விஜய் சேதுபதி மகளா இது? ரக்கட் லுக்கில் தெறிக்க விடுறாங்களே... வைரலாகும் ஃபேமிலி டைம் செல்பி புகைப்படங்கள்!
விஜய் சேதுபதி மகள் ஸ்ரீஜாவா இது? என அனைவரும் ஆச்சரியப்படும் படி ரக்கட் லுக்கிற்கு மாறியுள்ளார். மேலும் விஜய் சேதுபதி குடும்பத்துடன் எடுத்து கொண்ட செல்பி போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி, திரையுலகில் பல சவால்களுக்கு மத்தியில் தனக்கான வாய்ப்பை பெற்று சாதித்த பிரபலங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி சாதித்த பிரபலங்களில் ஒருவர் தான் விஜய் சேதுபதி.
திரைப்பட வாய்ப்பு தேடிய காலங்களில், லவ் போர்ட்ஸ், கோகுலத்தில் சீதை, எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமி உள்ளிட்ட பல படங்களில் கூட்டத்தோடு கூட்டமாக வந்து நின்று விட்டு செல்லும் கதாபாத்திரம் தான் இவருக்கு கிடைத்தது.
ஆனால் எப்படியும் ஹீரோவாக வேண்டும் என்கிற முயற்சியில் தீவிரமாக இருந்த விஜய் சேதுபதி, பணம் மட்டுமே தன்னுடைய குறியாக இல்லாமல்... தன்னுடைய நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு குறும்படங்களில் நடித்து உதவினார். எந்த ஒரு பிரதிபலனும் இன்றி அவர் செய்த உதவி தான் இவருக்கு ஹீரோ வாய்ப்பை பெற்று கொடுத்தது.
விஜய் சேதுபதியின் குறும்படங்களை பார்த்து கவர்த்திழுக்கப்பட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தான் இயக்கிய 'பீட்சா' படத்தில் இவரை ஹீரோவாக நடிக்க வைத்தார். இந்த படம் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது மட்டும் இன்றி கார்த்திக் சுப்புராஜ் திரையுலக வாழ்க்கையிலும் திருப்புமுனையாக அமைந்தது.
Shiva Rajkumar: தமிழில் முதல் முறையாக ஹீரோவாக களமிறங்கும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார்!
இதை தொடர்ந்து இவர் நடித்த, தென்மேற்கு பருவக்காற்று, நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம், சூது கவ்வும், இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பண்ணையாரும் பத்மினியும் போன்ற ஓவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகவும் உயர்ந்துள்ளார். குறிப்பாக விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான, 'மகாராஜா' திரைப்படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. அதே போல் நெட்பிலிக்ஸ் தளத்தில் ஜூலை 12-ஆம் தேதி வெளியான இப்படம், ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.
தமிழை தாண்டி, இந்தி, மலையாளம், தெலுங்கு, போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அதே போல் ஹீரோவாக மட்டுமே நடிக்காமல், விஜய், கமல், போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்து வருகிறார்.
பிஸியாக நடித்து கொண்டிருந்தாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் விஜய் சேதுபதி தற்போது தன்னுடைய குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ஆர்.ஜே பாலாஜி இல்லையா? நயன்தாரா ஏன் இப்படி பண்ணாங்க?
இதில் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா, ஆளே அடையாளம் தெரியாமல் மாறி பேன்ட், ஷார்ட், ஃப்ரீ ஹார் என ரக்கட் லுக்கில் இருக்கிறார். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்போது பீனிக்ஸ் என்கிற படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.