- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Cracked Heels : மழைகாலத்துல குதிகால் வெடிப்பு அதிகமாகுதா? இந்த வீட்டு வைத்தியங்கள் தான் பெஸ்ட்
Cracked Heels : மழைகாலத்துல குதிகால் வெடிப்பு அதிகமாகுதா? இந்த வீட்டு வைத்தியங்கள் தான் பெஸ்ட்
மழைக்காலத்தில் வரும் பாத வெடிப்பு பிரச்சினையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Monsoon Foot Care Tips
குதிகால் வெடிப்பு என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். கோடை காலத்தில் மட்டுமல்ல மழை காலத்திலும் இந்த பிரச்சினை வலி மற்றும் அசெளகரியத்தை ஏற்படுத்தும். வலியுடன் நடப்பது சிரமத்தை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து குதிகள் வெடிப்பு பிரச்சனையை சுலபமாக போக்கிவிடலாம். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.
சூடான நீர்
இது மிகவும் எளிய வைத்தியங்களில் ஒன்றாகும். இதற்கு ஒரு வழியில் சூடான நீர் ஊற்றி அதில் ஷவர் ஜெல் சேர்த்து நன்றாக கலந்து உங்களது கால்களை அதில் 15-20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு கல்லை கொண்டு பாதத்தை மெதுவாக தேய்க்கவும். அடுத்ததாக சாதாரண தண்ணீரில் பாதத்தை கழுவிய பிறகு ஒரு துண்டால் துடைத்து, மாய்ஸ்ரைசர் போடவும். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் பாதத்தின் சருமம் மென்மையாகும். வெடிப்பும் படிப்படியாக மறையும்.
தேன்
தேன் இயற்கையான கிருமி நாசினி என்பதால் இது பாத வெடிப்பை குணப்படுத்த உதவுகிறது. இதற்கு சூடான நீரில் சிறிதளவு தேன் கலந்து அதில் உங்களது பாதத்தை ஊற வைக்க வேண்டும். இல்லையெனில் தூங்குவதற்கு முன் குதிகாலில் தேனை நேரடியாக தடவலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் ஈரப்பதம் மூட்டும் பண்புகள் உள்ளன. எனவே இரவு தூங்கும் முன் பாதத்தை நன்கு கழுவி துடைத்துப் பிறகு தேங்காய் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் குதிகால் வெடிப்பு நீங்கி, பாதம் மென்மையாக இருக்கும்.
வாழைப்பழம் மற்றும் பட்டர்
நன்கு பழுத்த வாழைப்பழத்துடன் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து பேஸ்ட் போலாகி அதை சுத்தமான பாதத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு மசாஜ் செய்து பிறகு சூடான நீரில் கழுவ வேண்டும்.
வேஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறு
வேஸ்லினுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து இரவு தூங்கும் முன் அந்த பேஸ்ட்டை குதிகாலில் தடவி பிறகு மறுநாள் காலை சூடான நீரால் கழுவ வேண்டும். எலுமிச்சையில் இருக்கும் அமிலத்தன்மை பாதத்தில் இறந்த சருமத்தை அகற்ற உதவும். வேஸ்லின் பாதத்தை ஈரப்பதமாக வைக்க உதவும்.
ஓட்ஸ்
பாத வெடிப்பை போக்க ஓட்ஸை ஸ்கிரப்பாக பயன்படுத்தலாம். இதற்கு ஒரு ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் போலாக்கி அதை குதிகாலில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, நன்கு காய்ந்த பிறகு சூடான நீரால் பாதத்தை கழுவ வேண்டும். இந்த ஓட்ஸ் ஸ்கரப் சருமத்தை குறித்து மீண்டும் உயிர்பிக்க உதவுகிறது.