முகம் பொலிவுற, முடி வளர சத்துக்களை வாரி வழங்கும் 2 பானங்கள்!!
கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பானங்களில் ஒன்றை தினமும் குடித்து வந்தால் முகம் பொலிவு பெறுவது மட்டுமல்லாமல், முடி நீளமாக வளர உதவும்.

Get Shiny Face and Healthy Hair Growth with These 2 Drinks
இளம் வயதிலேயே முக பளபளப்பு இல்லாமல் சுருக்கங்கள் மற்றும் முடி தொடர்பான பல பிரச்சினைகளால் பலர் அவதிப்பட்டு வருகின்றன. இதற்காக அவர்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும் எந்தவித பலனும் கிடைப்பதில்லை. ஆனால் இந்த இரண்டு பிரச்சனைகளையும் ஒரே ஒரு பானத்தால் தடுத்து நிறுத்த முடியும் தெரியுமா? ஆம், கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பானங்களில் ஏதாவது ஒன்றை தினமும் குடித்து வந்தால் உங்களது சரும அழகு மேம்படுவது மட்டுமல்லாமல், கூந்தல் தொடர்பான பல பிரச்சனைகளும் குறையும். அது என்ன பானங்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சியா விதை பானம்:
பொதுவாகவே சியா விதைகள் எடை இழப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இது தலைமுடி அடர்த்தியாக வளரவும் உதவுகின்றது. சியா விதைகளில் புரதம், துத்தநாகம், தாமிரம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் இரவு தூங்கும் முன் சில விதைகளை தண்ணீரில் ஊற வைத்து, பிறகு மறுநாள் காலை விதையுடன் சேர்த்து அந்த நீரை குடியுங்கள்.
முடி ஆரோக்கியத்திற்கு சியா விதை நன்மைகள்:
- சியா விதையில் இருக்கும் புரதம் மற்றும் அத்தியாவாசிய அமினோ அமிலங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் முடி வலுவாகவும், அடர்த்தியாகவும் வளர பெரிதும் உதவுகிறது.
- சியா விதைகளில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் முடி வெலிவதை குறைக்கிறது.
- சியா விதைகளில் உள்ள துத்தநாகம் முடி வதை தடுக்கவும், அடர்த்தியாக வளரவும் ஊக்குவிக்க உதவுகிறது.
சரும ஆரோக்கியத்திற்கு சியா விதை நன்மைகள் :
- சியா விதைகள் சருமத்தை நீரேற்றுமாக வைக்க உதவுகிறது.
- சியா விதைகளில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. இது சுருக்கங்கள் மற்றும் நிறமிகளை குறைக்கும். மேலும் வயதான எதிர்ப்பு பண்புகளும் இதில் உள்ளன.
- சியா விதையில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு பொலிவை தரும்.
மஞ்சள் நீர்:
மஞ்சள் நீரும் உங்களது அழுகை மேம்படுத்த பெரிதும் உதவும். இதற்கு சூடான நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த நீரானது சரும மற்றும் கூந்தலுக்கு மிகவும் நன்மை பயக்கும் மஞ்சளில் குர்குமின் உள்ளது. அதுமட்டுமின்றி இது அதன் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்றது.
மஞ்சள் நீர் நன்மைகள்:
- மஞ்சளில் இருக்கும் பாக்டரை எதிர்ப்பு பண்புகள் தலையில் இருக்கும் பொடுகை முற்றிலுமாக நீக்க உதவுகிறது.
- இந்த பானம் உச்சந்தலையில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.
- மஞ்சளில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க உதவும்.
- மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்தினால் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும், முகத்தில் இயற்கையான பளபளப்பை கொடுக்கும் மற்றும் வயதான செயல்முறையை மெதுவாக்கும்.