கார்டியோவுக்கு ஈடான ரேஸ் வாக்கிங்!! முழு விவரங்கள்
கார்டியோ பயிற்சி செய்வதற்கு ஈடான பலன்களை ரேஸ் வாக்கிங் மூலம் பெற முடியும்.

நமது உடலைத் தொடர்ந்து இயக்கத்தில் வைப்பதற்கான சிறந்த வழியாக நடைபயிற்சி கருதப்படுகிறது. உலக அளவில் அனைத்து வயதினரும் செய்யக் கூடிய சிறந்த பயிற்சி என்றால் அது நடைபயிற்சிதான். இது மிதமான பயிற்சி என்பதால் மூட்டுகளில் அதிக அழுத்தம் ஏற்படுவதில்லை.
ரேஸ் வாக்கிங்:
ரேஸ் வாக்கிங் என்ற பந்தய நடைபயிற்சி என்பது வேகமாக நடப்பதாகும். காயங்களில் இருந்து மீண்டு வருவோர், ஏதேனும் இதய பிரச்சனைகள், நாள்பட்ட நோய்கள் உள்ள அனைவரும் நடைபயிற்சி செய்வதால் கணிசமான பலன்களை பெற முடியும். அதிலும் ரேஸ் வாக்கிங் செய்வதால் கார்டியோவின் முழு பலன்களையும் பெறலாம்.
ரேஸ் வாக்கிங் உங்களுடைய இடுப்பு, முழங்கால்களை வலுப்படுத்த உதவுகிறது. கடுமையான கார்டியோ உடற்பயிற்சிகளை செய்வதை விடவும், நீண்டகால ஆரோக்கியத்திற்கு ரேஸ் வாக்கிங் பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நீங்கள் மிதமான வேகத்தில் நடப்பதை விட வேகமாக ரேஸ் வாக்கிங் செல்லும் போது இதயத்துடிப்பு வேகமாக இருக்கும். இதனால் கார்டியோ பயிற்சிக்காண விளைவுகளை பெற முடியும். வேகமாக கைகளை வீசி நடப்பது, எட்டு தூரமாக வைப்பது இடுப்பு, பிட்டம், கன்றுகள் என மேல் மற்றும் கீழ் உடலுக்கும் சேர்த்து முழு உடலுக்கான சிறந்த பயிற்சியாக இருக்கும்.
கவனம்!
ரேஸ் வாக்கிங் சாதாரண நடைபயிற்சியை விட சற்று சவாலானது. இது உங்களுடைய இதயத்துடிப்பை அதிகரிப்பதால் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும். நீங்கள் இப்போதுதான் முதல் முறையாக நடக்க தொடங்குகிறீர்கள் என்றால் முதலில் மிதமான வேகத்தில் ஆரம்பித்து பின்னர் வேகமாக நடக்க தொடங்கலாம். ஏற்கனவே நடைபயிற்சி செய்த அனுபவம் உள்ளவர்கள் தொடர்ச்சியாக வேகமாக நடக்க முடியாவிட்டால், இடைவெளி விட்டு நடக்கலாம்.