- Home
- Gallery
- மகன் திருமணத்தில் 1000 மணிநேர உழைப்பில் உருவான 100 காரட் வைர நெக்லஸ் அணிந்திருந்த நீதா அம்பானி! இத்தனை கோடியா
மகன் திருமணத்தில் 1000 மணிநேர உழைப்பில் உருவான 100 காரட் வைர நெக்லஸ் அணிந்திருந்த நீதா அம்பானி! இத்தனை கோடியா
நிதா அம்பானி, தன்னுடைய ஆனந்தின் திருமணத்திற்கு 100 காரட் மஞ்சள் வைரத்தால் உருவாக்கப்பட்ட நெக்லஸ் அணிந்து அனைவரது பார்வையையும் கவர்ந்துள்ளார்.

நிதா அம்பானி, தன்னுடைய ஆனந்தின் திருமணத்திற்கு 100 காரட் மஞ்சள் வைரத்தால் உருவாக்கப்பட்ட நெக்லஸ் அணிந்து அனைவரது பார்வையையும் கவர்ந்துள்ளார்.
இந்த நகையை மும்பையைச் சேர்ந்த காந்திலால் சோட்டாலால் என்கிற கைவினை நகை கலைஞர்கள் குழு சுமார் 1,000 மணிநேரம் உழைப்பில் இந்த நகையை உருவாக்கி உள்ளனர்.
இதுகுறித்து கான்டிலால் சோட்டாலாலின் இன்ஸ்டாகிராம் பதிவிலும் குறிப்பிட்டுள்ளார். இந்த நெக்லஸில் சிறப்பம்சமாக பார்க்கப்படுவது, 100 காரட் மஞ்சள் வைரத்தைச் சுற்றி நுணுக்கமான உருவங்களும், பின்னர் இந்த மஞ்சள் வைரமானது 80 காரட் மரகதத்தால் வெட்டப்பட்ட சொலிடர் துளியுடன் இணைக்கப்பட்டு, ஐந்து வரிசைகளில் அற்புதமான சொலிடர்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
நிதா அம்பானியின் அழகை மேலும் மெருகேற்றியுள்ள இந்த மஞ்சள் வைரம் பாதிக்கப்பட்ட நெக்லஸுடன், அதற்க்கு ஏற்றாப்போல் முழுக்க முழுக்க வைர கற்களை கொண்டு செய்யப்பட்ட காதலினிகள், சொலிடர் ஹேர்பின்கள் (மாட்டல்), நெத்தி சூட்டி ஆகியவற்றை அணிந்துள்ளார். இது இவரது தோற்றத்தை ஒரு மகாராணி ராணி போல் மாற்றியுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
மேலும் நிதா அம்பானி அணிந்திருந்த இந்த நகையின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.400 கோடி முதல் ரூ.500 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. உலகிலேயே மிகவும் காஸ்லியான திருமணமாக ஆனந்த் - ராதிகா திருமணம் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த திருமணத்திற்காக முகேஷ் அம்பானி ரூ.5000 கோடி செலவு செய்துள்ளாராம்.
ஜியோ வேர்ல்ட் பிளாசாவில் ஆனந்த் - ராதிகா திருமணத்தில், ஒட்டு மொத்த பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர், அதே போல் நடிகை நயன்தாரா - விக்கி ஜோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பம், இயக்குனர் அட்லீ - ப்ரியா போன்ற கோலிவுட் பிரபலங்கள் மற்றும் சர்வதேச பிரபலன்களான கிம் கர்தாஷினி, ஜஸ்டின் பைபர், பில் கேட்ஸ் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் போன்றவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்த காமெடி நடிகர்! காக்க வைத்து ஏமாற்றிய பாரதி ராஜா!