தேயிலையை தலைமுடிக்கும் கூட பயன்படுத்துவாங்க.. தலைமுடி அசுர வேகத்தில் நீளமா அடர்த்தியா வளர! இத ட்ரை பண்ணுங்க!
தலைமுடிக்கு தேயிலை ஹேர் பேக் போடுவதால் வெள்ளை முடிகள் கூட கருமையாகும். ஏராளமான நன்மைகள் உள்ளன.
தலைமுடி கருமையாகவும் அடர்தியாகவும் இருக்க வேண்டும் என்று தான் நாம் அனைவருமே விரும்புவோம். இளம் வயதில் சிலருக்கு இளநரை ஏற்படும் 35 முதல் 40 வயதை கடக்கும் நபர்களுக்கு தலைமுடி நரைக்க தொடங்குகிறது. அதனை தேயிலையை கொண்டு எளிமையாக அகற்றுவது எப்படி என்பது குறித்து இங்கு காணலாம்.
தேயிலையை தலைமுடியில் தடவுவதால் நல்ல பலன் கிடைக்கும். பலர் வெள்ளை முடியை மறைக்க ரசாயன ஹேர் டையை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது கூந்தலில் வறட்சியை ஏற்படுத்தும். அதை தவிர்க்க வீட்டு சமையலறையில் வைத்திருக்கும் தேயிலையை பயன்படுத்தலாம். இதனால் தலைமுடி கருப்பாக்கவும், மென்மையாகவும் இருக்கும்.
தேயிலையை தலைமுடிக்கு பயன்படுத்த முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். அதனுடன் 5 ஸ்பூன் தேயிலை அல்லது 6 தேநீர் பைகளை போட்டுவிடுங்கள். நன்கு கொதிக்க விடவும். அதை பின்னர் குளிர்விக்கவும். தண்ணீரை வடிகட்டிவிட்டு, வெந்த தேயிலையை எடுத்து தலையில் தடவ வேண்டும். இதனை தலையில் தடவி சுமார் 45 நிமிடங்கள் ஊறவிடுங்கள். இப்போது முடியை சுத்தமான தண்ணீரில் கழுவி கொள்ளுங்கள். இதை வாரம் இருமுறை செய்யலாம். இப்படி செய்வதால் முடி கருப்பாகவும் வலுவாகவும், மாறும். உங்கள் வெள்ளை முடியை எளிதில் கருமையாக்க இது சூப்பரான வழி. தவறவிடாதீர்கள்.
தலைமுடிக்கு எத்தனையோ விஷயங்களை செய்தும் முடிஉதிர்வு இருந்தால் நீங்கள் ஆரோக்கியம் மீது கவனம் செலுத்த வேண்டும். தைராய்டு, மன அழுத்தம், தூக்கமின்மை, சரியான நேரத்திற்கு ஊட்டச்சத்தான உணவுகளை உண்ணாமல் இருப்பது, மரபணு போன்ற காரணங்களும் இருக்கலாம். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.