வயசானாலும் இளமையாக தெரியணுமா? 5 சூப்பர் உணவுகள் இதோ!
சருமத்தில் வயதான தோற்றம் தெரியாமல் எப்போதும் இளமையாக தெரிவதற்கு சில உணவுகளை உங்களது தினசரி உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும். முதுமையான தோற்றம் நீங்கி இளமையாக இருப்பீர்கள். அவை என்னென்ன உணவுகள் என்று இங்கு பார்க்கலாம்.

சருமத்தை இளமையாக மாற்றுவது எப்படி?
வயது ஆக ஆக சருமத்தில் சுருக்கங்கள் வருவது இயல்பான விஷயம். ஆனால் பலர் வயதான தோற்றத்தை மறைக்க விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அவை சுருக்கங்களை மறைக்க உதவினாலும், நிரந்தர தீர்வை தராது. இன்னும் சிலரோ விலையுயர்ந்த அறுவை சிகிச்சைகளை கூட செய்து கொள்கிறார்கள். ஆனால் இவை எதுவும் இளமையை தக்க வைக்காது.
இளமையை தக்க வைக்க உதவும் உணவுகள்:
வயது அதிகரிக்கும் போது சருமத்தில் கொலாஜன் மற்றும் ஹைலூரோனிக் அமிலத்தின் அளவு குறைந்துவிடும். இதன் விளைவாக முகத்தில் வயதான தோற்றம் காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், முதுமையான தோற்றத்தை நீக்கி எப்போதுமே இளமையாக வைக்க உதவும் சில உணவுகள் உள்ளன. அவற்றை தினமும் சாப்பிட்டால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்துவிடும். அந்த உணவுகளின் பட்டியல் இதோ..
சிவப்பு திராட்சை
சிவப்பு திராட்சை அல்லது குறைந்த அளவு ரெட் ஒயின் அருந்துவது அழகை மேம்படுத்தும். இவற்றில் ரெஸ்வெராட்ரால் போன்ற ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, முகத்தில் பொலிவையும் தருகின்றன.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் நரிங்கெனின், ஹெஸ்பெரிடின் போன்ற ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இவை கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இந்த சிட்ரஸ் பழங்கள் சருமத்திற்கு நல்லது. சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி உள்ளது. இது சருமத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்டாக செயல்படுகிறது. இந்த வகை பழங்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கின்றன. இதனால் இளமையாகக் காட்சியளிக்கலாம்.
ஆப்பிள்
ஆப்பிள்களில் குர்செடின் உள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற சேதத்தைக் குறைக்க உதவுகிறது. தினமும் ஆப்பிள் சாப்பிடுவது இதய நோய்கள் மற்றும் நுரையீரல் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. ஆப்பிள்களில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சுருக்கங்களைக் குறைப்பதோடு, இறந்த சரும செல்களை நீக்கவும் உதவுகின்றன.
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட் பிரியர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. இதில் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இவை மூளை, இரத்த ஓட்டம் மற்றும் இரத்த அழுத்தத்திற்கு நன்மை பயக்கும். இதில் அதிக கோகோ உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. இது சருமத்தை அழகாக்குகிறது.
பெர்ரி பழங்கள்
பழங்களில் உள்ள இயற்கையான சர்க்கரைகள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகின்றன. பெர்ரி பழங்கள் வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாகும். இது பெரும்பாலும் வயதான தோற்றத்தைத் தடுக்கும் சருமப் பராமரிப்புப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. புளுபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பழங்கள் சருமத்தின் வயதான தோற்றத்திற்குக் காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடுகின்றன. அவை இதய ஆரோக்கியத்திற்கும், நீரிழிவு நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களைத் தடுக்கவும் நல்லது.