MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உடற்பயிற்சி
  • Walking Tips: இரவு சாப்பிட்ட பிறகு 10 நிமிஷம் நடந்தால் இத்தனை நன்மைகளா? உடம்பில் நடக்கும் அந்த ‘மேஜிக்’

Walking Tips: இரவு சாப்பிட்ட பிறகு 10 நிமிஷம் நடந்தால் இத்தனை நன்மைகளா? உடம்பில் நடக்கும் அந்த ‘மேஜிக்’

Walking Tips: உடல் எடை அதிகரித்து கொண்டே செல்கிறது என கவலைப்படுகிறீர்களா? தினமும் இரவு சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் ஏராளமான நன்மைகள் உள்ளன. அது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 12 2026, 08:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Walking Tips; இரவு சாப்பிட்டதும் நடந்தால் இத்தனை நன்மைகளா?
Image Credit : AI

Walking Tips; இரவு சாப்பிட்டதும் நடந்தால் இத்தனை நன்மைகளா?

தினமும் இரவு உணவிற்குப் பிறகு ஒரு 10 நிமிடங்கள் நடப்பதால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. சாப்பிட்ட உடனே நடப்பதன் மூலம் அசிடிட்டி மற்றும் செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். இது உடலில் உள்ள கலோரிகளை எரித்து, உடல் எடை குறையவும் உதவுகிறது. நாம் சாப்பிட்ட உணவு கொழுப்பாக மாறாமல் தடிப்பதற்கும் இந்த நடைப்பயிற்சி மிகவும் அவசியமானதாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மேம்பட்ட செரிமானம்
Image Credit : Getty

மேம்பட்ட செரிமானம்

சாப்பிட்ட பிறகு நடக்கும்போது, வயிற்றில் இருக்கும் உணவு விரைவாக நகரத் தொடங்குகிறது. இதனால் செரிமான செயல்முறை இன்னும் திறமையாக நடைபெறுகிறது. இந்த நடைப்பயிற்சி குடல் இயக்கத்தைத் தூண்டி, வயிறு உப்பசம், நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்கிறது. உடலுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்காமல், செரிமான மண்டலம் தனது வேலையைச் சரியாகச் செய்ய இந்தச் சிறிய நடைப்பயிற்சி பெரிதும் உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு

இரண்டாவது முக்கியமான காரணம், இரத்த சர்க்கரையின் அளவை இது சீராக வைக்கிறது. சாப்பிட்ட பிறகு சும்மா அமர்ந்திருப்பதை விட, வெறும் 10 நிமிடங்கள் நடந்தால் கூட, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிப்பதைக் (குறைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இரவு உணவிற்குப் பின் எந்தவொரு உடற்பயிற்சியும் செய்யாமல் அப்படியே படுத்துவிட்டால், உடல் பருமன் அதிகரிப்பதுடன் உடலில் குளுக்கோஸ் அளவும் கூடிவிடும்.

Related Articles

Related image1
Daily Walking Benefits: டெய்லி வாக்கிங் போனாலே டிப்ரஷன் குறையுமா? நிபுணர்கள் வெளியிட்ட சூப்பர் தகவல்
Related image2
Walking secrets தினமும் 10,000 ஸ்டெப்ஸ் கண்டிப்பாக நடக்கணுமா? 5 ரகசிய உண்மைகள்
35
ஆழந்த உறக்கம்
Image Credit : Getty

ஆழந்த உறக்கம்

கொஞ்ச நேரம் நடந்துவிட்டுத் தூங்கச் சென்றால், அது செரிமானத்திற்கு நல்லது செய்வதுடன், ஆழ்ந்த தூக்கத்திற்கும் வழிவகுக்கும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தினமும் இதனைச் செய்து பார்த்தால் நல்ல பலன் கிடைக்கும். உடல் எடை அதிகரிக்காமல் இருக்க இது ஒரு சிறந்த, எளிமையான வழியாகும். இந்த ஆய்வை ஒடாகோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதய ஆரோக்கியம்

இரவு உணவிற்குப் பின் நடப்பது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுவதால் இதய நோய்கள் வரும் அபாயம் குறைகிறது.

45
மன அழுத்தம் குறைதல்
Image Credit : Getty

மன அழுத்தம் குறைதல்

நடக்கும்போது உடம்பில் 'எண்டோர்பின்' எனப்படும் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் சுரக்கின்றன. இது நாள் முழுவதும் இருந்த மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை அமைதிப்படுத்த உதவும்.

வளர்சிதை மாற்றம் அதிகரிப்பு

சாப்பிட்ட உடனே நடப்பது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை உயர்த்துகிறது. இதனால் நாம் தூங்கும் போதும் உடல் கலோரிகளைத் தொடர்ந்து எரித்துக் கொண்டே இருக்கும்.

55
இரத்த அழுத்தம் சீராகும்
Image Credit : Pixabay

இரத்த அழுத்தம் சீராகும்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இரவு உணவிற்குப் பின் லேசாக நடப்பது, அவர்களின் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும் என பல ஆய்வுகள் கூறுகின்றன.

முக்கிய குறிப்பு: இரவு உணவிற்குப் பின் வேகமாக ஓடவோ அல்லது கடினமான உடற்பயிற்சிகளையோ செய்யக் கூடாது. மிதமான வேகத்தில் மட்டுமே நடக்க வேண்டும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சுகாதார நன்மைகள்
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Eggs Per Day: ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம்?
Recommended image2
Daily Walking Benefits: டெய்லி வாக்கிங் போனாலே டிப்ரஷன் குறையுமா? நிபுணர்கள் வெளியிட்ட சூப்பர் தகவல்
Recommended image3
Exercise: 40 வயதிற்குப் பிறகு உடற்பயிற்சி: நடுத்தர வயதில் பெண்கள் வலிமை பெற எளிய வழிகள்
Related Stories
Recommended image1
Daily Walking Benefits: டெய்லி வாக்கிங் போனாலே டிப்ரஷன் குறையுமா? நிபுணர்கள் வெளியிட்ட சூப்பர் தகவல்
Recommended image2
Walking secrets தினமும் 10,000 ஸ்டெப்ஸ் கண்டிப்பாக நடக்கணுமா? 5 ரகசிய உண்மைகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved