Vitamin E! பேரழகுக்கு ஆசைப்பட்டு அடிக்கடி வைட்டமின் ஈ ஆயில் முகத்தில் தடவுகிறீர்களா? அதனால் இவ்ளோ பாதிப்புகள்!
முகம் அழகு பெற வைட்டமின் ஈ மாத்திரைகளை பேஸ் பேக்கில் பயன்படுத்தும் பெண்கள் அதன் பக்க விளைவுகள் குறித்தும் அறிவது அவசியமாகிறது.
Tamil health updates Vitamin E Capsules effects: முகம் அழகு பெற பெண்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். பல க்ரீம்களையும், பவுடர்களையும் முகத்தில் பூசி கொள்வார்கள். அந்த வகையில் வைட்டமின் ஈ மாத்திரைகள் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இந்த மாத்திரையில் இருந்து எண்ணெயைப் பிரித்தெடுத்து, அதை முகத்தில் தடவுவது சீக்கிரமே முகத்தை பொலிவுற செய்வதாக சொல்லப்படுகிறது. ஆனால் அப்படி அடிக்கடி செய்தால் உங்கள் முகத்தை அதுவே கெடுத்துவிடும்.
அடிக்கடி வைட்டமின் ஈ மாத்திரைகளில் உள்ள ஆயிலை பயன்படுத்துவதால் சருமத்தில் சொறி, அரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். வைட்டமின் ஈ-யை தோலில் தடவுவது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். பலருக்கு தோல் அழற்சியை உண்டாக்கும். இது உங்கள் முகத்தின் அதிகப்படியான வீக்கம், கண்களில் எரிச்சல், புண்கள் அல்லது புண்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
வைட்டமின் ஈ மாத்திரைகளை பயன்படுத்துவது முகத்தை ஆரம்பத்தில் தெளிவாகக் காட்டலாம். நாளடைவில் தோலில் தடிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு தோலில் நிறமி பிரச்சனைகள் ஏற்படலாம். சருமத்தில் உணர்திறனையும் ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: மாம்பழம் கூட இதையெல்லாம் சாப்பிட்டால் இவ்ளோ பிரச்சனைகளா!?
வைட்டமின் ஈ ஆயில், கற்றாழை ஜெல் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவலாம். இதற்கு மாத்திரையில் இருந்து எண்ணெயை பிரித்தெடுத்து அதில் கற்றாழை ஜெல்லை போட்டு கொள்ள வேண்டும். இவை இரண்டையும் நன்கு கலந்து, இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். இப்படி பின்பற்றினால் பாதிப்பில்லாமல் பேரழகை பெற முடியும்.
இதையும் படிங்க: உலக பணக்காரரின் மகளாக இருந்தும் இஷா அம்பானி கூச்சம் இல்லாமல் செய்யும் காரியம்..! மகளை அரவணைக்கும் தாய்!!