வாக்கிங் விட ஜாக்கிங் சிறந்ததா?டாக்டர் என்ன சொல்றாங்க?
வாக்கிங் அல்லது ஜாக்கிங் இரண்டில் எது சிறந்தது என டாக்டர்கள் தரப்பில் என்ன கூறுகிறார்கள் என இங்கு காணலாம்.

Walking vs Jogging Which Is Best : உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடல் செயற்பாடுகளில் ஈடுபடுவது அவசியம். அனைத்து தரப்பினரும் எளிமையாக செய்யக்கூடிய பயிற்சி என்றால் நடைபயிற்சிதான். ஆனால் நடைபயிற்சி ஒட்டுமொத்த உடலுக்கும் பயிற்சியாக இருக்குமா? ஜாக்கிங் அதை விட சிறந்ததா? என மக்களிடையே எழும் சந்தேகங்கள் உள்ளன.
எடையை குறைக்க, சர்க்கரை நோய் கட்டுக்குள் வர, இதய நோய்களுக்கு என பல நோய்கள் கட்டுக்குள் இருக்க நடைபயிற்சியும், மெதுவாக ஓடும் ஜாக்கிங் பயிற்சியும் நல்ல பலன்களை தரும். ஆனால் இவற்றில் அதிக தூரம் நடப்பதா, கொஞ்ச தூரம் ஓடுவதா? எது நல்லது என டாக்டர் சொல்கிறார்கள் தெரியுமா? வாங்க பார்ப்போம்.
கடினம்!
வாக்கிங் அல்லது ஜாக்கிங் இரண்டில் ஏதேனும் ஒன்றுதான் நல்லது என குறிப்பாக சொல்வது கடினமான விஷயம். ஓடுவதால் நேரம் மிச்சமாகும். 1 கிமீ ஓடினால் 6 முதல் 8 நிமிடங்கள் ஆகலாம். சிலருக்கு அதைவிடவும் குறைவாகவே நேரம் எடுக்கும். ஆனால் நடக்க சற்று கூடுதல் நேரம் எடுக்கும். 2 கிமீ நடக்க வேண்டும் என்றால் 20 முதல் 25 நிமிடங்கள் வரை ஆகும். நடப்பதை விட ஓடும்போது அதிக கலோரிகள் ஆகும்.
ஜாக்கிங் vs வாக்கிங்;
ஓடுவது நடப்பதை காட்டிலும் அதிகமான ஆற்றலை எடுத்து கொள்ளும். இதனால் அதிக ஆற்றல் எரிக்கப்படும். நடப்பதைவிடவும் ஓடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால் ஜாக்கிங் செல்வதால் சில பிரச்சனைகளும் உள்ளன. மூட்டுகள், தசைநார்களின் மீது அதிகமான அழுத்தம் ஏற்படும். நடப்பது அப்படியில்லை. அதுமட்டுமின்றி நடக்கும்போது காயங்கள் ஏற்படும் அபாயம் குறைவு. ஏற்கனவே அதிக உடல் எடை, மூட்டு வலி, இதய நோய்கள் உள்ளவர்கள் ஓடுவது கடினமாக இருக்கும். வலி ஏற்படலாம். இவர்களுக்கு நடப்பது நல்லது. முதியோர் ஜாக்கிங் செல்வதை விட நடக்கலாம். அவரவர் உடலமைப்புக்கு ஏற்ற பயிற்சிகளை தேர்வு செய்யலாம்.
ஒரு வாரத்தில் 300 நிமிடங்கள் லேசான உடற்பயிற்சி செய்யவேண்டும். இந்த இலக்கை அடைய முடியாவிட்டால் நடைபயிற்சியுடன் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்யலாம். நடைபயிற்சி செய்யமுடியாவிட்டால் ஜாக்கிங் செய்யலாம்.