- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- 2 நிமிடங்களில் பளிங்கு போன்ற முகம்! வைட்டமின் சி சீரம் பயன்படுத்தும் எளிய முறைகள்!
2 நிமிடங்களில் பளிங்கு போன்ற முகம்! வைட்டமின் சி சீரம் பயன்படுத்தும் எளிய முறைகள்!
இன்றைய அவசர உலகில், முகத்தை பளபளப்பாகவும், கறைகள் இல்லாமலும் வைத்துக்கொள்ள நீண்ட நேரம் செலவிட பலருக்கும் நேரமில்லை. ஆனால், வெறும் 2 நிமிடங்களில் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை போக்க 5 எளிய வழிகள்.

வைட்டமின் சி சீரம் ஏன் பயன்படுத்த வேண்டும்?
நமது சருமத்திற்கு தேவையான மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் வைட்டமின் சி முதன்மையானது. இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் (Antioxidant) ஆகும். இது காற்றில் உள்ள மாசுக்கள் மற்றும் சூரிய கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கிறது. மேலும், சருமத்தில் கொலாஜன் (Collagen) உற்பத்தியை அதிகரித்து, சுருக்கங்கள் இல்லாத இளமையான தோற்றத்தைத் தருகிறது.
முகத் தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை விரட்டும் வித்தை :
முகப்பருக்கள் வந்து சென்ற வடுக்கள் மற்றும் கரும்புள்ளிகளால் பலரும் கவலைப்படுகிறார்கள். வைட்டமின் சி சீரம், சருமத்தில் உள்ள மெலனின் (Melanin) நிறமி உற்பத்தியை சீராக்குகிறது. இதனால், முகத்தில் உள்ள கறைகள், பிக்மென்டேஷன் (Pigmentation) மற்றும் தழும்புகள் மிக விரைவாகவே மங்கத் தொடங்கும். தொடர்ந்து பயன்படுத்தும்போது, முகம் சீரான நிறத்தைப் பெறும்.
வெறும் 2 நிமிடங்களில் அப்ளை செய்வது எப்படி?
இந்த சீரமை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்க்க வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே போதும்:
படி 1 (0-30 நொடிகள்): முதலில் உங்கள் முகத்தை ஒரு மைல்டான ஃபேஸ் வாஷ் கொண்டு சுத்தமாக கழுவி, துடைத்துக் கொள்ளுங்கள்.
படி 2 (30-60 நொடிகள்): வைட்டமின் சி சீரமின் 2 அல்லது 3 துளிகளை மட்டும் எடுத்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் லேசாக வையுங்கள்.
படி 3 (60-120 நொடிகள்): விரல் நுனிகளால் முகத்தை தேய்க்காமல், மெதுவாக தட்டி (Dab) சருமத்திற்குள் ஊடுருவச் செய்யுங்கள். அவ்வளவுதான், உங்கள் 2 நிமிட வேலை முடிந்தது!
எப்போது பயன்படுத்தினால் அதிக பலன் கிடைக்கும்?
வைட்டமின் சி சீரமை காலை மற்றும் இரவு என இருவேளையும் பயன்படுத்தலாம்.
காலையில் பயன்படுத்தும்போது, இதன் மேல் கண்டிப்பாக ஒரு நல்ல சன்ஸ்கிரீன் (Sunscreen) கிரீம் தடவ வேண்டும். இது சூரிய ஒளியில் இருந்து கூடுதல் பாதுகாப்பு தரும்.
இரவில் பயன்படுத்தும்போது, சீரம் தடவிய பிறகு ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் (Moisturizer) பயன்படுத்தலாம்
கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் :
வைட்டமின் சி சீரமை முதன்முதலில் பயன்படுத்துவதற்கு முன்பு, காதுக்கு பின்புறம் அல்லது கையில் பேட்ச் டெஸ்ட் (Patch Test) செய்து பாருங்கள். ஏதேனும் எரிச்சல் இருந்தால் தவிர்ப்பது நல்லது.
சீரம் பாட்டிலை சூரிய ஒளி படாத, குளிர்ந்த மற்றும் இருட்டான இடத்தில் வைக்க வேண்டும். (சீரம் நிறம் மாறினால் அதன் வீரியம் குறைந்துவிட்டது என்று அர்த்தம்).
தினமும் 2 நிமிடங்கள் வைட்டமின் சி சீரமிற்கு ஒதுக்கினால், முகத்தில் உள்ள கறைகள் மறைந்து, நீங்கள் விரும்பிய பளபளப்பான, ஆரோக்கியமான சருமத்தை எளிதாகப் பெறலாம்!

