மாம்பழம் கூட இதையெல்லாம் சாப்பிட்டால் இவ்ளோ பிரச்சனைகளா!?
மாம்பழத்துடன் மறந்தும் சாப்பிட கூடாத சில உணவுப் பொருட்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
மாம்பழத்தின் தித்திப்பான சுவையை விரும்பாதவர்கள் வெகு சிலரே. கோடை காலத்தில் மாம்பழ சீசன் தொடங்கி விடும். சந்தைகள் மாம்பழங்களால் நிரம்பி வழியும். பொதுவாக எல்லா உணவுகளுக்கும் உண்பதற்கு சில வழிமுறைகள் உண்டு. அதாவது மீன் உண்ணும்போது எப்படி சில உணவுகளை தவிர்க்க வேண்டுமோ அப்படிதான், மாம்பழம் உண்ணும்போது சில உணவுகளை உண்ணக் கூடாது. மீறி உட்கொள்ளும்போது சிலருக்கு வயிற்றுப் பிரச்சினைகள், வாந்தி, ஒவ்வாமை, தோல் பிரச்சினைகள் அல்லது வயிற்றுவலி போன்றவை ஏற்படும். அவற்றை மாம்பழத்துடன் சாப்பிடாமல் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
பாகற்காய்
பாகற்காய், வயிற்றுக்கு ஏற்ற உணவு என்பதால் சாதாரண நாட்களில் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதே நேரம் மாம்பழம் பாகற்காயின் எதிர் உணவு. சாப்பாட்டில் பாகற்காய் சேர்த்து, அதே நாளில் மாம்பழமும் சாப்பிட்டால் உடல் நலம் கெடும். மாம்பழம், பாகற்காய் இணையும்போது உடலில் எதிர்வினையை ஏற்படுத்துகிறது. இது உங்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
மிளகாய் காரத்தை அதிகம் விரும்புபவர்கள் தினமும் கூட மிளகாயை சமையலில் பயன்படுத்துவார்கள். அது தரும் வாசனை சமையலின் சுவையை அதிகரிக்கிறது. ஆனால் பச்சை மிளகாயை உணவில் சேர்த்து கொண்டால், அதனுடன் மாம்பழத்தை சாப்பிட வேண்டாம். மேலும் மாம்பழம் சாப்பிட்ட பிறகு பச்சை மிளகாயை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்கள் இவற்றை உட்கொண்டால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகும். மாம்பழம், மிளகாயை ஒன்றன் பின் ஒன்றாக சாப்பிடுவதற்கு இடையே குறைந்தது 3 முதல் 4 மணிநேர இடைவெளி இருக்க வேண்டும்.
அசைவம்
அசைவம் சாப்பிடுபவர்கள் மாம்பழத்தைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மாம்பழமும், இறைச்சியும் சேர்ந்தால் எளிதில் ஜீரணம் ஆகாது. இதனால் செரிமானத்தை பாதிக்கும். நல்ல காரசாரமான உணவுகளும் மாம்பழத்திற்கு நல்லதல்ல. இவை இரண்டும் சேர்ந்தால் உடலில் அல்சர், முகப்பரு ஆகிய தோல் நோய்கள் வரலாம். மாம்பழத்துடன் காரமான உணவு அல்லது குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
தயிர்
பலருக்கு மாம்பழத்துடன் தயிர் உண்ண பிடிக்கும். சிலர் மாம்பழ லஸ்ஸி செய்து குடிக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் இது பொருந்தாது. இதனால் உடலில் வெப்பமும், குளிர்ச்சியும் அதிகரிக்கும். சிலருக்கு மாம்பழம், தயிர் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் பிடிப்பு ஏற்படும்.
இதையும் படிங்க: தேயிலையை தலைமுடிக்கும் கூட பயன்படுத்துவாங்க.. தலைமுடி அசுர வேகத்தில் நீளமா அடர்த்தியா வளர! இத ட்ரை பண்ணுங்க!
தண்ணீர்
மாம்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. இதனால் உடலில் எதிர்மறையான விளைவு ஏற்படும். வயிற்றுவலி, அசிடிட்டி, வீக்கம் ஏற்படுகிறது. மாம்பழம் சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது.
குளிர்பானம்
மாம்பழம் உண்ட பின்னர் குளிர்பானங்கள் குடிக்கக்கூடாது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உடனடியாக அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை நோயாளிகள் இவற்றை ஒன்றாக உட்கொள்ளக் கூடாது.
இதையும் படிங்க: கோடையில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிக்கலாமா? அது நல்லதா!