MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 40 வயதில் குத்து ரம்யா மாரடைப்பால் மரணம்? திரையுலகை உலுக்கிய வதந்தி..! வெளியான பரபரப்பு தகவல்!

40 வயதில் குத்து ரம்யா மாரடைப்பால் மரணம்? திரையுலகை உலுக்கிய வதந்தி..! வெளியான பரபரப்பு தகவல்!

Actress Ramya aka Divya Spandana Death News :  நடிகை குத்து ரம்யாவுக்கு திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில்... இது முற்றிலும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

2 Min read
Author : manimegalai a
| Updated : Sep 06 2023, 06:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Polladhavan Actress Divya Spandana Death News

Polladhavan Actress Divya Spandana Death News

தமிழில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக, 'குத்து' படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. எனவே நடிகர் சூர்யா உடன் 'வாரணம் ஆயிரம்', தனுஷுடன் 'பொல்லாதவன்' அர்ஜுனுடன் 'கிரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தார். 
 

26
Polladhavan Actress Divya Spandana Death News

Polladhavan Actress Divya Spandana Death News

தமிழ் படங்களை விட, கன்னட திரையுலகில் இவருக்கு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட வாய்ப்புகள் கிடைத்ததாலும் , இவர் நடித்த கன்னட படங்கள் தாறுமாறு ஹிட் அடித்ததாலும், இவரின் முதல் தேர்வு கன்னட திரைப்படங்களாகவே இருந்தது. எனவே தமிழ், தெலுங்கு, போன்ற மொழி படங்களை விட... கன்னட திரையுலகிலேயே அதிக கவனம் செலுத்தினார்.

கணவர் மறைவுக்கு பின்னர் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் மீனா! அவரே வெளியிட்ட ஷூட்டிங்கில் ஸ்பாட் புகைப்படம்!
 

36
Polladhavan Actress Divya Spandana Death News

Polladhavan Actress Divya Spandana Death News

நடிப்பையும் தாண்டி ஒரு கட்டத்திற்கு மேல் அரசியலிலும் புகுந்து விளையாட துவங்கினார் ரம்யா.  மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் 'அம்ரீஷ்' உதவியுடன் அரசியலில் நுழைந்து, கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியதால், தற்போது திரைப்பட தயாரிப்பு மற்றும் படம் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
 

46
Actress Ramya Death Fake News

Actress Ramya Death Fake News

இந்நிலையில், சற்று முன்னர் இவரை பற்றி வெளியான ஒரு தகவல்... சமூக வலைத்தளத்தை பரபரக்க செய்து விட்டது. அதாவது 40 வயதாகும் ரம்யா மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறி செய்திகள் வெளியானது. பலர் இந்த தகவலை முழுமையாக ஆராயாமல், செய்திகள் வெளியிட்ட நிலையில்.. சற்றுமுன்னர் இதுகுறித்த உண்மை தகவல் தெரியவந்துள்ளது.

தயவு செஞ்சி ஹெல்ப் பண்ணுங்க..! காரில் அமர்ந்தபடி பாவனி காதலர் அமீர் வெளியிட்ட வீடியோ..!

56
Actress Ramya Death News in Tamil

Actress Ramya Death News in Tamil

ரம்யா தற்போது ஜெனிவாவில் இருக்கிறாராம், மேலும் இதுபோல் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியான பின்னரே ரசிகர்கள் பலர், நிம்மதியடைந்துள்ளனர்.
 

66

இந்த குழப்பத்திற்கு காரணம், ராஜ்குமார் குடும்பத்தைச் சேர்ந்த கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா ராகவேந்திரா, கடந்த மாதம் ஆகஸ்ட் 6-ஆம் தேதி காலமானார். எனவே ஒருவேளை இவரை தான் சிலர் திவ்யா ஸ்பந்தனா என நினைத்து இந்த வதந்தியை கிளப்பி விட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டா பெற்றோர் போட்ட கண்டிஷன்... கல்யாணத்துக்கு முன்பே இப்படியா?
Recommended image2
நிறுத்தப்படும் குமரவேல் கல்யாணம்... மீனாவிடம் குட் நியூஸ் சொன்ன தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
பாடும் நிலா SPB-யின் தேன் குரல்.! கேட்பவர்களை மெய் மறக்க செய்யும் டாப் 10 சூப்பர் ஹிட் சாங்ஸ் லிஸ்ட் இதோ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved