படுக்கைக்கு அழைத்த இயக்குனர்! KPY காயத்ரி கேட்ட செருப்படி கேள்வி! இரவு முழுவதும் தூங்க விடாம செய்த செயல்!
முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது, அந்த இயக்குனர் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னதாக கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காமெடியில் ஆண்கள் கால் பதித்துள்ள அளவுக்கு, பெண்கள் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே காமெடி வேடத்தில் நடித்துள்ள பெண்களை விரல் விட்டு சொல்லி விடலாம். இந்நிலையில், விஜய் டிவி KPY நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷாவுக்கு அடுத்தபடியாக கவனிக்கப்பட்டவர், KPY காயத்ரி. இவர் ஒரு புதுமுக இயக்குனர் படத்தில் வாய்ப்பு கேட்டு சென்ற இடத்தில் படுக்கைக்கு அழைத்ததாக கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
KPY வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்றதாகவும், அப்போது அந்த இயக்குனர் என்னிடம் ஊட்டிக்கு ஒரு ட்ரிப் போயிட்டு வரலாமா? உங்கள் கதாபாத்திரம் பற்றி டிஸ்கஸ் பண்ண வேண்டும் என கூறினார். அப்போது அவர் எதை காரணம் காட்டி சொல்கிறார் என தெரியவில்லை. ஆடிஷன் முடிந்த பின்னர், இயக்குனர் அறைக்கு சென்று அவரை சந்திக்க சொன்னார்கள்.
40 வயதில் குத்து ரம்யா மாரடைப்பால் மரணம்? திரையுலகை உலுக்கிய வதந்தி..! வெளியான பரபரப்பு தகவல்!
நானும் அவரை சந்தித்தபோது, சார் ஊட்டியில் தான் ஷூட்டிங்கா? என கேட்டேன். அவர் யார் அப்படி சொன்னது. ஊட்டியில் ஷூட்டிங் இல்லையே என கூறினார். நீங்க தானே ஊட்டிக்கு போகணும் என சொன்னீர்கள் என கேட்டேன். அவர் வெளிப்படையாக அட்ஜஸ்ட்மென்டுக்கு தான் அங்கு அழைத்ததை கூறினார். அந்த நேரத்தில் அதை எப்படி ஃபேஸ் பண்ணுவது என தெரியவில்லை. அழுது விட்டேன் அவரும் பதறிவிட்டார்.
பின்னர் நான் அவரிடம், உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என கேட்டேன். அவரும் ஆகிடுச்சு என சொன்னார். பிள்ளைகள் இருக்கிறார்களா என கேட்டேன். இரண்டு மகள்கள் உள்ளதாக கூறினார். அவர்களின் வயதை கேட்டேன் அவர் 18... 19.. இருக்கும் என சொன்னார். எனக்கு அந்த சமயத்தில் 21 வயது ஆனது. கிட்ட தட்ட அவரின் மகள் வயது தான்.
எனவே உங்களின் மகளை கூட்டிட்டு போவீங்களா என கேட்டேன். அவர் என்ன நினைத்தார் என தெரியவில்லை நீ போ மா... நான் போன் பண்ணுறேன் என கூறினார். நான் வீட்டுக்கு வந்ததும் அவரின் ஆபிசில் இருந்து தொடர்ச்சியாக கால் வந்து கொண்டே இருந்தது. என்னை தூங்கவே விடாமல்... இரவு முழுவதும் போனில் மிகவும் அசிங்கமான வார்த்தைகள் பயன்படுத்தி திட்டினார்கள்.
ஒண்ணுமே இல்லாத நீ, ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்க வந்த நீ இப்படி பேசுவியா. நீ இதுக்கு முன்னாடி ஒழுக்கமாவா இருந்திருப்ப என கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தினார்கள். என் அம்மா அந்த விஷயத்தில் மிகவும் பயந்து விட்டார்கள். இப்போ நைட்டு வந்து உன் திறமையை காட்டுனு சொன்னாங்க என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுபோல் எந்த வித அட்ஜஸ்ட்மென்டிலும் சிக்காமல் பெண்கள் தங்கள் திறமையை நிரூபித்து கொண்டிருக்கிறார்கள். என்றும் ஆண்களை விட பெண்களுக்கு அதிக தன்னபிக்கை உள்ளது. எனவே திரையுலகில் கண்டிப்பாக எதையேனும் சாதிப்பேன் என அடித்து கூறியுள்ளார் KPY காயத்ரி.