Indian 2 Day 2 Collection: வாஷ் அவுட் ஆன தியேட்டர்கள்! இந்தியன் 2 படத்தின் 2-வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
கமல்ஹாசன் நடிப்பில் ஜூலை 12-ஆம் தேதி திரைக்கு வந்த இந்தியன் 2 படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் காம்போவில் 1996-ஆம் ஆண்டு வெளியான 'இந்தியன்' படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டது தான் 'இந்தியன் 2' திரைப்படம். சுமார் 28 வருடங்களுக்கு பின்னர், 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவானதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்பட்டது.
எனவே இந்தியன் 2 திரைப்படம் வெளியான ஜூலை 12-ஆம் தேதி அன்று, மிகுந்த ஆரவாரத்தோடு படத்தை வரவேற்றனர் ரசிகர்கள். விக்ரம் மற்றும் கல்கி என அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களில் நடித்திருந்த கமல்ஹாசனின் கேரியரில் இப்படம் மிக முக்கியமானதாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்றது.
'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்த காமெடி நடிகர்! காக்க வைத்து ஏமாற்றிய பாரதி ராஜா!
ஏதோ யூடியூப்பில் ஒரு வீடியோ பார்த்த ஃபீல் தான் இப்படத்தை பார்த்தல் கிடைக்கிறதே தவிர, இப்படத்தில் செண்டிமெண்ட், கதை என எதுவுமே இல்லை என்பது ரசிகர்களின் கருத்து. முதல் நாள் இப்படம் தமிழகத்தில் மட்டுமே சுமார் 13 கோடி வசூலித்தது. அதே போல் உலகம் முழுவதும் 50 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது.
Kamal Haasans Indian 2 collection report
ஆனால் இப்படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்களால் இரண்டாவது நாளே... திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைந்து வாஷ் அவுட் ஆகி உள்ளது. அதே போல் இரண்டாவது நாளில் 'இந்தியன் 2' திரைப்படம் வெறும் ரூ.16 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளதாம். நிலைமை இப்படியே போனால், ரூ.100 கோடியை எட்டுவது கூட கடினம் என கூறப்படுகிறது.
Indian 2
இந்த படத்தை பல தடங்கல்களுக்கு பின்னர் லைகா மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்ததது. சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், நெடுமுடி வேணு,பாபி சிம்ஹா, மனோ பாலா, உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். முதல் முறையாக காஜல் அகர்வால் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.