- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- எண்ணெய் வழியும் முகத்திற்கு '1' ஸ்பூன் தயிர்!! ப்ரெஷ் லுக்கிற்கு காலையில் இப்படி தடவுங்க!!
எண்ணெய் வழியும் முகத்திற்கு '1' ஸ்பூன் தயிர்!! ப்ரெஷ் லுக்கிற்கு காலையில் இப்படி தடவுங்க!!
முகம் எண்ணெய் வழியாமல் இருக்க காலையில் செய்ய வேண்டிய எளிமையான 5 வீட்டு அழகு குறிப்புகளை காணலாம்.

Morning Skincare Routine For Greasy Skin in Summers : காலையில் எழும்போதும், பகலிலும் கூட சிலர் முகம் எண்ணெய் வழிந்து சோர்வாக காணப்படுவார்கள். எண்ணெய் வழிந்த முகம் வெயில் நேரத்தில் பலருக்கும் ஏற்படும் சங்கடம் என்றுதான் சொல்ல வேண்டும். என்னதான் குளித்தாலும், முகத்தை பராமரித்தாலும் எண்ணெய் வழிந்த பின்னர் நன்றாக இருப்பதில்லை. இந்தப் பதிவில் எண்ணெய் வழியாத முகத்திற்கு செய்ய வேண்டியவை குறித்து காணலாம்.
milk for face
முகத்திற்கு பால்;
உங்களுடைய சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய காய்ச்சாத பாலை முகத்திற்கு பூசுங்கள். இது உங்களுடைய முகத்தில் காணப்படும் சருமத் துளைகளை நன்கு சுத்தம் செய்யும். இதனால் பருக்கள், தொற்று வரும் அபாயம் குறைகிறது. பச்சைப் பாலில் உப்பு சேர்த்தும் முகத்தில் பூசி மசாஜ் செய்யலாம். வெதுவெதுப்பான நீரில் கழுவினால் புத்துணர்வாக இருக்கும்.
curd for face
தயிர் தடவுங்கள்!
முகத்தில் தயிரை தடவுவது சருமத்தில் உள்ள எண்ணெய் தன்மையை குறைக்க உதவுகிறது. நாள் முழுவதும் முகத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். சருமத்தில் உள்ள இறந்து செல்களையும், அழுக்கையும் நீக்க தயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம்.
இதையும் படிங்க: Beauty Tips for Face: முகத்தில் எண்ணெய் பசையா? சிம்பிள் ஃபேஸ் பேக் போடுங்க சருமம் ஜொலிக்கும்!!
honey for face
முகத்திற்கு தேன்!
சருமத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க தேன் மசாஜ் செய்யலாம். இது முகத்தில் இருக்கும் பிசுபிசுப்பை குறைக்கிறது. தேனில் உள்ள கிருமி நாசினிகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் தொற்று, முகப்பருக்களை குறைக்கும். தேனை வைத்து முகத்தில் மசாஜ் செய்த பின் குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவுங்கள்.
இதையும் படிங்க: முகத்தில் எண்ணெய் வழிகிறதா...? இனிமே ஃபேஸ் வாஷ் வெளியில் வாங்காமல் வீட்டிலயே தயாரிச்சு யூஸ் பண்ணுங்க!
cucumber for face
வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காய் சாறில் முகத்தை மசாஜ் செய்வது சருமத்தின் எண்ணெய் தன்மையை குறைக்கும். அரைத்த வெள்ளரிக்காய் விழுதை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவலாம்.
tomato for face
தக்காளி மசாஜ்;
தக்காளியை அரைத்து அந்த சாற்றை முகத்தில் தடவினால் சருமம் பளபளப்பாகும். அது மட்டுமின்றி தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். தக்காளி சருமத்தில் எண்ணெய் வழிவதை தடுக்கும்.