Morning drinks: காபி, டீக்கு மாற்றாக காலையில் தினமும்.... இந்த 3 பானங்களில் ஒன்றை ட்ரை பண்ணுங்க....
Morning drinks: உடல் உபாதைகள் தொடர்பான, எந்த பிரச்சனைகளுக்கு மருத்துவமனை சென்றாலும், டாக்டர்கள் கொடுக்கும், ஒரே அட்வைஸ் காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் விட்டு விடுங்கள் என்பது தான்..
உடல் உபாதைகள் தொடர்பான, எந்த பிரச்சனைகளுக்கு மருத்துவமனை சென்றாலும், டாக்டர்கள் கொடுக்கும், ஒரே அட்வைஸ் காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் விட்டு விடுங்கள் என்பது தான்..
ஆனால், காபி, டீயை விட்டு விட்டுவிடுவது ஒருவருக்கு அவ்வளவு எளிதானது ஒன்றும் அல்ல, சிலருக்கு காபி, டீ, குடித்ததால் தான் வயிற்று கோளாறு சரியாகி, பாத்ரூம் போக முடியும் என்பவர். சிலரோ காபி, டீ குடித்தால் தான் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும் என்பர். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு காரணம் இருக்கும். நீங்களும், அவர்களில் ஒருவர் என்றால், இனி காபி, டீக்கு மாற்றாக இந்த 3 பானங்களை பருகினால் போதும், உடலில் புது தெம்பு கிடைக்கும். உடலுக்கு எந்த விதமான பிரச்சனைகளும் வராது. அவை என்னென்ன பானங்கள் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம்.
காலையில் வெறும் வயிற்றில் லெமன் கலந்த ஹாட் வாட்டர்:
ஆம், காலையில் தினமும் வெறும் வயிற்றில், சுடு தண்ணீரில் சிறுது, சீரகம் 1/2 டீஸ்புன் , மஞ்சள்1/4 டீஸ்புன், லெமன் 1/2 டீஸ்புன், கலந்து குடித்தால் போதும், உடலுக்கு ஆரோக்கியம் தரும். வயிற்று பிரச்சனை சரியாகும். உடலுக்கு தெம்பு கிடைக்கும். பாத்ரூம் போக உதவியாக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும். லெமனில் உள்ள வைட்டமின் சி ஃப்ரீ ரேடிக்கல்ஸில் இருந்து நம்முடைய குடலைப் பாதுகாக்கிறது. உடல் மற்றும் வயிறு உப்புச் சத்தைக் குறைக்க உதவுகிறது. நம்முடைய உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. பல்வேறு மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
கிராமங்களில் கடைபிடிக்கும் நீர் ஆகாரம்:
கிராம புறங்களில் பொதுவாக, மாலை சாப்பாடு வைத்து வடித்து எடுத்து விட்டு, இரவு தூங்குவதற்கு முன்பாக மீதான சாப்பாட்டில், வடித்து வைத்த தண்ணீர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வைப்பர். காலையில் எழுந்து கிராம புறங்களில், நீச்சல் தண்ணீர் என்று அழைக்கப்படும் சாப்பாட்டில், உள்ள தண்ணீர் இறுத்து குடித்து விட்டு பணிக்கு செல்வார்கள். கிராமத்தில் இந்தப் பழக்கம் உண்டு. இவை காலையில் புத்துணர்ச்சி தருவதுடன், உடலை எப்போதுமே நீரேற்றமாக வைத்திருருக்க முடியும். உடலின் வழக்கமான செயல்பாட்டை ஊக்குவிக்க நீரோட்டம் மிக அவசியம்.இன்றைய பிஸியான வாழ்கை முறையில், பின்பற்ற முடியாதவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நம்முடைய அன்றாடப் பழக்கத்தின் ஒரு பகுதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கற்றாழை ஜூஸ்:
காலையில் கற்றாழை ஜூஸைக் குடிப்பது நாள் முழுக்க உங்களுடைய குடலையும் வயிற்றையும் பாதுகாப்பாகவும் குளிர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும். கற்றாழை மிகச்சிறந்த மலமிளக்கியாகச் செயல்படும். செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து, குடல் எரிச்சல் போன்றவற்றை நீக்குவதோடு வயிற்றுப் பகுதியில் உண்டாகும் அசவுகரியத்தைப் போக்க உதவுகிறது. கிராம புறங்களில் இவற்றை பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். கொஞ்சம் கசப்புதான் ஆனால், உடலுக்கு நல்லது. காபி, டீக்கு மாற்றாக, இனி காலையில் தினமும் மேலே சொன்ன பானங்களை ட்ரை பண்ணி பாருங்கள். வித்தியாசம் நீங்களே காணலாம்.