தினமும் 2 கி.மீ வாக்கிங் தான் சிறந்ததா? அப்ப ரன்னிங் வேஸ்ட்?!
ஒரு கிமீ நடைபயிற்சி அல்லது 2 கிமீ ரன்னிங் எது உடல்நலத்திற்கு சிறந்தது என இங்கு காணலாம்.

2 km Walking vs 1 km Running Which is Best : வாக்கிங் மற்றும் ரன்னிங் இரண்டும் உடல்நலத்திற்கு சிறந்ததுதான். உடல் எடை மேலாண்மை, நாள்பட்ட நோய்களின் தாக்கம் ஆகியவை குறையும். 1 கிமீ ரன்னிங் அல்லது 2கிமீ வாக்கிங் எது சிறந்தது என இந்த பதிவில் காணலாம்.
கலோரிகளை எரிக்கவும், சிறந்த கார்டியோ பயிற்சியாகவும் 2 கிமீ வாக்கிங் விட ரன்னிங் சிறந்தது என சொல்லப்படுகிறது. இரண்டுமே ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் ஓடுவது சிறந்த கார்டியோவாக இருக்கிறது. ஒரு கிலோமீட்டர் ஓடுவதால் அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
வாக்கிங் செல்வதுடன் ஒப்பிடும்போது ரன்னிங் குறைவான நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கும். உதாரணமாக ஒரு கிலோமீட்டர் நீங்கள் ஓடும் போது கிட்டத்தட்ட 60 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. ஒரு கிலோமீட்டர் ஓட்டம் 10 நிமிடங்கள் அதிகபட்சமாக எடுக்கலாம். இரண்டு கிலோமீட்டர் வாக்கிங் செல்லும் போது 25 நிமிடங்கள் முதல் வேகத்தை பொறுத்து மாறுபடலாம். 100 முதல் 140 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
ரன்னிங் vs வாக்கிங்
ரன்னிங் அல்லது வாக்கிங் இரண்டும் உடலுக்கு நல்லது. உங்களுக்கு ஏதேனும் காயங்கள் இருந்தால் ஓடுவதை தவிர்த்து நடக்கலாம். குறைவான நேரத்தில் அதிகமான கலோரிகளை எரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது ரன்னிங். இந்த காரணங்களுக்காக ஓடுபவராக இருந்தால் 2 கிமீ வாக்கிங்கை விட 1 கிமீ ரன்னிங் சிறந்த்தது.
நல்ல தூக்கம், சிறந்த மனநிலை போன்றவை உங்களுக்கு வேண்டும் என்றால் நடைபயிற்சி செய்யலாம். ஏதேனும் காயங்கள், மூட்டு பலவீனம் காணப்பட்டால் நடப்பதே சிறந்ததாக இருக்கும். ரன்னிங் அல்லது வாக்கிங் தனிப்பட்ட நபர்களின் விருப்பம்.