயில் பொரித்த சிப்ஸ் அல்லது அப்பளம் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

910
முட்டைக்கோஸ் சேர்த்த சாலட் :
Image Credit : Getty

முட்டைக்கோஸ் சேர்த்த சாலட் :

பிரியாணியுடன் பச்சையாக முட்டைக்கோஸ் (Cabbage) சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இது வயிற்றில் வாயுத் தொல்லையை (Bloating) உண்டாக்கி, பிரியாணி சாப்பிட்ட திருப்தியையே கெடுத்துவிடும்.

1010
அதிகப்படியான தண்ணீர்
Image Credit : Getty

அதிகப்படியான தண்ணீர்

பிரியாணி சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் குடிக்காதீர்கள். இது வயிற்றில் உள்ள ஜீரண நீரை நீர்த்துப்போகச் செய்யும். சாப்பிட்டு 20 நிமிடங்கள் கழித்து இதமான வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதே முறை.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
உணவு
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
உணவு சேர்க்கைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bad Cholesterol: கெட்ட கொலஸ்ட்ராலை எகிற வைக்கும் 5 தினசரி பழக்கங்கள்!
Recommended image2
Soft Chapati: சாஃப்ட் சப்பாத்தி வேண்டுமா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
Recommended image3
Traditional Drinks: வெயிலுக்கு இதமான 10 இந்திய பாரம்பர்ய பானங்கள்... டிரை பண்ணிப் பாருங்க!
Related Stories
Recommended image1
Food : மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத 10 உணவுகள்.! இதெல்லாம் விஷமாக மாறுமாம்.! புற்றுநோய் ஆபத்து வரும்.! எச்சரிக்கை.!
Recommended image2
Junk Food : 60 நாள் ஜங்க் ஃபுட் சாப்பிடாம இருந்தா உடம்புல என்னலாம் நடக்கும் தெரியுமா? இவ்வளவு நன்மைகளா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved