MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Top 10 Serial TRP: மளமளவென சரிந்த சன் டிவி சீரியல் TRP... கெத்து காட்டிய 'சிறகடிக்க ஆசை'! TRP முழு விவரம் இதோ!

Top 10 Serial TRP: மளமளவென சரிந்த சன் டிவி சீரியல் TRP... கெத்து காட்டிய 'சிறகடிக்க ஆசை'! TRP முழு விவரம் இதோ!

இந்த வருடத்தின் 15 வது வாரத்தில், அர்பன் மற்றும் ரூரல் டிஆர்பி விவரங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

3 Min read
Author : manimegalai a
Published : Apr 18 2024, 04:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

இந்த வாரம் முதலிடத்தை பிடித்துள்ளது சிங்க பெண்ணே சீரியல். ஆனந்தியை எப்படியும் ஏமாற்றி காதலிக்க வைத்து விட வேண்டும் என நந்தா திட்டம் போட்டு வரும் நிலையில்... ஆனந்தி நந்தாவிடம் இருந்து தப்பிப்பாரா? அன்புதான் உண்மையான அழகன் என்பதை தெரிந்து கொள்வாரா? என்கிற சுவாரசியமான கதைக்களத்தில் சிங்கப்பெண் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் 9.2 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது இந்த சீரியல்.

210

இதைத்தொடர்ந்து, இரண்டாவது இடத்தை பிடித்துள்ள கயல் சீரியல். கயலின் கவனிப்பில் இருக்கும் மனிதரை கொலை செய்ய கூறி, கயல் வீட்டை சேர்ந்தவர்களை தீவிரவாதிகள் பிணை கைதியாக பிடித்து வைத்துள்ள நிலையில், இந்த தர்ம சங்கடமான சூழ்நிலையை சமாளித்து, கயல் தன்னுடைய குடும்பத்தையும் அந்த பேஷன்டையும் காப்பாறுவாரா என்கிற பரபரப்பான கதைக்களத்துடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் 8.91 புள்ளிகளை பெற்றுள்ளது.

310

இந்த வாரம் 8 .27 டிஆர்பி புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது 'எதிர்நீச்சல்' சீரியல். இதுவரை பல விஷயங்களில் குணசேகரன் ஜெயித்திருந்தாலும், தர்ஷினி விஷயத்தில், குணசேகரனை மண்ணைக் கவ்வ வைக்க வேண்டும் என குடும்பமே சேர்ந்து அவருக்கு எதிராக போராடி வருகிறது. எனினும் தர்ஷினியின் திருமணம் தடுத்து நிறுத்தப்படுகிறதா? ஜனனியின் தங்கை அவருடைய காதலருடன் சேருவாரா என்கிற கதைகளத்தில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

410

இதை தொடர்ந்து, 6.79 TRP புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது 'சிறகடிக்க ஆசை சீரியல்.  மீனாவையும் முத்தையும் எப்படியும் பழிவாங்கும் நோக்கத்தில் விஜயா பல்வேறு சதி வேலைகள் செய்தாலும் அவை அனைத்தையும், இருவரும் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர். இந்த தொடர் தற்போது மூன்றாவது இடத்தை பிடித்து கெத்து காட்டி வருகிறது.

510

 அதே போல் இதுவரை டாப் 3 இடத்தை கைப்பற்றி வந்த 'வானத்தைப்போல' சீரியல், இந்த முறை 7.55 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பொன்னியை நம்பி அவர் விரித்த வலையில் துளசி சிக்கிக் கொள்ள, தன்னுடைய அண்ணன் சின்ராசுவால் இந்த பிரச்சினையில் இருந்து எப்படி துளசி வெளியேறப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்களும் ஆதிக ஆர்வமாக உள்ளனர்.

610
Iniya Serial

Iniya Serial

இதையடுத்து 7 .22 டிஆர்பி புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது, சன் டிவியில் ஆலியா மானசா - ரிஷி நடித்து வரும் விக்ரம் சீரியல்.  எப்படியும் இனியாவை பழிவாங்க வேண்டும் என நினைத்து அவரின் மாமனார் போடும் திட்டங்கள், இந்த தொடரை பார்ப்பவர்களுக்கே அவர் மீது கோபத்தை தூண்டி உள்ளது.  எனினும் விக்ரம் இனியாவிற்கு வரும் பிரச்சனைகளில் இருந்து தொடர்ந்து காப்பாற்றி வருகிறார். 
 

710

இந்த வாரம் ஏழாவது இடத்தில் உள்ளது 'சுந்தரி' சீரியல் கார்த்தி உயிரோடு தான் இருக்கிறார் என்கிற உண்மை அனைவருக்கும் தெரிய வந்து விடவே, இந்த சீரியல் மீதான பரபரப்பு குறைந்து விட்டதாக ரசிகர்கள் கருதுவதே இந்த சீரியல் டிஆர்பியில் வீழ்ச்சியை சந்திக்க காரணம் என கூறப்படுகிறது. அதன்படி இந்த தொடர் 6 .74 புள்ளிகளை பெற்றுள்ளது.
 

810

எட்டாவது இடத்தில் 6.56 டிஆர்பி புள்ளிகளுடன் பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது. ஃபேமிலி ட்ராக்கில் இருந்து மாறி கொஞ்சம் லவ் ட்ராக்கில் நகர துவங்கியுள்ள இந்த சீரியலில், தற்போது ராதிகா கர்ப்பம் அடைந்துள்ளதாலும்,  தாத்தாவான பின்னர் கோபிக்கு குழந்தை பிறக்க உள்ள விஷயமும் வெளியாகி இந்த சீரியல் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.

910

ஒன்பதாவது இடத்தில் 5.87 புள்ளிகளுடன் பாண்டியன் ஸ்டோர் சீரியல் உள்ளது. ஒருவழியாக சரவணனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த வாரத்தில் அவருடைய திருமண வைபோகம் களைகட்டும் என தெரிகிறது. அதை போல் மீனாவின் அளப்பறை, ராஜியின் ரொமான்ஸ் என சீரியல் சூடு பிடித்துள்ளது.

1010

10-வது இடத்தில், 5.60 டிஆர்பி புள்ளிகளுடன் சின்ன மருமகள் சீரியல் உள்ளது. படிக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் இருக்கும் தமிழ்ச்செல்வி சேதுவை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், தன்னுடைய மனைவியின் ஆசையை எப்படி சேது நிறைவேற்றப் போகிறார் என்பதே இந்த சீரியலின் கதைக்களம். ஒவ்வொரு நாளும் தனக்கு தெரியாத வேலைகளை குடும்பத்தினர் செய்ய சொல்ல, அவை அனைத்தையும் அசால்டாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சன் தொலைக்காட்சி
தமிழ் சீரியல்
விஜய் தொலைக்காட்சி
கயல் (தொலைக்காட்சித் தொடர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved