இப்படியும் வாக்கிங் போலாமா? வைரலாகும் ஃபார்ட் வாக்கிங் சுவாரசிய தகவல்கள்!!
ஃபார்ட் வாக்கிங் குறித்தும் அதன் முக்கிய ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இங்கு காணலாம்.

What is Fart Walk and its Benefits
குறைந்த முயற்சியில் நீண்ட நாள் வாழ்வதற்கான ரகசியம் உண்டெனில் அது ஃபார்ட் வாக்கிங் என்றே சொல்லலாம். ஃபார்ட் வாக் என்பது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்கக் கூடியது. இதனை முதன்முதலாக கனேடிய சமையல் புத்தக எழுத்தாளரான மைர்லின் ஸ்மித் என்பவர் பயன்படுத்தியுள்ளார்.
ஃபார்ட் வாக்கிங்
சாப்பிட்ட பின் லேசான நடைப்பயிற்சி செய்வதே ஃபார்ட் வாக்கிங் ஆகும். இந்த பயிற்சியால் குடல் இயக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. வாயு, வயிறு உப்புசம், மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகள் நீங்கும். மேலும் ஃபார்ட் வாக்கிங் குறித்த தகவல்களை இங்கு காணலாம்.
எப்போது நடக்க வேண்டும்?
இரவு சாப்பிட்ட பின்னர் ஃபார்ட் வாக்கிங் செய்வது உங்களுடைய செரிமானத்திற்கு அற்புதமான நன்மைகளை செய்யும். செரிமானம் சரியாக இருந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் விரைவில் வெளியேறும். இதனால் பல நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். நார்ச்சத்து உணவு அதிகம் சாப்பிட்டால் சிலருக்கு வாயு வெளியேறும். நடக்கும்போது வாயு வெளியேறுவது பலருக்கும் ஏற்படக் கூடியதுதான். சாப்பிட்டு இரண்டு நிமிடங்கள் டைப் 2 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு குறையும். உணவுக்கு பின் நடப்பது குடல் இயக்கத்தை மேம்படுத்தி வாயு, மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கும்.
புற்றுநோய் வராது!!
ஃபார்ட் வாக்கிங் செல்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் குறைகிறது. மிதமான வேகம் முதல் விறுவிறுப்பான வேகம் வரை நடைபயிற்சியில் ஒவ்வொரு வகையான வேதத்திற்கும் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. இதனை எந்த இடத்திலும், எந்த உபகரணமும் இன்றி செய்ய முடியும் என்பது கவனிக்கத்தக்க விஷயம்.
கவனிக்க!!
சாப்பிட்ட பின்னர் நடைபயிற்சி செய்வது கூடுதல் நன்மைகளை தரக்கூடியது. இது செரிமானத்திற்கு உதவும். சர்க்கரை நோயாளிகள் உணவுக்கு பின் குறுநடை போடுவது அவர்களுடைய இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவுக்கு பின் 10 முதல் 15 நிமிடங்கள் நடக்கலாம்.