- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Potato Beauty Hack : கருவளையம் நீங்கி முகம் பொலிவாக! உருளைக்கிழங்கை 'இப்படி' யூஸ் பண்ணுங்க!
Potato Beauty Hack : கருவளையம் நீங்கி முகம் பொலிவாக! உருளைக்கிழங்கை 'இப்படி' யூஸ் பண்ணுங்க!
கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் நீங்க, முகம் பொலிவு பெற உருளைக்கிழங்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Potato Beauty Hack
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடும் காய்கறி எதுவென்றால் உருளைக்கிழங்கு தான். இது சமையலுக்கும் மட்டுமல்ல, சரும பராமரிப்புக்கும் மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக இளம் பெண்களின் முக அழகைக் கெடுக்கும் வகையில் அவர்களது முகத்தில் தெரியும் கருவளையம், சரும சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளை குறைப்பற்கு உருளைக்கிழங்கு பெரிதும் உதவுகிறது. இதற்கு உருளைக்கிழங்கை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
உருளைக்கிழங்கில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் :
உருளைக்கிழங்கில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் சரும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. அதுபோல அதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் ஃப்ரீ ரேடிக்கல்கள எதிர்த்து போராடி சருமத்தை எளிமையாக வைக்க உதவுகிறது.
உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்..
உருளைக்கிழங்கை அரைத்து அதை முகத்தில் நேரடியாக தடவி ஃபேஸ் பேக்காக போட்டு 20 நிமிடங்கள் கழித்து அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவும். உருளைக்கிழங்கில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற பண்புகள் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையத்தை நீக்கவும், முகத்தை எப்போதுமே பொலிவாக வைக்கவும் உதவுகிறது.
மஞ்சளுடன் உருளைக்கிழங்கு :
அரை உருளைக்கிழங்கை லேசாக அரைத்து, அதனுட சிறிதளவு மஞ்சள் சேர்த்து பேஸ்ட் போலாக்கி அதை முகத்தில் தடவி, நன்கு காய்ந்த பிறகு முகத்தை சூடான நீரில் கழுவ வேண்டும். உருளைக்கிழங்கில் இருக்கும் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்றவை முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை மறைய செய்து முகத்தை பிரகாசமாக வைக்க உதவுகிறது.
எலுமிச்சையுடன் உருளைக்கிழங்கு :
உருளைக்கிழங்கை சொரசொரப்பாக அரைத்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதை முகத்தில் ஃபேஸ் பேக்காக போட்டு, பிறகு குளித்த நீரில் முகத்தை கழுவும். இந்த ஃபேஸ் பேக்கானது முகத்தில் இருக்கும் கருமையை நீக்கி முகத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது. இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை மட்டும் போட்டால் போதும்.