- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Coconut Oil Hair Mask : ஒரே வாரத்தில் தலைமுடி வலுவாகும்! தேங்காய் எண்ணெய்ல இப்படி ஹேர் மாஸ்க் போடுங்க!
Coconut Oil Hair Mask : ஒரே வாரத்தில் தலைமுடி வலுவாகும்! தேங்காய் எண்ணெய்ல இப்படி ஹேர் மாஸ்க் போடுங்க!
தேங்காய் எண்ணெயைக் கொண்டு தலை முடிக்கு ஹேர் மார்க்ஸ் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Coconut Oil Hair Mask
அடர்த்தியான, கருமையான மற்றும் நீண்ட கூந்தலை தான் நம் அனைவருமே விரும்புவோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம், மாசுபாடு, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் முடி உதிர்தல், உடைதல், நரைத்தல், வறண்டு போகுதல் போன்ற கூந்தல் தொடர்பான பல பிரச்சனைகளை சந்திக்கிறோம். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட தேங்காய் எண்ணெய் மிகவும் உதவியாக இருக்கும்.
ஆம், தேங்காய் எண்ணெயை முடியின் வேர்கள் வரை ஆழமாக தடவினால் தலைமுடி ஆரோக்கியமாக வளரும். முடி உதிர்தலும் குறையும். மேலும் இதில் இருக்கும் தலைமுடியை வலிமையாக்கும். இருப்பினும் தேங்காய் எண்ணெயுடன் சில பொருட்களை சேர்த்து ஹேர் மாஸ்காக பயன்படுத்தி வந்தால் தலைமுடியை பட்டு போல மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும். இப்போது இந்த பதிவில் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்குகள் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்
இந்த ஹேர் மார்க் செய்வது ரொம்பவே எளிது. இதற்கு உங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதை உச்சந்தலையின் வேர்கள் முதல் நுனிவரை தடவி பிறகு சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இந்த ஹேர் மாஸ் உங்களது முடியை பட்டு போல மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும். குறிப்பாக வறண்ட கூந்தல் உள்ளவர்களுக்கு இந்த ஹேர் மாஸ்க் ரொம்பவே பெஸ்ட்.
தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஹேர் மாஸ்க்
தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை இவை இரண்டுமே தலைமுடிக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இவற்றில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவற்றை கொண்டு ஹேர் மாஸ் தயாரிப்பதற்கு இரண்டையும் சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது தேங்காய் எண்ணெயை சூடாக்கும் போது அதனுடன் கற்றாழை ஜெல்லையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அறிய பிறகு அவற்றை உச்சந்தலை முதல் நுனிவரை தடவவும். இந்த ஹேர் மாஸ்க் முடி சேதமடைவதை தடுக்கும். கூந்தலை பளபளப்பாக மாற்றும். வறண்ட கூந்தல் உள்ளவர்களுக்கு இந்த ஹேர் மாஸ்க் ரொம்பவே நல்லது.
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை ஹேர் மாஸ்க்
இந்த ஹேர் மாஸ் எண்ணெய் பசை உள்ளவர்களுக்கு நல்லது. எலுமிச்சையில் இருக்கும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும் மற்றும் பொடுகு தொல்லையை குறைக்கும். இந்த ஹேர் மாஸ் செய்ய தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் சம அளவு எடுத்து அதை உச்சந்தலை முதல் நுனி வரை தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு தலைக்கு குளிக்கவும். இந்த ஹேர்மோஸ் போட்டால் உங்களது தலைமுடி மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும். இந்த ஹேர் மாஸ்கை இரவில் மட்டும் போடக்கூடாது.
தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டை ஹேர் மாஸ்க்
இந்த ஹேர் மாஸ்க் முடியை பளபளப்பாக வைக்க உதவும். இந்த ஹேர் மாஸ்க் செய்ய ஒரு முட்டையுடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்து அதை உங்களது உச்சந்தலை முதல் நுனிவரை தடவி சுமார் அரை மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு லேசான ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் முடி வளர்ச்சி அடையும். மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும்.