- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- முகம் கண்ணாடி மாதிரி பளிச்சிட தேங்காய் எண்ணெய் ஃபேஸ் மாஸ்க்! எப்படி யூஸ் பண்ணனும்?
முகம் கண்ணாடி மாதிரி பளிச்சிட தேங்காய் எண்ணெய் ஃபேஸ் மாஸ்க்! எப்படி யூஸ் பண்ணனும்?
தேங்காய் எண்ணெயை கொண்டு முகத்திற்கு எப்படி மாஸ்க் போட வேண்டும் அதனால் கிடைக்கும் நன்மைகள். என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
முகம் பளபளக்க
முகம் எப்போதுமே பளபளப்பாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்பது பலரது விருப்பம். இதற்கு விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே இதற்கு சாத்தியம் என்று பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி இல்லை நம் தலைக்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயை கொண்டு முக அழகை இரட்டிப்பாக முடியும் தெரியுமா?
முகத்திற்கு தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. தேங்காய் எண்ணெயுடன் சில பொருட்களை கலந்து முகத்திற்கு மாஸ்காக போட்டால் இயற்கையான பொலிவு கிடைப்பது மட்டுமில்லாமல், சருமத்தின் நிறமும் மேம்படும். அவை என்னவென்று குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் மாஸ்க்:
ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க் உங்களது சருமத்தை ஈரப்பதமாக்க வைக்கும் மற்றும் முகத்திற்கு இயற்கை பொலிவைம் கொடுக்கும். தேனில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் மாஸ்க்
2 ஸ்பூன் தயிருடன் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம் ஈரப்பதமாகவும், மென்மையாகவும் மாற்ற உதவும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் மாஸ்க்
ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து அதன் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகம் பொலிவடையும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் அவகேடா மாஸ்க்
அவகேட பலத்தை மசித்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து ஃபேஸ் மாஸ்காக முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க் உங்களது முகத்தை இளமையாக காட்டும் மற்றும் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும்.
ஓட்ஸ் மற்றும் தேங்காய் எண்ணெய் மாஸ்க்
2 ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்றும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஃபேஸ் மாஸ்க்
ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்திற்கு சன்ஸ்கிரீன் போல் செயல்படும் மற்றும் சருமத்தை பொலிவாக்கும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் காற்றாலை ஜெல் ஃபேஸ் மாஸ்க்
ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க் உங்களது முகத்திற்கு அழகைத் தரும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் வாழைப்பழம் மாஸ்க்
அரைத்துண்டு வாழைப்பழத்தை மசித்து அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க் உங்களது முகத்திற்கு உடனடி பொலிவை தரும் மற்றும் சருமத்தை மென்மையாக்கும்.