Shimona: நீண்ட நாள் காதலரை கரம் பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகை ஷிமோனா! குவியும் ரசிகர்கள் வாழ்த்து.!
விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான, நடிகை ஷிமோனா ஜேம்ஸ் தன்னுடைய காதலரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் இவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்
கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்டாண்ட் அப் காமெடியனாக பிரபலமானவர் நவீன். இவர் ஹீரோவாகி அறிமுகமான பாவம் கணேசன் சீரியலி்ல், அவருக்கு தங்கையாக யமுனா என்கிற முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஷிமோனா ஜேம்ஸ்.
கோயம்புத்தூரை சேர்ந்த இவர், ஒரு மாடலாக தன்னுடைய கேரியரை துவங்கி பின்னர் சீரியல் மூலம் நடிகையாக மாறினார். இவர் கடந்த செப்டம்பர் மாதம், இன்ஸ்ட்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, காதலரை அறிமுகப்படுத்திய நிலையில், கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் நடிகை ஷிமோனாவிற்கும் அவரின் காதலருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
விஜய் டிவி சீரியலில் நடிப்பதற்கு முன்னர் ஷிமோனா சன் டிவியில் ஒளிப்பரப்பான நாயகி சீரியலில் நடித்தார். ஆனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது, பாவம் கணேசன் யமுனா கதாபாத்திரம் தான்.
சின்னத்திரையில் இருந்து விலகி, பிரபல நிறுவனம் ஒன்றில் தற்போது இவர் வேலை பார்த்து வருவதாக கூறப்படும் நிலையில், ஷிமோனாவுக்கும் இவரின் காதலர் கிரண் நேதனல் என்பவருக்கும் கிறிஸ்தவ முறைப்படம் திருமணம் நடந்துள்ளது. இதை தொடர்ந்து இந்த இளம் ஜோடிகளுக்கு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D