70 வயதில் ஆரோக்கியம்! எவ்வளவு நேரம் வாக்கிங் செல்ல வேண்டும்?
70 வயதில் எவ்வளவு நேரம் வாக்கிங் செல்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதை காணலாம்.

Health at 70 How Long Should You Walk : நடைபயிற்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நல்ல பலன்களை தரக் கூடியது. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் நடக்கத் தொடங்கலாம். நடைபயிற்சி என்பது எந்த உபகரணங்களும் இல்லாமல் எளிமையாக செய்யக் கூடிய கார்டியோ பயிற்சியாகும். அதனால் தான் வயதானவர்களை தினமும் வாக்கிங் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்தப் பதிவில் 70 வயதில் எவ்வளவு நேரம் வாக்கிங் செல்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதை காணலாம்.
வயதாகும் போது பெரியவர்களுக்கு சமநிலை பாதிக்கும். அவர்கள் நடக்கும்போது தடுமாறலாம். மனதளவில் தனிமை அவர்களை பாதிக்கக் கூடும். இந்தப் பிரச்சனைகளை தவிர்க்க நடைபயிற்சி உதவியாக இருக்கும். தினமும் நடப்பது நாள்பட்ட நோய்களின் தாக்கத்தைக் குறைக்கும்.
நடைபயிற்சி செய்வதால் உடலுக்கு வலு கிடைக்கும். மேல் உடல், கீழ் உடல் தசைகள் வலுவாகும். இதய ஆரோக்கியம் மேம்படும். இரத்த ஓட்டம் சீராகும். உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்த ஓட்டம் சீராவதம் மூளை செயல்பாடு நன்றாக இருக்கும். இதனால் ஞாபக மறதி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் குறைவு.
எவ்வளவு நேரம் வாக்கிங்?
வயதானவர்கள் ஒரு வாரத்தில் 150 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும். இதற்கு அவர்கள் தினமும் 30 நிமிடங்கள் நடப்பதை பழக்கப்படுத்த வேண்டும். 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது அவசியம்.