- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Glowing Skin : நைட் முகத்துல 'இத' தடவிட்டு படுங்க! காலை முகம் பளபளக்கும்!
Glowing Skin : நைட் முகத்துல 'இத' தடவிட்டு படுங்க! காலை முகம் பளபளக்கும்!
உங்களது முகம் எப்போதுமே பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்க விரும்பினால் தினமும் இரவு தூங்கும் முன் இவற்றை முகத்தில் தடவுங்கள்.

Glowing Skin Tips
ஒவ்வொரு நாளும் முகம் அழகாக ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. அதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து க்ரீம்களை வாங்கி முகத்தில் பூசுகிறார்கள். ஆனால், இயற்கை வழிகளிலும் சருமத்தை பொலிவாக்கலாம். ஆமாங்க, வீட்டில் இருக்கும் சில இயற்கை பொருட்களை தினமும் இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி வந்தால் காலையில் முகம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். அவை என்னென்ன என்பதை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய்
கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் கலவையை இரவில் தடவி, காலையில் கழுவினால் சருமம் ஈரப்பதத்துடன் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும். இது முகத்திற்கு நல்ல பொலிவைத் தரும்.
கிளிசரின், தேன் மற்றும் எலுமிச்சை சாறு
கிளிசரின் சருமத்தை ஈரப்பதமாக்கும், தேன் மென்மையாக்கும், எலுமிச்சை சாறு சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற உதவும். இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து இரவு தூங்கும் முன் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால் சருமம் பளபளக்கும்
சர்க்கரை ஸ்க்ரப்
வாரம் ஒருமுறை சர்க்கரை கொண்டு ஸ்க்ரப் செய்வதால் இறந்த செல்களை எளிதில் நீக்கலாம். இது சருமத்தை பிரகாசமாக்கி, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
வெள்ளரி சாறு மற்றும் புதினா இலை
வெள்ளரி சருமத்திற்கு ரொம்பவே நல்லது என்பதை நாம் ஏற்கனவே அறிந்ததே. அதுபோலதான் புதினாவும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தும். வெள்ளரிக்காய் மற்றும் புதினா இலைகளை ஃபேஸ் பேக்காக வாரத்திற்கு இரண்டு முறை போட்டு வந்தால் முகம் பளபளப்பாக மாறிவிடும்.