Yashika Aannand: கல் சிலை முன்... கிளாமர் டால் போல் அதிரி புதிரி கவர்ச்சி காட்டும் யாஷிகா! சூடான ரசிகர்கள்!
நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் போட்டு வருவது மட்டும் இன்றி லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் நடித்ததால், அடல்ட் நாயகி என பெயர் எடுத்த யாஷிகா ஆனந்த்... தன்மீதான பார்வையை மாற்ற வேண்டும் என்பதால், அதிரடியாக பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
முதல் நாளில் இருந்தே... மிகவும் நேர்த்தியாக விளையாடிய யாஷிகா, ஐஸ்வர்யா தத்தாவுக்கு ஓவர் ஜால்றா தட்டியதால், ஒரு கட்டத்தில் அதிருப்தியான மக்கள் இவரை எலிமினேட் செய்து வீட்டுக்கு அனுப்பினர்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், அடுத்தடுத்து பல படங்களில் பிசினார். சினிமா கேரியர் செம்ம ஸ்பீடில் போய்க்கொண்டிருந்த நேரத்தில், யாஷிகாவுக்கு நடந்த விபத்து இவரின் திரையுலக வாழ்க்கையையே திருப்பி போட்டது.
எழுந்து நடக்கவே இவருக்கு 6 மாதம் ஆன நிலையில், இவர் முழுமையாக குணமடைய 1 வருடத்திற்கு மேல் ஆனது. எனவே பல வாய்ப்புகள் இவரின் கையை விட்டு நழுவியது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சில படங்களில், முழுமையாக குணமடைந்த பின்னர் யாஷிகா மீண்டும் நடித்து கொடுத்தார். தற்போது மீண்டும் அதிரடியாக தன்னுடைய பட வேட்டையை துவங்கியுள்ள இவர், அவ்வப்போது இளம் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்கும் விதமாக, போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது கல் சிலை முன்பு... பாசி பச்சை நிறத்தில் அதிரி புதிரி கவர்ச்சியில் கிளாமர் டால் போல் மாறி போஸ் கொடுத்துள்ளார். மேலும் இதில் எது உங்கள் ஃபேவரட் என தன்னுடைய ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்க்கு ரசிகர்கள் நீங்களே எங்கள் ஃபேவரட் தான் என, தாறுமாறாக கமெண்ட் போட்டு வருவது மட்டும் இன்றி லைக்குகளை குவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.