கணவர் மறைவுக்கு பின்னர் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் மீனா! அவரே வெளியிட்ட ஷூட்டிங்கில் ஸ்பாட் புகைப்படம்!
நடிகை மீனா தன்னுடைய கணவர் மறைவுக்கு பின்னர், திரையுலகில் இருந்து விலகி இருந்த நிலையில்... தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 90-களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா. இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு, சாகர் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு நைனிகா என்கிற மகள் ஒருவரும் உள்ளார். நைனிகாவும் தன்னுடைய அம்மா போலவே குழந்தை நட்சத்திரமாக தளபதி விஜய் நடித்த தெறி படத்தில் நடித்து பிரபலமானவர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு, மீனாவின் கணவர் சங்கருக்கு நுரையீரல் தொற்று ஏற்ப்பட்டு... சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இழப்பு ஒட்டு மொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. மீனா தன்னுடைய கணவர் நினைப்பில் இருந்து மீள முடியாமல், வீட்டுக்குளேயே முடங்கினார்.
ஆனால் மீனாவின் அம்மா அவருக்கு கொடுத்த அரவணைப்பு மற்றும், மீனாவின் தோழிகள் சங்கவி, ப்ரீத்தா, ரம்பா, கலா மாஸ்டர் ஆகியோர் அடிக்கடி மீனாவை சந்தித்து அவரை மெல்ல மெல்ல அந்த துயரத்தில் இருந்து மீட்டு கொண்டு வந்து, சகஜ நிலைக்கு மாற்றினர். சமீபத்தில் கூட மீனா 40 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தினார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார் மீனா. இதுகுறித்து நடிகை மீனா தனது சமூக வலைதள பக்கத்தில், நீல் புரொடக்ஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். ஜெய ஜோஸ் ராஜ் என்ற மலையாள இயக்குனரின் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் தான் அவர் நடிக்க உள்ளார்.
மீண்டும் கேமரா முன் நிற்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் மற்றொரு மறக்க முடியாத கேரக்டரில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றும் என்னால் உற்சாகமாக இல்லாமல் இருக்க முடியாது என்றும் தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். மலையாள இயக்குனர் படத்தில் இவர் நடிப்பதால் இது மலையாள படம் என்பது உறுதியாகியுள்ள நிலையில், இப்படம் குறித்த மற்ற விவரங்கள் வெளியாகவில்லை. அதோடு ஷூட்டிங் போர்டு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.